ஆல்பங்கள், தனிப்பாடல்கள் புதுமையாக இருக்கும் போது கவனம் பெறுகின்றன. தற்காலத்தில் இவை திரை நுழைவுக்கு ஒரு படிக்கட்டாகவும் அமைகின்றன.மாஸ் ரவியின் ஒளிப்பதிவு இயக்கத்தில் ‘தேவதாசின் தேவதை’ என்றொரு தலைப்பில் காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது.ரம்யா ,கவி சுஜய், ஆனந்த் ரெய்னா இதில் நடித்துள்ளனர். தயாரிப்பு ஷீரடி ஓம் சாய்ராம்,ட்ராக் மியூசிக் இந்தியா வெளியிட்டுள்ளது. ‘தூக்கத்தை தூக்கிட்டுப் போனாளே, தூரத்தில் நின்றென்னைக் கொன்றாளே ‘ என்று தொடங்கும் இந்த ஆல்பம் பாடலை இயக்கியுள்ள மாஸ் ரவி சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’,விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர். இந்த மாஸ் ரவி ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார் அப்படம் வெளிவர உள்ளது.மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து இயக்கி வருகிறார். பாடலாசிரியர் கவி சுஜய்,…
Read Moreசூரியின் ‘மாமன்’ பட டிரெய்லர் வெளியானது
Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது. இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக சூரி, பாசத்தை, ஏக்கக்தை, வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அவரின் நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக இப்படம் இருக்கும் என்பதை இந்த டிரெய்லர் உறுதி செய்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் டிரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தின் கதையை நடிகர் சூரி எழுதியுள்ளார். விலங்கு சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த…
Read Moreரெட்ரோ – திரை விமர்சனம்
1960-களில் தூத்துக்குடி நகரில் தாதாவாக வலம் வந்த ஜோஜு ஜார்ஜ், கடத்தல் தொழிலிலும் தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியவர். இவரது வேலைக்காரர் ஒருவர் எதிரிகளால் கொல்லப்பட, தப்பிப் பிழைக்கும் அவரது மூன்று வயது மகனை ( சூர்யா ) தாதாவின் மனைவி வளர்க்கப் பிரியப்படுகிறார். அரைகுறை மனதுடன் அதற்கு சம்மதம் தருகிறார் தாதா. இப்படி வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்படும் சூர்யா, வளர்ப்பு தந்தையின் கடத்தல் தொழிலையும் கற்றுக் கொள்கிறார்.இதற்கிடையே சிறு வயது முதலே அவ்வப்போது தன்னுடன் நட்பு பாராட்டி வந்த பூஜா ஹெக்டே மீது சூர்யாவுக்கு காதல் வருகிறது. ஆனால் காதலி யோ , பழைய வாழ்க்கையை அடியோடு தலை முழுகி விட்டு வந்தால் மட்டுமே திருமணம் என்கிறார். சூர்யா அதற்கு சம்மதம் சொல்ல, இப்போது அந்த காதல் மணமேடை வரை வந்திருக்கிறது. இதற்கிடையே இப்படி எல்லாம்…
Read Moreடூரிஸ்ட் பேமிலி – திரை விமர்சனம்
இலங்கை வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ஏற்கனவே அங்கே கடன் சுமை, அதோடு உச்சபட்ச விலைவாசி இரண்டும் அந்தக் குடும்பத்தை வாட்டி எடுத்த நிலையில் தமிழகத்துக்கு பிழைக்க வருகிறது அந்த குடும்பம். அவர்கள் வந்த தினத்தில் ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ… இலங்கையில் இருந்து வந்த தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகிறது காவல் துறை. அதனால் அவர்களை தீவிரமாக தேடத் தொடங்க… அந்த இலங்கை குடும்பம் காவல்துறை கண்ணில் சிக்கியதா? தப்பியதா? என்பது படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ். இலங்கை குடும்பத்தின் தந்தையாக சசிகுமார், தாயாக சிம்ரன், மகன்களாக மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ். இந்தப் பொருத்தமான பாத்திரத் தேர்வே தொடக்கம் முதலே படத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது. அப்பா கேரக்டரில் ரொம்பவே அடக்கி வாசித்துள்ளார் சசிகுமார். அவருக்கும் மூத்த மகன் மிதுனுக்குமான…
Read Moreசார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. பிரபல நட்சத்திர நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இருவரும், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் KK ராதாமோகன் தயாரிக்க, லக்ஷ்மி ராதாமோகன் வழங்கும், மிக முக்கியமான பான் இந்தியா திரைப்படமான, “போகி” — #Sharwa38இல் முதல் முறையாக இணைந்துள்ளனர். 1960 களின் பரபரப்பான பின்னணியில் அதிரடி ஆக்சனுடன், விறுவிறுப்பும் உணர்ச்சியும் நிரம்பிய ஓர் புதிய அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க் எனப் பெயரிட்டப்பட்ட அசத்தல் அறிமுக வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க்…
Read Moreதிரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்
ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘லெவன்’ முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு…
Read Moreகலகலப்பான ரோம் காம் திரைப்படம் “மைனர்” கோலாகலமாக துவங்கியது!!
Arabi production & Viyan ventures மற்றும் MayDay Productions சார்பில் இணைந்து தயாரிக்க, ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் திரைப்படம் “மைனர்”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது. இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பது தான் இப்படத்தின் மையம். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான். அந்த காதல் மீண்டும் சேர்ந்ததா? இருவரும் இணைந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தில் இலங்கை ராப் பாடகர் வாகீசன் நாயகனாக நடிக்க, பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடிக்கிறார். சார்லி, செண்ட்ராயன், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு…
Read Moreமக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்
இயக்குநர் பூரி ஜெகன்னாத்- ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்தத் திரைப்படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார் இணைந்திருக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது. இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார்.…
Read Moreசசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !!
நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல்…
Read MoreSun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது!!
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது. இந்த சாதனையில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏனெனில் Sun TVயின் YouTube சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன! இதில் Sun TVயில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன. இதற்கு மேலாக, Sun Pictures தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் இந்த பிரபலமான நெட்வொர்கின் YouTube சேனலில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன. Sun TV YouTube சேனலில் பல…
Read More