நடிகர் பொன்முடி திருமலைசாமி இயக்கத்தில் சர்வதேச திரைப்பட விருதுகளை குவித்து வரும் ‘BMW1991’

GreenVis Cinema சார்பில் வில்வங்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘BMW1991’ பையா, கருங்காலி, வி3 உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் பொன்முடி திருமலைசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்,. இந்த படத்தில் நடிகர் பொன்முடியுடன் வடசென்னை படத்தில் நடிகர் தனுஷுக்கு அம்மாவாக நடித்த நடிகை மணிமேகலை மற்றும் படத்தின் மைய கதாபாத்திரமாக மதுரையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கௌதம் நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் சாப்ளின் பாலு நடித்துள்ளார். இதுவரை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இப்படம் அனுப்பப்பட்டு 22 விருதுகளை பெற்றுள்ளது.. இன்னும் பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இருக்கிறது.. அடிப்படையில் பொன்முடி திருமலைசாமி ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட்.. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கலைக்கூடம் ஒன்றை துவங்கி மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார். இவர் முதன்முறையாக கதாநாயகனாக நடித்த…

Read More

விஷால் நடிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது

தனது சமீபத்திய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, புரட்சித் தளபதி விஷால் தனது 35வது படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு. ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாராகும் இந்த படம், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தமிழ் சினிமாவின் ஒரு சக்திவாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது, பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து, பல திறமையான திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம், புகழ்பெற்ற சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரின் கீழ் உருவாகும் 99வது படமாகும். இது தயாரிப்பு நிறுவனத்திற்கும் விஷாலுக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். விஷால் 35 படத்தை ரவி அரசு இயக்குகிறார், இது விஷாலுடன் அவரது முதல் கூட்டணியாகும். தொழில்நுட்பக் குழுவில், மத கஜ ராஜாவில் விஷாலுடன்…

Read More

ஹவுஸ் மேட்ஸ் – திரை விமர்சனம்

இது ஆவி கதை இல்லை. ஆவி கதை மாதிரியான அறிவியல் கதை. தர்ஷன் – அர்ஷா பைஜூ காதல் தம்பதிகள்.அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். அதே வீட்டில், காளி வெங்கட் அவரது மனைவி வினோதினி மற்றும் அவர்களது மகன் ஏற்கனவே வாழ்ந்து வருகிறார்கள். தன்னாலே திறக்கும் கதவு, தாமாக மூடும் பீரோ, சுவிட்ச் போடாமலே இயங்கும் டிவி என ஒரு ஆவி செய்யும் அத்தனை சேட்டைகளும் அந்த வீட்டில் நடந்தேற, நடு நடுங்கி போகிறார்கள் காதல் தம்பதிகள். அதே நேரம் ஒரு குடும்பம் வாழ்வது மற்றொரு குடும்பத்திற்கு தெரியாது. இதனால், இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் இல்லை..அறிவியல், என்பதை புரிந்து கொள்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம், காளி வெங்கட் தம்பதிகள் 2012 ஆம் ஆண்டிலும் தர்ஷன் தம்பதிகள்…

Read More

கிங்டம் – திரை விமர்சனம்

 ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகார வர்க்கத்திடம் சிக்கி படும் பாட்டை நெஞ்சம் நெக்குருக சொல்லி இருக்கிறார்கள். அதை உயிருக்கு உயிரான அண்ணன்-தம்பி பாசப் பின்னணியில் சொல்லி இருப்பது சிறப்பு . காவலர் பணிக்கு புதிதாக வந்திருக்கும் சூரிக்கு சிறுவயதில் காணாமல் போன தன் அண்ணன் சிவாவை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பது லட்சியம். பணியில் அவனது வேகத்தையும் துறு துறுப்பையும் பார்த்து ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கிறார். கொடுக்கப்பட்ட இந்த பணியை வெற்றிகரமாக முடித்து விட்டால் காணாமல் போன உன் அண்ணனை கண்டுபிடித்து தருவது என் பொறுப்பு என்று மேலதிகாரி சொன்னதை நம்பி இந்த பணிக்குள் இறங்குகிறான். அந்தத் தேடலில் அவன் அண்ணனே கிடைக்கிறான். அண்ணனை தன்னுடன் வர எவ்வளவோ கெஞ்சியும் மறுக்கிறான் அண்ணன். அதற்கும் காரணம் இருக்கிறது.அவன் சந்தித்த அண்ணன் அங்கே சாதாரண…

Read More

ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘மீஷா’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

சென்னை, 1 ஆகஸ்ட் 2025: எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான மீஷாவின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது கேரளா மற்றும் தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. ‘பரியேறும் பெருமாள்’, ‘சுழல்: தி வோர்டெக்ஸ்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் நடித்ததற்காக கதிரின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது மலையாளத்திலும் ‘மீஷா’ படம் மூலம் அறிமுகமாகிறார். இது தமிழ் ரசிகர்களுக்காக தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. டிரெய்லரின் ஆரம்ப காட்சிகளில் கதிரின் நடிப்பு பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளதால், தமிழ் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்புகள் உயர்ந்துள்ளன. யூனிகார்ன் மூவீஸ் பேனரின் கீழ் சஜீர் கஃபூர் தயாரித்த ‘மீஷா’ திரைப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ (குட் பேட் அக்லி, பீஸ்ட்), ஹக்கிம் ஷா, ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் முரளி, சுதி கோபா, உன்னி லாலு…

Read More

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் ‘ஜூடோபியா 2’ படத்தின் புதிய டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் சாகசப் படமான ‘ஜூடோபியா 2’-ன் புதிய டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜூடோபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வழக்கை முறியடித்த பிறகு, புதுமுக போலீஸ்காரர்களான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர், சீஃப் போகோ (இட்ரிஸ் எல்பாவின் குரல்) நெருக்கடி காரணமாக ஒன்று சேர்கின்றனர். ஆனால், அவர்களின் பார்ட்னர்ஷிப் அவர்கள் நினைத்த அளவுக்கு உறுதியானதாக இல்லை என்பதைக் கண்டறிந்தனர். விஷப் பாம்பின் வருகையுடன் இணைக்கப்பட்ட ஒரு மர்ம பாதையில் அவர்கள் தங்களைக் கண்டுபிடிக்கும்போது, அவர்களின் பார்ட்னர்ஷிப் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. ‘ஜூடோபியா 2’ கேரி டி’ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்), நிப்பிள்ஸ்…

Read More

விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் ‘தலைவன் தலைவி’ படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்

வீனஸ் பிக்சர்ஸ் திரு டி. கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜனின் வழிகாட்டுதலோடு நான்காவது தலைமுறையாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜனும் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்து வருகின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பான குடும்ப திரைப்படம் ‘தலைவன் தலைவி’ உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில், முன்னணி நட்சத்திரங்களுடன் சத்யஜோதி குடும்பம் இணைந்தாலே பிளாக்பஸ்டர் வெற்றியில் தான் முடியும் என்பது தசாப்தங்கள் மற்றும் தலைமுறைகள் தாண்டி மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது. மக்கள் திலகம்’ எம்ஜிஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’…

Read More

கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது… மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது.    விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது: “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி…

Read More

ரசிகர்களே தயாராகுங்கள் ‘மாமன்’ ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது.

*~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. ~* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும்…

Read More

‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து ஹரிசரண்- சச்சின் சுந்தரின் மனதை வருடும் மெல்லிசை பாடல் ‘ரதியே ரதியே…’ வெளியாகியுள்ளது!

புல்லாங்குழல் இசையில் Male Solo பாடல்கள் எப்போதும் நம் ஆன்மாவில் ஊடுருவி காலத்திற்கும் மறக்க முடியாத பாடலாக அமையும். அந்த வரிசையில் ஹரிசரண்- சச்சின் சுந்தரின் ரொமாண்டிக் சிங்கிள் ‘ரதியே ரதியே…’ பாடல் விரைவில் வெளியாகவுள்ள ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து வெளியாகி இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ளது. சச்சின் சுந்தர் திரைத்துறைக்கு புதியவராக இருந்தாலும் இசைக்கு மெருகூட்டியுள்ளார். ‘ரதியே ரதியே…’ பாடல் மெல்லிசையாக மட்டுமல்லாது ஆழமான உணர்வையும் கொடுத்துள்ளார். ஹரிசரண் குரல் மனதை வருடும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் கதை ஆழமானது. இன்றைய சமூகத்தில் அந்நியப்பட்ட மனதுடன் இருப்பவர் தான் கதாநாயகன். அவருக்கு இணையான, தர்க்கரீதியான வழக்கறிஞர் உண்மைகள் மற்றும் பகுத்தறிவு மூலம் உலகைப் பார்க்கிறார். ‘ரதியே ரதியே…’ பாடல் இந்த மாறுபட்ட உலகங்களுக்கு இடையே ஒலி பாலமாக மாறி, அவர்களின்…

Read More