“முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு என்னுடைய ‘டீசல்’ படம் வெளியாவதில் மகிழ்ச்சி”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

வளர்ந்து வரும் வெற்றிகரமான இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 17 அன்று ‘டீசல்’ படம் வெளியாக இருக்கிறது. துள்ளலான ஹிட் பாடல்கள், கண்ணைக் கவரும் விஷூவல் என படம் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. சமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தஸ்வாவின் புதிய கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ஹரிஷ் கல்யாண். நிகழ்வில் ஊடகங்களை ஹரிஷ் கல்யாண் சந்தித்து பேசியதாவது, “நல்லதொரு கமர்ஷியல் எண்டர்டெயினர் படமாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ’டீசல்’ அமையும். முதன்முறையாக தீபாவளி பண்டிக்கைக்கு என்னுடைய படம் வெளியாவதால் நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிச்சயம் இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம். ரசிகர்களுடன் சேர்ந்து இந்த தீபாவளிக்கு படம் பார்க்க நானும் ஆவலுடன் உள்ளேன்” என்றார். சென்னை தஸ்வா ஸ்டோர்…

Read More

“பூங்கா” படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்!

ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, “பூங்கா” படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்! அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை. கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை,…

Read More

நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்’~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படம் இயக்கி இருப்பவர் ‘ட்யூட்’ பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார், “என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் ‘ட்யூட்’ படத்தின் கதை சொன்னேன். அவர்களுக்கும் கதை உடனே பிடித்து போனதால் பட வேலைகள் தொடங்கினோம். ‘ட்யூட்’ படத்தின் கதை எழுதத் தொடங்கியபோதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன். அதில் பிரதீப்…

Read More

இந்தியாவின் நம்பர் 1 பட்டாசு பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள உலகின் முதல் விதைப்பட்டாசான சீட்ஸ்டார் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது!

இந்த தீபாவளியில் சூழலுக்கு மாசு விளைவிக்காத விதைகளாக மாறும் பட்டாசுகள் வெடித்து, பசுமையான எதிர்காலத்தை சந்ததிகளுக்கு விட்டு செல்வோம். 84 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் முன்னணி பட்டாசு உற்பத்தியாளர்களில் ஒன்று. 1937 ஆம் ஆண்டு பிரீமியர் பட்டாசுகளாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தரமான மற்றும் புதுமையான பட்டாசு உற்பத்தியாளராக வளர்ந்துள்ளது. பாரம்பரியத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து இணைத்து, கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்கிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்து அதாவது, 1945 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 84 ஆண்டுகளாக இயங்கி வரும் வடிவேல் பைரோடெக்ஸ், உலகின் புரட்சிகரமான கண்டுபிடிப்பான ‘பசுமை பட்டாசு’ வகையை சேர்ந்த சீட்ஸ்டார் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பட்டாசு வெடித்து கொண்டாடுவது மட்டுமல்லாது, கொண்டாட்டங்களுக்குப் பிறகு அவை தாவர…

Read More

காந்தாரா அத்தியாயம் 1 – திரை விமர்சனம்

அதிகார வர்க்கத்திற்கும் தெய்வபக்தியுடன் வாழும் ஆதி பழங்குடிகளுக்கும் நடக்கும் மோதலைப் பற்றி பேசிய காந்தாரா திரைப்படம் 2022-ல் வெளிவந்து பெரும் வெற்றியை அரவணைத்துக் கொண்டது. அதன் நீட்சியாகவே இந்தப் படம். அதாவது இரண்டாம் பாகத்தின் முன்பாகம் இது. இதிலும் குலதெய்வம் இடம் பிடிக்கிறது. பக்கத்து தேசத்தில் உள்ள மன்னனின் பேராசை இருக்கிறது. தங்கள் பக்க நியாயத்துக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள். இது எல்லாவற்றுக்கு மேலாக மிரட்டும் கிளைமாக்ஸ் இருக்கிறது. தங்கள் காட்டில் விளையும் பொருட்களை சந்தையில் விற்று பணம் பார்க்கும் மக்களுக்கு பக்கத்து தேச அரசனால் தொல்லை ஏற்படுகிறது. இதனால் அந்த மக்களின் தலைவன் தொல்லை கொடுத்த படை வீரர்களை பெண்டெடுத்து அனுப்புகிறான். இதன்பிறகு மன்னர் சமாதான பேச்சு வார்த்தை நடத்துகிறார். சமாதானம் என்ற பெயரில் சதி நடப்பதை தெரிந்து கொண்ட காட்டுப்பகுதி மக்கள் தலைவன் ஆடும்…

Read More

கும்கி 2: மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ஒரு கதை!!

கும்கி படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது, மாபெரும் வெற்றியையும் பெற்றது. இன்றும் அது அன்புடன் நினைவுகூரப்படுகிறது. அந்த மரபைத் தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 மூலம், அதே உணர்ச்சிபூர்வமான தீவிரத்தையும், வலிமையான கதையையும், மறக்க முடியாத தருணங்களையும் இப்படம் கொடுக்கும் என்று வாக்குறுதி தருகிறார். மீண்டும் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் கும்கி 2 , ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி , தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன்…

Read More

“போர போக்குல*” இசை வீடியோ வில் இசைஞானி இளையராஜா பாடிய பாடலை விண்வெளி நாயகன் *கமலஹாசன்* அவர்கள் வெளியிட்டுள்ளார்

இரண்டு சிறப்பு பதிப்புகளாக வெளியான இப்பாடலை இசைஞானி *இளையராஜா* அவர்கள் குரலிலும் *யதீஷ்வர் ராஜா* அவர்களின் குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது இப் பாடலுக்கு இசை – *யதீஷ்வர் ராஜா * இரண்டு தலைமுறைகளின் இசை மேதைகள் இணைந்திருக்கும் அபூர்வ தருணம் இது. இந்த வீடியோவில் நடிகர் ரகுவரன் தம்பி சுரேஷ் (செட் பயர் ஸ்டுடியோ) அவர்களின் மகன் ரித்திஷ் நடிக்க அவருக்கு இணையாக ஃபைட் கிளப் திரைப்படத்தில் நடித்த மோனிஷாவும் நடித்துள்ளனர் இப் பாடலின் வரிகளை தமிழ் சினிமாவில் தனக்கான தனித்துவமான எழுத்துக்களால் கவனம் பெற்ற விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இசை வீடியோவுக்கு இயக்கம் செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் பி.கே, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முன்னாள் உதவியாளர். புதுமையான காட்சியமைப்புடன் அவர் இந்த கலைப்பணியை உருவாக்கியுள்ளார். பல்வேறு திறமைகளை ஒருங்கே கொண்டு வந்திருக்கும் *போர…

Read More

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம்  (அக்டோபர் 2) மறுவெளியீட

செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேகமான முன்னோட்ட காட்சிகள் மற்றும் ரசிகர்களுக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ஸ்பெஷல் மெசேஜ்! ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. படம் தொடங்குவதற்கு முன்பாக அகாடெமி விருது வென்ற இயக்குநர் ஜேம்ஜ் கேமரூனின் தனிப்பட்ட குறுஞ்செய்தியும் ரசிகர்களுக்கு திரையிடப்படும். இதில் அவதாரின் அடுத்த அத்தியாயத்தின் திரைக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளையும் பார்ப்பார்கள். சல்லி குடும்பத்துடன் ஸ்பைடர் விண்ட்ரேடர்ஸைச் சேர்ந்த கம்பீரமான மெடுசாய்டுகள், பரந்த ஜெல்லிமீன் போன்ற உயிரினங்களில் பயணிப்பதில் இருந்து இந்த பிரத்யேக காட்சி தொடங்குகிறது. அவர்களுடன் ட்லாலிம் குல தலைவரான டேவிட் தெவ்லிஸின் பெய்லாக்…

Read More

நடிகர் வெற்றி – “என்டர் தி டிராகன்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் புதிய படைப்பாக உருவாகி வரும் “என்டர் தி டிராகன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்திக் இணைந்து வெளியிட்டனர். இந்தப் படத்தை சேலம் வேங்கை கே. அய்யனார் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் ராட்சகன் ஸ்ரீதர் – பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தவர் – தற்போது தனது முதல் திரைப்பட இசை முயற்சியாக என்டர் தி டிராகன் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்கியுள்ளவர் பார்த்திபன். இவர், முன்னதாக நடிகர் வெற்றி நடித்த படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தற்போது தனியாக இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் நாயகியாக பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளார். இவருக்கு இது முதலாவது சினிமா வாய்ப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்டில் சரவணன் மற்றும் கார்த்திக் ஆகியோர்…

Read More

வள்ளலார் வருவிக்க உற்றநாள்! கவர்னர் மாளிகையில் சி.சத்யா இசையில் பாடல் அரங்கேற்றம் நிகழ்த்தும் ‘ஆட்டிசம் சைல்ட்’ மானஸி.

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் வருவிக்க உற்ற நாளை (அக்டோபர், 5) உலக ஒருமைப்பாட்டு தினமாக உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு, அவருடைய 202ஆவது வருவிக்க உற்றநாளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பிரபல இசையமைப்பாளர் சி. சத்யா தலைமையிலான Sound of Sanmarga இசைக்குழுவின் சிறப்பு இசை நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தான் இசையமைத்த வள்ளலார் பாடல்களை இசையமைப்பாளர் சி. சத்யா வழங்க உள்ளார் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளார். மேலும், இசையமைப்பாளர் சி. சத்யாவின் இசையமைப்பில், ஆட்டிசம் சைல்ட் (Autism Child ) பாடகி மானஸி வள்ளலார்…

Read More