சோனி லிவ் வழங்கும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தில் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று தருணத்தை மறு உருவாக்கம் செய்திருப்பது பற்றிய பல சுவாரஸ்யமானத் தகவல்களை படத்தின் இயக்குநர் நிகில் அத்வானி பகிர்ந்து கொள்கிறார். இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வைசிராயின் மாளிகையான ராஷ்டிரபதி பவன் போன்ற முக்கியமான இடங்களை திரையில் கொண்டு வருவது மிக முக்கியமான சவால். இந்திய மக்களின் ஆடைகள் முதல் துல்லியமான செட் வடிவமைப்புகள் வரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் உணர்வைத் தூண்டும் வகையில் படத்தில் பல விஷயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. “பொதுவாக, எந்தவொரு படத்திற்கும் குறைந்தது 16 வாரங்கள் முன் தயாரிப்பு தேவைப்படும். ஆனால், ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்திற்கு எங்கள் குழுவுக்கு ஒரு வருட முன்தயாரிப்பு காலம் தேவைப்பட்டது. ராஷ்டிரபதி பவன் இல்லாமல் சுதந்திரத்தின் கதையை சொல்ல முடியாது. உண்மையான ராஷ்டிரபதி…
Read Moreசென்னையில் 3 நாட்கள் நடைபெறும், கியூபா திரைப்பட விழா 2024′
இந்தியாவில் உள்ள கியூபா குடியரசின் தூதரகத்துடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன், சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) நடத்தும் கியூபா திரைப்பட விழா 2024 துவங்கியது. இதற்கான சிறப்பு மூன்று நாள் நிகழ்வு நவம்பர் 15 முதல் 17, 2024 வரை சென்னை, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஏ.வி.எம். ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர் எஸ். விஜயகுமார், IFS, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, சென்னை, MEA கிளை செயலகத் தலைவர்a தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசிய கருத்துக்கள், திரைப்படங்களில் கலாச்சார ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இதே கருத்தினை சிவன் கண்ணன், ஐசிஏஎஃப் தலைவரும் வழிமொழிந்ததோடு, எஸ். விஜயகுமார் அவர்களை முறையாக வரவேற்று கெளரவித்தார். இந்த விழாவின் முதல் நாள் கியூபா சினிமாவின் மெய்ப்பொருளைக் காட்டும் ‘கான்டிகோ பான் ஒய்…
Read Moreவிமலின் 35-வது படமாக உருவாகும் பெல்லடோனா 16 மொழிகளில் தயாராகிறது
தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாகஉருவாகிறது ‘பெல்லடோனா’ திரைப்படம். யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படமாக உருவாகி வருகிறது. தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார். இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இசையமைக்கிறார், தீபக் எடிட்டிங் செய்கிறார். அனைத்து பாடல்களையும் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமியே எழுதி இருக்கிறார் சண்டைக் காட்சிகளை டேஞ்சர் மணி கையாண்டுள்ளார். இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையில், “இந்த படம் விமல் சாருக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும்.…
Read Moreமழலை குரல்களின் சங்கமம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன் !!
இதோ வந்துவிட்டது மழலைக் குரல்களின் இசை சங்கமம், தமிழக மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் ஜீனியர் 10 வது சீசன், வரும் 16 ஆம் தேதி மாலை கோலாகலமாகத் துவங்குகிறது. முற்றிலும் எதிர்பாராத வகையிலான போட்டியாளர்கள், நடுவராக நடுவராக பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் என, ஆரம்பமே களை கட்டுகிறது. இந்நிகழ்ச்சி குறித்த புரமோ, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். குழந்தைகள் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர்…
Read MoreZEE5 தெலுங்கு பிளாக்பஸ்டர், ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, சமீபத்தில் வெளியான தெலுங்கு பிளாக்பஸ்டரான மா நன்னா சூப்பர் ஹீரோ படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. லூசர்ஸ் சீரிஸ் மூலம் பாராட்டுக்களைக் குவித்த, அபிலாஷ் ரெட்டி கன்காரா இயக்கியுள்ள இந்த உணர்ச்சிகரமான குடும்ப டிராமா திரைப்படத்தில், சுதீர் பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனுபவமிக்க நடிகர்களான சாயாஜி ஷிண்டே, சாய் சந்த் மற்றும் ஆர்னா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். CAM Entertainment உடன் இணைந்து V Celluloids மற்றும் VR Global Media ஆகிய நிறுவனங்களின் கீழ் சுனில் பலுசு தயாரித்துள்ள “மா நன்னா சூப்பர் ஹீரோ”, தந்தை-மகன் உறவுகளின் சிக்கல்களை, நாம் நேசிப்பவர்களுக்காக நாம் செய்யும் தியாகங்கள் மற்றும் பெரும்பாலும் உறவுகளில் மறைந்திருக்கும் உண்மைகளை ஆராய்கிறது. திரையரங்குகளில் ரிலீஸைத் தவறவிட்டவர்களுக்கு,…
Read More“எனை சுடும் பனி மூலம் நாயகனாக நட்ராஜ் சுந்தர்ராஜ் அறிமுகம்”
எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் “எனை சுடும் பனி” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை, சுந்தர்ராஜ், டிஎஸ்ஆர், தனிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நட்ராஜ் சுந்தர்ராஜ் எல்லோரிடமும் ஜாலியாக பழகும் இளைஞன். அவருடைய லட்சியமே ஐபிஎஸ் அதிகாரியாக ஆவது. எதிர்பாராத விதமாக போலீஸ் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் அவருக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கிறார். காதலியை கரம் பிடித்தாரா. ஐபிஎஸ் அதிகாரியாக ஆனாரா. இல்லை குற்றவாளியாக சிறை பிடிக்கப்பட்டாரா. சைக்கோ, க்ரைம், திரில்லர், சஸ்பென்ஸ், காதல் என்று “என்னை சுடும் பனி” விறுவிறுப்பாக செல்கிறது. பொள்ளாச்சி, ஆனையூர், மறையூர் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான செட் அமைத்து…
Read Moreஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு
‘தக்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘முரா’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருவதால் இப்படத்தினை திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழில் ‘தக்ஸ்’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘மும்பைகார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இந்தியிலும் அறிமுகமானார். பல சர்வதேச விருதுகளை வென்ற ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட் ‘எனும் திரைப்படத்திலும் நடித்து உலக அளவிலான கவனத்தையும் கவர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘கப்பேலா ‘ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் முஹம்மத் முஸ்தபா இயக்கத்தில் உருவாகி, வெளியான ‘முரா ‘ திரைப்படத்தில் அனந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத்…
Read Moreரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் “வானமே எல்லை” நிகழ்வு: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பான பயண அனுபவம்
சென்னை, 14th நவம்பர் 2024 – குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில், ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு அதன் வருடாந்திர “வானமே எல்லை” என்ற இனிய நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வின் மூலமாக, ஏழை எளிய குழந்தைகள், மாற்றுப்பாலினத்தவர்கள் மற்றும் பார்வையற்றவர்கள் சென்னையிலிருந்து சேலம் வரை விமானத்தில் பயணித்து மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் பெற்றனர். சென்னையில் இருந்து சேலத்துக்கு வந்த குழந்தைகளை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரிந்தா தேவி ஐஏஎஸ் உற்சாகமாக வரவேற்றார். இவர்களின் வரவேற்பு குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தந்தது. மேலும், இந்நிகழ்வில் பிரபல இயற்கை விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் நல்லெண்ண தூதர் ஏ.ஆர். ரைஹானா மற்றும் ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் உடன் பயணித்து குழந்தைகளின் நினைவுகளை சிறப்பாக ஆக்கியது. சேலத்திற்குப் பின், குழு ஏற்காட்டுக்கு பயணித்து ஒரு…
Read Moreகங்குவா – திரைப்பட விமர்சனம்
முன்ஜென்ம கதையை தீவுவாசிகள் பின்னணி யில் சொல்லி இருக்கிறார்கள். 2024 இல் நிகழ் காலத்தில் கதை தொடங்குகிறது. போலீசால் கண்டுபிடிக்க முடியாத நபர்களை தனது தீவிர வேட்டையாடல் மூலம் கண்டுபிடித்து கொடுத்து அதற்கான அன்பளிப்பை காவல்துறையில் பெற்றுக்கொள்ளும் சூர்யா. அவருக்கு உதவியாக யோகி பாபு. இதே வேலையை பிழைப்பாக நாயகி திஷா பதானியும் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக ரெடின் கிங்ஸ்லி. இதற்கிடையே ஆய்வுக் கூடம் ஒன்றில் சிறுவர்களின் மூளைத் திறனை அதிகரிப்பதற்கான ஆய்வு நடக்கிறது. இந்த ஆய்வுக் கூடத்தில் இருந்து அதிசய மூளைத் திறன் கொண்ட சிறுவன் ஒருவன் தப்பி விட, ஆய்வுக்கூடம் அனுப்பி வைத்த அடியாட்கள் சிறுவனை வெறியுடன் தேட, அவனுக்கோ சூர்யாவை பார்த்த மாத்திரத்தில் இன்ப அதிர்ச்சி. சூர்யாவும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவனுக்கும் தனக்குமான இனம் புரியாத அன்யோன்யத்தை உணர்கிறார்.…
Read Moreமொபட்டில் பயணமாகும் இரு சுட்டிக்குழந்தைகளின் இனிய பயணம் ‘பாராசூட் ‘
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘பாராசூட்’ டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் மொபட்டில் பயணமாகும் இரண்டு சுட்டிக்குழந்தைகளின் அழகான இனிமையான பயணத்தைக் காட்டுகிறது. இதயத்தைக் கவரும் அற்புதமான டிராமா உணர்வை அளிக்கிறது. இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ள இந்த சீரிஸில், தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை ‘குக் வித் கோமாளி’ புகழ் கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். கிருஷ்ணா குலசேகரன், இந்த சீரிஸில் நடிப்பதைத் தவிர, இந்தத் சீரிஸின் தயாரிப்பையும் கையாளுகிறார். இந்த சீரிஸில் நடிகர்கள் காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீவருண்…
Read More
