பிரபாஸின் பிறந்த நாளில் ‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்.. 2,100 கோடி ரூபாய் வசூலிக்கும் என பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள். முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’, ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் தீராத விசுவாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. இதனால்…
Read Moreதிரை மற்றும் அரசியல் உலகின் உண்மை சம்பவங்களில் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பு திரைப்படமான ‘படைப்பாளி’ விரைவில் வெளியாகிறது
‘சென்னை 28’, ‘பேரழகன்’ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக விநியோகித்த முன்னணி விநியோகஸ்தரான பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் பேனரில் தயாரிக்கும் முதல் படம் ‘படைப்பாளி’. பாலாஜி ஜெயபாலன் இயக்கும் இத்திரைப்படத்தில் மலேசிய தமிழ் திரையுலகில் 20க்கும் மேற்ப்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள யுவராஜ் கிருஷ்ணசாமி மற்றும் பாலாஜி ஜெயபாலன் நாயகர்களாக நடிக்கின்றனர். தனது முதல் படத்தை இயக்கும் ஒரு இளைஞனும் ஆணவக் கொலைகள் குறித்த அவனது படைப்பும் திரையுலக மற்றும் நிஜ அரசியலை எதிர்கொள்வதே படத்தின் மையக்கரு. சில உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக நடிகை சவுந்தரியா அறிமுகமாகும் ‘படைப்பாளி’ திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், ‘காதல் கண்கட்டுதே’ திரைப்படத்தின் இயக்குநர் சிவராஜ், கார்த்திகேயன் கோவிந்தராஜ், பிரசாந் வர்மன், ஏ.எம்.எஸ். ஹரிகிருஷ்ணன், பிரியதர்ஷினி, டோமினிக், ஆண்ட்லின்,…
Read More‘ஐந்தாம் வேதம்’ புதிய ZEE5 சீரிஸ்: பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்தியேக முன்னோட்டம்
ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர். இந்த அதிரடி திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த முன் திரையிடல் நிகழ்வில் சீரிஸை பார்த்து ரசித்த பத்திரிக்கை விமர்சகர்கள், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மொத்த படக்குழுவினரும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சீரிஸ் குறித்த…
Read More‘இரவினில் ஆட்டம் பார் ‘ ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நவராத்திரி படத்தில் இடம்பெற்ற ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ‘ என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும். அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் ‘இரவினில் ஆட்டம் பார் ‘என்கிற பெயரில் ஒரு முழு நீள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம் தான் இந்தப் படம்.அந்தக் காமக் கொடூரர்களையும் போதை அடிமைக் கொடியவர்களையும் மர்மமான முறையில் அழித்து ஒழிக்கும் கறுப்பு நாயகன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். படத்தின் முழுக்கதையும் இரவில் நடக்கிறது. இந்தப் படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர்…
Read Moreரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது!
மார்வெல் ஆண்டி ஹீரோ வெனோமின் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக அதிக எதிர்பார்ப்பில் உள்ள ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் உலகளவிலான வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது. டாம் ஹார்டியின் ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதிப் படம் அக்டோபர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது. ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் வெனோம் மற்றும் விமானத்தின் மேல் உள்ள ஜெனோமார்ப் இருவரும் இருக்கும்படியான போஸ்டரும் வெளியாகியுள்ளது. ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்திற்கான முன்பதிவுகள் அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. டாம் ஹார்டியின் பிரியமான ஆன்டி-ஹீரோ உரிமையின் கடைசிப் பாகமான ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் த்ரில்லான ஆக்ஷன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களைக் கொண்டிருக்கிறது. மேலும், மார்வெலின் ஆன்டி-ஹீரோவுக்கு…
Read Moreகார்க்கி தமிழ்க் கழகம் மற்றும் சில்வர்சோன் அமைப்பு இணைந்து நடத்தும் “தமிழ் ஒலிம்பியாட்!!
கல்வியின் எதிர்காலம் 2024 எனும் மாநாடு ஐஐடி சென்னை ஆராய்ச்சிப் பூங்காவில் இன்று நடைபெற்றது. WASC மற்றும் AIAASC அமைப்புகளின் சார்பில் அமெரிக்கன் உலகப் பள்ளி ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் பாடலாசிரியர் மற்றும் தமிழ் மொழி ஆராச்சியாளர் மதன் கார்க்கி மற்றும் அவரது மனைவி நந்தினி கார்க்கி ஆகியோர் இணைந்து தங்கள் கார்க்கி தமிழ்க் கழகம் (Karky Tamil Academy) எனும் அமைப்பை அறிமுகம் செய்தனர். பள்ளிகளில் வேதியல் இயற்பியலுக்கு ஆய்வகங்கள் இருப்பது போல் முதன் முதலாக தமிழ் ஆய்வகம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியை மாணவர்கள் ஆர்வத்தோடு பயிலும் வண்ணம் மென்பொருள் கருவிகள், தமிழ் சொல் மற்றும் இலக்கண விளையாட்டுகள், தமிழ் வழியாக உலக அறிவு, பாடல்கள், கதைகள், நூல்கள், போட்டிகள் என்று இந்த ஆய்வகத்தை…
Read Moreதெறிக்க விடும் கருணாஸ்! மாறுபட்ட கோணத்தில் ஆர்ஜே பாலாஜி!
ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக ‘சொர்க்கவாசல்’ உருவாகி வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிக்கும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி (நடராஜன் சுப்பிரமணியன்) மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். சிறையை பிரதான கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தப்…
Read Moreசென்னையில் Torque Entertainments – ன் ‘Return of the Dragon – Home Edition ‘ music concert – ல் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி
தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராகவும், சர்வதேச அளவில் தனித்துவம் வாய்ந்த இசை கலைஞராகவும், ராப் பாடகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ‘ Return of the Dragon – Home Edition’ எனும் பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமான Music Concert ஐ நடத்தினார். Torque Entertainments நிறுவனம் சார்பில் சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த Music Concert க்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இந்த மைதானத்தில் நடைபெற்ற Music Concert ஒன்றில் இதுதான் அதிக அளவில் ரசிகர்கள் ஒன்று கூடிய இசை நிகழ்ச்சி என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி- மேடையின் இறுதி பகுதி வரை சென்று, அனைத்து…
Read Moreஆலன் விமர்சனம்… ஆபத்தில்லா பயணம்
கதை… சித்தப்பாக்களின் பணத்தாசை வெறியால் தன் குடும்பத்தை இழந்து தவிக்கிறார் நாயகன் வெற்றி.. பின்னர் இவரது அப்பாவின் நண்பர் உதவியுடன் சென்னைக்கு சென்று ஒரு மேன்ஷனில் தங்குகிறார்.. ஆனால் அங்கே தங்க மனமில்லாமல் காசிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கே பல வருடங்களை கழிக்கும் அவர் ஆன்மீகத்திலும் ஆர்வமில்லாமல் தாத்தாவின் சொல்படி எழுத்து உலகிற்கு திரும்புகிறார். அங்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து அவருடன் காதல் கொள்கிறார்.. அந்தப் பெண்தான் இனி தன் வாழ்க்கை என்று காதல் வாழ்க்கையில் திளைக்கும் இவர் திடீரென காதலின் மரணத்தால் குழம்பி தவிக்கிறார். அதன் பிறகு இவர் என்ன செய்தார்..? குடும்ப அதன் பிறகு இவரது பாதை ஆன்மீக பாதையா? குடும்ப வாழ்க்கையா? எழுத்து உலகமா? என்பதெல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்… கமர்சியல் ஆக்சன் என பாதைகளை தேர்ந்தெடுக்காமல் படத்திற்கு படம் வித்தியாசமான…
Read Moreராக்கெட் டிரைவர் விமர்சனம்… ஆட்டோவில் அப்துல் கலாம்
கதை… நாயகன் விஷ்வத் ஒரு ஆட்டோ டிரைவர்.. ஆனாலும் இவர் விஞ்ஞானியாக ஆசைப்பட்டு வறுமையின் காரணமாக அது முடியாமல் போகவே ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். டிராபிக் போலீஸ் நாயகி சுனைனா.. கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக இல்லாமல் கருணை உள்ள கொண்ட நாயகியாக நாயகனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஒருநாள் விஷ்வத் ஆட்டோவில் சவாரி செய்ய இளவயது அப்துல் கலாம் வருகிறார்.. இதனால் அவருக்கு சந்தேகம் வரும் நிலையில் ஒரு கட்டத்தில் அப்துல் கலாம் தான் டைம் ட்ராவல் செய்து தற்போது தன் ஆட்டோவில் சவாரி செய்ய வருகிறார் என்பதை உணர்ந்து கொள்கிறார். ஆனால் அப்துல் கலாம் டைம் ட்ராவல் செய்ய வந்த நோக்கம் என்ன என்பது புரியாமல் குழம்பி நிற்கிறார். தான் டைம் ட்ராவல் செய்து இந்த காலகட்டத்திற்கு வந்த நோக்கம் என்ன?என்பதை அறிய…
Read More
