ஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகும் ‘மிராய்!

ஃபேண்டஸி- ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள ‘மிராய்’ அக்டோபர் 10 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. எமோஷன், புராணம் மற்றும் ஆக்‌ஷன் ஆகியவற்றுடன் இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் படம் இருக்கும். விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள ‘மிராய்’, மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது. அற்புதமான காட்சியமைப்புகள், திறமையான நடிகர்கள் மற்றும் ஆழமான கதையுடன், ஜியோஹாட்ஸ்டாரில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-சவுத் டிஜிட்டல் வெளியீடுகளில் ஒன்றாக ‘மிராய்’ இருக்கும். இந்தப் படத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஜகபதி பாபு, ஜெயராம் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ராணா டகுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்க, நடிகர்…

Read More

நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ காதல், பொய் மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகிய மூன்றின் ஐந்து அடுக்குகளை ஆராய்கிறது!

விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது. இந்தத் தொடரில் ரகசியம், சந்தேகம் மற்றும் பல வகையான உணர்வுகளும் காட்டப்பட்டிருக்கிறது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தத் தொடர் சைபர்கிரைம் மிஸ்ட்ரியுடன் குடும்பங்களின் ஆழமான உணர்வுகளையும் பிரதிபலித்திருக்கிறது. நாம் பாதுகாப்பு எனக் கருதும் இடமே நமக்கு ஆபத்தாக மாறும்போது நம்பிக்கை, ஏமாற்றுதல் மற்றும் வாழ்தல் எப்படி சிக்கலாகிறது என்பதைப் பற்றிய கதையாகவும் இது இருக்கும். இந்த நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தொடர் இறுதிவரை உங்களை கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ‘தி கேம்’ தொடரின் உண்மையான பவர் பிளேயர் ஷ்ரதா ஸ்ரீநாத் தான். அவர் கதையை…

Read More

வரவேற்பைக் குவித்து வரும் “ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக்

MISHRI ENTERPRISES திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”. நேற்று வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஊரை விட்டு ஓடிப்போகும்…

Read More

லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) – சாதனை

சென்னையில் லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) இதுவரை 100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனைப் படைத்துள்ளது, ஏழு வருடங்களாக தொடர்ந்து LIGHTZ ÖN AWARDS நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், பிளாக் பட இயக்குநர் பாலசுப்பிரமணி, பாம் திரைப்பட இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் யாத்திசை திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் நடிகர் வினோத் கிஷன் மற்றும் நடிகர்-இயக்குநர் ஆனந்த் ராம் ஆகியோர் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகளை கொடுத்து வாழ்த்துகளை வழங்கினார். இதுவரை பல புதிய இயக்குநர்களை LIGHTZ ÖN AWARDS உருவாக்கியுள்ளது. சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமை உள்ள இளைஞர்கள் சினிமாவிற்குள் வர காரணமாக LIGHTZ ÖN இருக்கிறது. புதிதாக இரண்டு…

Read More

புதுமையான சைக்கலாஜிகல் டிராமா  திரில்லர் “கேம் ஆஃப் லோன்ஸ்” அக்டோபர் 17 திரைக்கு வருகிறது!!

JRG Productions சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது. தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இந்த மையக்கருவை வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. வழக்கமான பாடல், ஃபைட், காமெடி என எந்த அம்சங்களும் இல்லாமல் முழுக்க வித்தியாசமான திரைக்கதையில், சுவாரஸ்யமான வகையில் 90 நிமிட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் அபிஷேக்…

Read More

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பின்னணி பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’!

‘டியூட்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்காகியுள்ளது. மேலும், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முந்திய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ‘டியூட்’ படத்திற்கு சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்காரி’ பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடியிருப்பதன் மூலம் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். பாடல் வெளியான ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை அடுத்து ஆல் ரவுண்ட் எண்டர்டெயினர் என்பதை நிரூபித்துள்ளார் பிரதீப். சஞ்சய் செம்வியின் எனர்ஜிட்டிக்கான பாடல் வரிகளும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கண்ணைக் கவரும் பாடல் உருவாக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. திரையரங்குகளில்…

Read More

சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” !!

தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது. அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் முத்திரை…

Read More

”’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!

டிஸ்னியின் வெளிவரவிருக்கும் அறிவியல் புனைக்கதை திரைப்படமான ’டிரான்: ஏரஸ்’ இந்த வாரம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், ‘சரியான நேரத்தில் வெளி வருவதாக’ முன்னணி நடிகர் ஜாரெட் லெட்டோ தெரிவித்துள்ளார். லண்டன் திரையிடலின் போது, டிஜிட்டல் ஸ்பை பத்திரிகையிடம் ஜாரெட் கூறுகையில், “செயற்கை தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாக இருக்கும் வேளையில் இந்தப் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும். இந்த படத்தில் நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்யத் தொடங்கினோம். நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராகவோ அல்லது கல்வியாளராகவோ இல்லாதபட்சத்தில் அந்தசமயத்தில் பெரிதாக யாரும் செயற்கை தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசவில்லை. இப்போது ஏஐ தொழில்நுட்பம் பற்றி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எல்லோரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். செயற்கை தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது.…

Read More

ரஜினி ரசிகர்கள் காலை 6.30 மணிக்கு கேட்கும் ” மனிதன்” படக்காட்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம் ஏ.வி. எம். நிறுவனம் தயாரித்த மனிதன் படம். மனிதன் திரைப்படம் 38 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வைரமுத்துவின் வைரவரிகளில் சந்திர போஸ் இசையில் வெளி வந்த படம்தான் ” மனிதன்”. ரஜினி திரை உலகிற்கு வந்து 50 வருட பொன் விழாவான இந்த வருடத்தில் ” மனிதன்” திரைப்படம் வருவதால் அவருடைய ரசிகர்கள் மிகப் பெரிய கொண்டாட்டமான தீபாவளியாக நினைக்கிறார்கள். அக்டோபர் 10 ஆம் தேதி ” மனிதன்” படம் ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. அதை அடுத்து பெங்களூருவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் பி.என். புராவில் உள்ள ” புஷ்பான்ஜலி ” திரையரங்கிற்கு…

Read More

தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான TVAGA உடன் இணைந்து முக்கிய நிகழ்வை ஒருங்கிணைப்பதன் மூலம் பொழுதுபோக்குத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது

ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய அங்கமான புரொடியூசர் பஜார் தனது பயணத்தை தொடங்கிய நாள் முதலே தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்திய திரைத்துறை வர்த்தகத்தை செம்மைப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் வெற்றிப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025ன் முக்கியப் பகுதியான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டை புரொடியூசர் பஜார் நடத்தவுள்ளது. ஆங்கிலத்தில் பி2பி (B2B) என்று அழைக்கப்படும் தொழில்துறை நிகழ்வான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட், இந்திய திரைப்பட மற்றும் ஏவிஜிசி (அனிமேஷன், வி எஃப் எக்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறைகளுக்கான பிரத்யேக வர்த்தக மையமாக செயல்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில்…

Read More