அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்கும் ‘மைனே பியார் கியா’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹிர்து ஹாரூன், பிரீத்தி முகுந்தன், அஸ்கர் அலி ,மிதுன், அர்ஜு , ஜெகதீஷ், முஸ்தபா மற்றும் ஜெரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மந்தாகினி’ எனும் படத்தை தொடர்ந்து ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் இது. ‘முரா’ எனும் வெற்றி படத்தினை தொடர்ந்து நடிகர் ஹிர்து ஹாரூன் ‘மைனே பியார் கியா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஸ்டார்’ எனும் தமிழ் படத்திலும், ‘ஆசை கூடை’ எனும் சூப்பர் ஹிட்டான வீடியோ ஆல்பத்திலும் நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக…
Read Moreவிஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் வெளியிட்ட ஆரி அர்ஜுனனின் “4த் ஃப்ளோர்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!
முன்னணி நட்சத்திரங்கள் MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படம் “4த் ஃப்ளோர்”. தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் ஆகியோர் இப்படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளனர். ஆரி அர்ஜுனனின் நடிப்பில் வித்தியாசமான களத்தில் அதிரடியாக வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர்…
Read Moreஅழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”
‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் K.P.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை. கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் K.P.தனசேகர். ஒளிப்பதிவு R.H.அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி S.R.ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், PRO கோவிந்தராஜ். தயாரிப்பு K.P.தனசேகர், பூங்கா R.ராமு…
Read Moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் – பெப்சி அமைப்பு இடையே நிலவும் பிரச்சினை தொடர்பாக போலீசில் புகார்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதில் 09.04. 2025 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை பற்றி மீண்டும் அவதூறாக பேசியுள்ளார் அது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக தாய் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்க வேண்டியும் தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாகவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உள்ள எல்லா சங்கங்களிலும் அதிருப்தி அடைந்திருக்கும் பல உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளர்…
Read Moreசான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்!
பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்! இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் இந்திய திரைவானின் உச்சநட்சத்திரமான கமல்ஹாசன். இந்தச் சந்திப்பைக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன், சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. க்யூரியாசிடி கில்ஸ் த கேட்…
Read Moreகுட் பேட் அக்லி – திரை விமர்சனம்
மும்பையையே ஆட்டி வைத்த டான் ஏ.கே. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் நேர்கிறது. அழகான பெண்ணுடனான காதல் திருமணத்தில் முடிகிறது. மகன் பிறக்கிறான். இப்போது மனைவியின் ஒரே வேண்டுகோள், டான் வாழ்க்கையை தூக்கி போட்டுவிட்டு சரணடையுங்கள். தண்டனை காலம் முடிந்து திரும்பி வரும்போது அமைதியான வாழ்க்கை வாழலாம் என்பது தான். டானுக்கும் அது சரி யெனப்பட, பிறந்த குழந்தையின் முன்பு அவனது 18-வது வயதில் சந்திப்பதாக உறுதி கூறிய பிறகு போலீசில் சரணடைகிறார். 18 வருட தண்டனை முடிந்து வீடு வரும்போது பழைய எதிரிகள் செய்த சதியால் போதை பொருள் உபயோகித்த குற்றத்துக்காக இப்போது மகன் ஜெயிலில். மகன் குற்றவாளி அல்ல என்று நிரூபித்து தண்டனையிலிருந்து விடுபட வைக்க வேண்டும். இந்த சதிக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை ‘களை’ எடுக்க வேண்டும். இதற்காக மீண்டும்…
Read Moreமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !!
கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான கதைத் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இப்படத்தின் கதாபாத்திரத்தாலும்,…
Read Moreபிரித்திவிராஜின் #NOBODY படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!
முன்னணி நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள #NOBODY திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள அழகிய வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இனிதே துவங்கியது. பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY திரைப்படத்தினை சமீர் அப்துல் எழுதியுள்ளார். புகழ்பெற்ற முன்னணி படைப்பாளி நிசாம் பஷீர் இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில், அற்புதமான நடிகர்களின் நடிப்பில், அழகான திரை அனுபவமாக உருவாகிறது. இப்படத்தை பிருத்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா மற்றும் சி.வி. சாரதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். அனிமல் திரைப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னனி தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் #NOBODY ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.…
Read Moreதமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மலையாளத்திலும் கன்னடத்திலும் வெளியாகும் ” EMI ” மாதத்தவணை “
சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் 4 ம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ” EMI ” மாதத் தவணை ” படம். பேரரசுவின் உதவியாளர் சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்த இந்த படம் தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் இன்று இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்திருந்தார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், செந்திகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர்.
Read Moreஃபேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES)
கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். T. ராஜவேல் எழுதி , இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தை PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் ( SOUTH STUDIOS ) படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். தற்போது இத்திரைப்படத்தை பார்த்த முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படக்குழுவை வாழ்த்தி, பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் உலகம் முழுவதும் விரைவில் வெளியிட உள்ளார்.
Read More