தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்…
Read More“ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு””
ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ , ஜனவரி 31 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான VFX வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது, இது பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி இது ஒரு புதுவிதமான அனுபவத்தை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர் . நட்சத்திர பட்டாளம் மற்றும் Pan – India விவரங்கள் : பா.விஜய் இயக்கிய அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
Read Moreதமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப்!!
தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, ‘ஒன்ஸ்மோர்’ எனும் படத்தில் இடம்பெற்ற ”வா கண்ணம்மா..’ எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ‘ ரீல்ஸ் ‘களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஒன்ஸ்மோர் ‘ எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம்…
Read Moreபிப்ரவரி 14 ல் திரைப்படம் வெளியாகிறது. BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.
இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது ‘காதல் என்பது பொதுவுடமை’ நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு இந்தபடத்தில் நடித்திருக்கிறார். ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பையும் , அனைவரும் பார்க்க வேண்டிப ஒரு முக்ககிய படம் என்ற பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இன்று வெளியான படத்தின் ரெய்லர் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிப்ரவரி 14 ல் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் & டிஸ்ட்டிபியூட்டர் (CEAD) சார்பில் G.தனஞ்ஜெயன்…
Read Moreதமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், ரவி மோகன் ஜோடியாக அறிமுகமாகிறார்
பல வெற்றிப் படங்களையும் ‘மத்தகம்’ இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாக இவர்களுடன் முக்கிய வேடங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில்…
Read Moreவரவேற்பை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தி ஐ’ ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக்
இசைக்கலைஞர்- பாடகி – பாடலாசிரியர்- தனித்துவமான திறமை மிக்க நடிகை- என பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி ஐ ‘ ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின்…
Read More“காதலர் தின சிறப்பாக ஆஹா தமிழ் வெளியிடும் புதிய வெப் சீரிஸ்!”
இந்த காதலர் தினத்தன்று, *ஆஹா தமிழ்* அதன் புதிய வெப் சீரிஸ் *”மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்”* மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது. மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது .காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள்.
Read Moreவைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் வி. பழனிவேல் தயாரிப்பில் ‘டாக்டர் அம்பேத்கர்’
அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’, ஆர்யா நடித்த ‘ஓரம் போ’, சத்யராஜ் நடித்த ‘6.2’, மற்றும் ‘நீ வேணும்டா செல்லம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் பேனரில் தயாரித்த வி. பழனிவேல் தற்போது ‘டாக்டர் அம்பேத்கர்’ படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘தேசியத் தலைவர்’ படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக வாழ்ந்திருக்கும் ஜெ.எம்.பஷீர் அம்பேத்கராக நடிக்கிறார். வி. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்கிறார். டாக்டர் அம்பேத்கர் பிறந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ், பயின்ற புனே, வாழ்ந்த மும்பை, அமைச்சராக பணியாற்றிய தில்லி, பாரிஸ்டர் பட்டம் பெற்ற லண்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இப்படம் படமாக்கப்பட உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டத்தை இயற்றியது டாக்டர் அம்பேத்கர் என்பது…
Read Moreவிமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர் “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !! N
ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது. தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும்…
Read Moreபிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்வினில்…. *E Lounge Events சார்பில் வெங்கட் பேசியதாவது…* இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 8ம் தேதி சென்னை YMCA நந்தனம் மைதானத்தில், இந்த லைவ் இன் கான்சர்ட் நடக்கவுள்ளது. இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. 47…
Read More
