அதிரடியான முதல் பார்வை வெளியீடு மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் சமீபத்தில், படத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக்…
Read More*‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்*
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘பரீட்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ், இப்படத்திற்காக பாடிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் ஹாரூண் கூறும்போது,…
Read Moreஇந்தியாவில் ரூபாய் 1,000 கோடியை நெருங்கும் துரந்தர் பழிவாங்கல்!
2-வது வார முடிவில் ரூபாய் 950 கோடியை (இந்திய நெட் வசூல்) கடந்தது! உலகளவில் ரூபாய் 1,500 கோடி வசூலித்து சாதனைபயணத்தை தொடர்கிறது! ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை தொடர்கிறது. 2-வது வார முடிவில் இதுவரை இல்லாத வேகத்தில் ரூபாய் 961 கோடி (நெட்) வசூலித்து, இந்தியாவில் ரூபாய் 1,000 கோடி என்ற இமாலய மைல்கல்லை நெருங்கியுள்ளது. உலகளவிலும் திரைப்படத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை உலகளவில் ரூபாய் 1,501 கோடி பிரம்மாண்ட வசூலை குவித்து சர்வதேச அளவிலும் தனது அசாதாரணமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. வெறும் இரண்டு வாரங்களில், இந்திய சினிமாவின் உலகளாவிய அளவுகோல்களை மாற்றியமைத்து, அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது. பிரம்மாண்டமான ஓப்பனிங்…
Read Moreவிமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது — அது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம். தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் ‘வடம்’, எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி நிறைந்த உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் உயிர்ப்பிக்கிறது. இந்த மண்ணின் வாசனைமிக்க கதையின் மையத்தில் நிற்பது நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு சக்தி – பாண்டிமுனி. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, அறுக்கப்படும் நிலையிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்ந்த அதிசயமான பயணத்தை வெளிப்படுத்துகிறது. வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பாண்டிமுனி, ஒரு விலங்காக மட்டுமல்ல — அது பெருமை, பொறுமை மற்றும் அவரது அடையாளத்தின் உருவகமாக திகழ்கிறது. பலமும்…
Read Moreகார் மேனி – செல்வம் விமர்சனம்!!
கதை… சமுத்திரக்கனி & லட்சுமி பிரியா தம்பதி.. இவர்களுக்கு ஒரு மகன்.. கௌதம் மேனன் & அபிநயா தம்பதி இவர்களுக்கு ஒரு மகள்.. கௌதம் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார் சமுத்திரக்கனி.. ஒரு குடும்ப உறுப்பினர் போலயே அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மனைவி அபிநயாவின் விருப்பப்படி ஒரு மாதம் வெளிநாடு சுற்றுலா செல்கிறார் கௌதம் மேனன்… அப்போது சமுத்திரக்கனி இடம் அந்த காரை விட்டு செல்கிறார்கள்.. இவருக்கு ஏற்கனவே கடன் தொல்லை இருப்பதால் இந்த சூழ்நிலையில் ஒரு மாதத்திற்கு இந்த காரை எடுத்து வாடகை டாக்ஸி ஓட்டுகிறார் சமுத்திரக்கனி. அதன் பிறகு என்ன நடந்தது? இந்த விஷயம் கௌதமுக்கு தெரிய வந்ததா.? ஒரு குடும்பமாக பார்க்கும் அவர்களிடம் சமுத்திரக்கனி செய்ததா சரியா.? நடிகர்கள்… P. SAMUTHIRAKANI – SELVAM LAKSHMI PRIYA CHANDRMOULI…
Read Moreகாற்றோடு பட்டம் போல, நீலோத்தி பாடலை எழுதிய சாரதி எழுதியுள்ள சிவன் பாடல் ” அகரவா மகாரவா “
இறைவன் சிவபெருமானின் பெருமை, தெய்வீக ஆற்றல் மற்றும் ஆன்மிக உணர்வுகளை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அகரவா மகரவா” என்ற புதிய ஆன்மிக ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Yaan Foundation வழங்கியுள்ள இந்த பாடல், பக்தி மற்றும் ஆன்மிக சிந்தனைகளை அழகாக இணைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருமதி.தேச மங்கையர்கரசி, முனைவர் சிவ.சதீஷ்குமார் ,பல்கலை வித்தகி திருமதி.ரேகா மணி மற்றும் திரைப்பட இயக்குனர்கள் இயக்குனர் ரோமியோ ஜூலியட் லஷ்மன், வசந்தமணி , சுகுமார் அழகர்சாமி, s.சாம் , ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆமீக பாடலை வெளியிட்டனர். இந்த பாடலை பிரபல ஆன்மிக பாடகர் கோல்ட் தேவராஜ் அவர்கள் ஆழ்ந்த உணர்வுகளுடன்…
Read More‘கே ஜி எஃப்’- ‘மார்கோ’- ‘டாக்ஸிக்’ படங்களுக்கு பிறகு மீண்டும் இசையில் புயலை கிளப்பும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். அவருடைய இசையில் கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘ காட்டாளன் ‘விரைவில் வெளியாகிறது
‘கே ஜி எஃப்’, ‘மார்கோ’, மற்றும் ‘டாக்ஸிக்’ போன்ற படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்டாளன்’ படத்திற்கு இசையமைக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் பி. அஜனீஸ் லோகநாத் இசையமைப்பார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில்… தற்போது ரவி பஸ்ரூர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பான் இந்திய வெளியீடாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள திரை உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். பான்…
Read Moreகாளிதாஸ் 2 – விமர்சனம்…
கதை… ஒரு அப்பார்ட்மெண்டில் புத்தாண்டு அன்று ஒரு சிறுமி காணாமல் போகிறாள்.. சில மணி நேரங்களில் அவள் கொல்லப்படுகிறாள்.. இதனை அடுத்து அங்குள்ள சிசிடிவி கொண்டு காவல்துறை விசாரிக்கிறது.. போலீஸ் பரத் மற்றும் பவானி ஸ்ரீ இருவரும் விசாரணையில் இறங்குகின்றனர்.. அவர்கள் விசாரிக்க விசாரிக்க எதிர்ப்பாராத திருப்பங்கள்.. இறுதியில் என்ன ஆனது.? நடிகர்கள்… பரத் – காளிதாஸ் சங்கீதா – ரூபா சுந்தரி பவானி ஸ்ரீ – ஏசி வைஷ்ணவி சினிமா போலீஸ் போல அல்லாமல் எதார்த்த போலீசாக தன்னுடைய பொறுப்பு உணர்ந்து பரத் பட்டைய கிளப்பியிருக்கிறார்.. அவருக்கு பக்கபலமாக ஏசி வேடத்தில் பவானி ஸ்ரீ வெளுத்துக்கட்டி இருக்கிறார்.. நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டியிருக்கிறார் பூவே உனக்காக சங்கீதா.. சொல்லாமலே என்ற பாடலுடன் அவருக்கு அறிமுகமும்.. இடைவேளை வரை இவரது கேரக்டர் வெறுமனே…
Read More‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!
சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. கன்னட நடிகர், இயக்குநர் ரக்ஷித் ஷெட்டி தலைமையிலான தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸ், தனது ‘பேச்சிலர் பார்ட்டி’ என்ற கன்னடத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக, மொத்தம் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இசை பயன்பாடு உரிமம் குறைவான நீளத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாதத்தை நீதிபதி தேஜஸ் காரியா நிராகரித்தார். பதிப்புரிமை மீறல் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக பரம்வா ஸ்டுடியோஸிற்கும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். “‘ஓம்மே நின்னானு’ பாடல் 31 வினாடிகளுக்கும், ‘நியாயா எல்லிடே’ பாடல் 7 வினாடிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறைவான…
Read Moreதிருமதி சசிகலா நாகராஜன் அவர்களுக்கு உலகளாவிய வணிக முன்னணித்திறனுக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது
18 குழும நிறுவனங்களின் நிறுவனர் திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், உலகளாவிய வணிக முன்னணித்திறனில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்த மதிப்புமிக்க விருது 2026 மார்ச் 31 அன்று சென்னை, இந்தியாவில் வழங்கப்பட்டது. தூரநோக்கு கொண்ட தொழில்முனைவோர் மற்றும் திறமையான தலைவராக விளங்கும் திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், பல துறைகளில் புதுமை, வணிக வளர்ச்சி மற்றும் துரிதமான தலைமைத்துவ முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 18 குழும நிறுவனங்களை வழிநடத்துவதன் மூலம், வணிக மேம்பாடு, நிறுவன வளர்ச்சி மற்றும் உலகளாவிய விரிவாக்கத்தில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்த கௌரவம், அவருடைய அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கான அங்கீகாரமாகும். அவருடைய சாதனைகள், உலகம் முழுவதும் உள்ள எதிர்கால தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. இந்த…
Read More