.A.P. ஷர்வின் இயக்கத்தில் டிட்டோ நடிக்கும் ‘மறைமுகம்’ விரைவில் திரைக்கு!

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா இருவரும் கதாநாயகிகளாகவும் இணைந்து நடித்திருக்கிறார்கள் காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன் அறிமுகம் ஜீவகன் உமேரா பேகம் குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார் A P ஷர்வின் ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார் டைரக்டர் ஒளிப்பதிவு விஜய் திருமூலம் இசையமைப்பாளர் வசந்த் இந்த படத்தை வி ஜீவகன் A P…

Read More

“தமிழ் படத்தில் நடிக்க ஆசைப் பட்டேன்…அது இந்த படம் மூலம் நிறைவேறியது” –ஜீப்ரா திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் சத்யதேவ் மகிழ்ச்சி

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட பிரபலம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.   தயாரிப்பாளர் தினேஷ் பேசியதாவது… பத்திரிகை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப்படம் செய்துள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது…

Read More

சென்னையில் நடந்த ‘புஷ்பா 2’ நிகழ்ச்சியில் தமிழை போற்றிய பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

பாட்னாவில் நடந்த ‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு ‘புஷ்பா’ திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தனது நடிப்பால் மட்டுமல்லாது திறமையான நடனம் மூலமும் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலமும் உலகம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.   படத்திற்கான புரோமோஷன்களின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 24 அன்று ‘புஷ்பா2’ படக்குழு சென்னை வந்தடைந்தது. தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்த ப்ரீ ரிலீ ஈவண்ட்தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. படத்தை விநியோகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வு நடக்கும் ஏரியா முழுவதும் ‘புஷ்பா2’ தீம்…

Read More

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் ‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட‌ டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக‌ உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. கணேசனின் முயற்சிகள் சர்வதேச அரங்கில் இந்திய திறமைகளை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்ற‌ன. பிரபல தமிழ் நடிகர் நெப்போலியனை ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அவர், புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரையும் ஹாலிவுட்டிற்கு தனது திரைப்படங்கள் மூலம் அழைத்து சென்றார்.   அவரது அடுத்த படைப்பான‌ ‘டிராப்…

Read More

நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு போனாலும் நான் என்றுமே விஜய் சாரின் ரசிகன் தான்! – ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ உரிமையாளர் நெகிழ்ச்சி

     வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார். ஆம், தனிமனித எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றி சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்தவர் தான் திரு.ஜான் அமலன். திரைத்துறை மட்டும் இன்றி தொழில், விளையாட்டு, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும், என்பதை கனவாக கொண்டிருந்தவர், ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள் ‘ (INDIAN AWARDS) என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி…

Read More

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் வழங்கிய குளோபல் ஐகான் விருது – டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனுக்கு சிறப்பான அங்கீகாரம்

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனின் வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக‌, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் அவ‌ருக்கு மதிப்புமிக்க குளோபல் ஐகான் விருதை வழங்கி கௌரவித்தது.   நவம்பர் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற டான்ஸ் ஆஃப் டிஸ்ட்ரிக்ட் சீசன் 12 நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க தலைவர் ஷபீர் நசீர், செயலர் மேரி அமுதா, டிஓடி தலைவர் ஜோசப் ராஜா, வொகேஷனல் இயக்குந‌ர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிராந்திய ஒத்துழைப்பை வளர்த்தல், ஒற்றுமையை ஊக்குவித்தல், எல்லைகளை தாண்டி ஆதரவற்றோரை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் டாக்டர் சரவணனின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காகவும், அரசியல், ஆன்மிகம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் பன்முக ஆளுமைக்காகவும் இந்த…

Read More

சீர் வாசகர் வட்டம் வெளியீடு: உலக சினிமாவின் பொக்கிஷம் ரூ.200க்கு!

முன்பதிவு அறிவிப்பு. முதல் 5,000 படிகள் மட்டும். 100 இடங்களில் முன்பதிவு. #உலக_சினிமா #செழியன் #மக்கள்_பதிப்பு #சீர்_வாசகர்_வட்டம் வாசக தோழமைகளுக்கு வணக்கம். சீர் வாசகர் வட்டத்தின் மக்கள் பதிப்பு நூல்களின் வரிசையில் ஒரு மகுடமாக இயக்குநர் – ஒளிப்பதிவாளர் செழியனின் ‘உலக சினிமா’ வர உள்ளது. விகடனில் தொடராக வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களின் சினிமா ரசனையை மாற்றிய தொடர் அது. தமிழ் வாசகர்களுக்கு உலக சினிமாவைப் பற்றிய நல்ல திறப்பை ஏற்படுத்திய 93 நல்ல படங்களைப் பற்றிய கட்டுரைகளையும் 93 நல்ல சிறுகதைகள் என்றுகூட சொல்லலாம். மூன்று பாகங்களாக நூல்வடிவம் பெற்று லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையான நூல் இப்போது சீர் வாசகர் வட்டம் வெளியீடாக 760 பக்கங்களில் கெட்டி அட்டையில் ஒரே நூலாக 200 ரூபாய் விலையில் நல்ல தரத்தோடு வெளிவர உள்ளது. சாத்தியமில்லாத இந்த…

Read More

அஜித் மேனன் – அனில் வர்மா இணைந்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் வெளியீடு!

இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி’ எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் ‘ஏசியா வில்லே’ எனும் ஊடக நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த ஊடகவியலாளருமான சசிகுமார் எழுத்தாளர்கள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் கணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ‘ஹிடன் அஜெண்டாஸ்’ என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக்கப்பட்ட புத்தகமாகும். இந்த புத்தகத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் முதல் பக்கத்திலேயே வாசகர்களின் மனதை கவர்ந்து விடுகின்றன. ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும் போதே…

Read More

கானா அரசரின் 50 வருட திரைத்துரை மற்றும் தன் பிறந்த நாளான இன்று ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை வெளியிட்டுள்ளார்

சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ” காத்து வாக்குல ஒரு காதல் “.கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும்சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த்,மேனக்சன் மிப்பு மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை சிறப்பாக பாடியும், தன் பிறந்த நாளான இன்று தேனிசை தென்றல் தேவா வெளியிடுள்ளார் இப்பாடலில் இயக்குநரும் நடிகருமான மாஸ் ரவி, சஞ்சனா சிங், தங்கதுரை, ஆதித்யா கதிர், பவர் ஸ்டார் நடனமாடியுள்ளனர். தற்போது இப்படத்தின் லிரிக் வீடியோவை இன்று ( 20.11.2024 ) 5 ஸ்டார்…

Read More

வடசென்னை கதைக் களத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சொர்க்கவாசல்’!!

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன் னோட்டத்தை தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல்…

Read More