இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமாட்டிக் உலகின் கிளிம்ப்ஸை இந்த டிரெய்லரில் கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். ‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ படத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் புதிய சாகசங்களுக்காக மீண்டும் பண்டோரா உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார். மரைன் நாவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நாவி…
Read More1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !!
இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன் சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. PGP. ENTERPRISES சார்பில் P.G.பிச்சைமணி தென்னிந்தியா முழுவதும் வெளியிடுகிறார். இயக்கம்:…
Read Moreஅமீர் கான் தனது புதிய வெற்றி திரைப்படமான ‘சித்தாரே ஜமீன் பர்’திரைப்படத்தை YouTube-இல் வெளியிடுகிறார் !!
திரைப்படங்களை அனைவரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில், அதிரடியான புதிய முயற்சியாக, அமீர் கான் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை, YouTube-இல் Movies-on-Demand முறையில் வெளியிடுகிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில், திரைப்படத்தை பார்த்து மகிழ முடியும். இந்த புதிய அதிரடி முயற்சி, உலகளாவிய அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதிய வழிகாட்டியாகும். “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை YouTube-இல் மட்டுமே பார்க்க முடியும், வேறெந்த டிஜிட்டல் பிளாட்ஃபாரங்களிலும் இப்படத்தை காண முடியாது. அமீர் கான் இன்று தனது சூப்பர்ஹிட் திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீட்டை, ஆகஸ்ட் 1, 2025 முதல் YouTube-இல் பிரத்தியேகமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த புதிய அதிரடி நடவடிக்கை, 2025 இன்…
Read Moreஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஆன்மீக திரைப்படம் “ ராகு கேது “ !!
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழின் புகழ்மிகு இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்களுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது. ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி மேடம் துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தினை அனைத்து…
Read Moreவிவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘உழவர் மகன்’.
இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படம்.ஏற்கெனவே இவர் ‘தோனி கபடி குழு’ ‘கட்சிக்காரன் ‘ ஆகிய படங்களை இயக்கியவர் .அந்த படங்களைப் போலவே இதிலும் ஒரு சமூகக் கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். இந்த ‘உழவர் மகன்’ படத்தை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பு நா. ராசா. இப்படத்தில் இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு இந்த அமைப்பின் மூலம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம்.தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறத இந்தப் படம். நாள்தோறும் இந்தத் தொழில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாய நிலங்கள் களவாடப்படுகின்றன. வெவ்வேறு தொழில்களுக்கு இரையாக்கப்படுகின்றன. உயிர்த்தொழிலான பயிர்த் தொழிலை மீட்க செய்ய என்ன செய்ய வேண்டும்? அது…
Read Moreஇயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு
சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநார் கதிர், பாடகர் அந்தோணி தாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன், தயாரிப்பாளர் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். நடிகர் சத்யராஜ் இயக்குநர் வேலு பிரபாகரனின் படத்தை திறந்து வைத்து பேசும் போது வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் தன்னை சிந்திக்க தூண்டியதாகவும், தன்னை பகுத்தறிவாளனாக மாற்றியதாகவும், தான் பகுத்தறிவாளனாக மாறியதால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் வேலு பிரபாகரன் மருத்துவமனையில் இருந்த…
Read Moreதேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு
பல வெற்றிப்படங்களை தயாரித்தும், விநியோகித்தும் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுபாளர்கள் பல புது முகங்களை அறிமுகம் செய்த பெருமை JSK நிறுவனத்தையே சாரும். குறிப்பாக, தேசிய விருது வென்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் போன்ற படங்களை தயாரித்துள்ளது JSK நிறுவனம். இந்த நிறுவனம் சார்பாக தற்போது, 2023ம் ஆண்டு தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் வரும் திங்கட்கிழமை (28/07/2025) முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. ‘புதுமைப்பித்தன்’, ‘லவ்லி’ படங்களை இயக்கி, ‘அநீதி’, ‘தமைச்செயலகம்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.கே.ஜீவா இப்படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளரக மட்டுமல்லாமல், நடிகராகவும் மக்கள் மத்தியில் பரிட்சியமானவர் ஜெ.எஸ்.கே. தரமணி, பேரன்பு, கபடதாரி, அநீதி, ப்ரெண்ட்ஷிப், வாழை போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான…
Read More‘ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்
‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்… பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் – ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான…
Read More‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதைத் தாண்டி புதுவிதமாக இருக்கும்”- ஜிவி பிரகாஷ்குமார்!
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தற்போது மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. படம் குறித்து ஜிவி பிரகாஷ்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “’பிளாக்மெயில்’ படத்தின் ஃபைனல் அவுட்புட் பார்த்த பிறகு, மு. மாறன் ஒரு கதை சொல்லியாகவும் இயக்குநராகவும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து…
Read Moreமக்கள்தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் மற்றும் டீசர் வெளீட்டு விழா
மக்கள்தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் மற்றும் டீசர் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக #விண்ஸ்டார்விஜய் மற்றும் மும்பை மாடல் அழகி சைத்ரா, பெங்க ளூருரை சேர்ந்த ரீனா உள்பட பதினெட்டு புதுமுகங்கள் நடிக்கின்றனர். சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் வருகி றார். சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம் உள்ள இளைஞன் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது, மேடையில் நடிப்பது என்று இருக்கிறான். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவது, தாயம் விளையாடுவது, அத்தை பெண்களுடன் சுற்றுவது என்று பொழுதை கழிக்கிறான். அவன் சினிமாவில் நடிக்க எடுத்த முயற்சி என்ன? அதில் வெற்றி பெற்றானா? என்பது கதை. இந்த படத்தை எச்.முரு கன் கிரீன் சேனல் மூவீஸ் தயாரிக்கிறது. மும்பை, பெங்க ளூரு, திருச்சி, மதுரை, ஏற்காடு, கரூர், சென்னையில் படப் பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை,…
Read More