ஒவ்வொரு படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நல்ல தரமான, கருத்தாழம் மிக்க அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற நோக்கில் படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’. அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘பிளாக்’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.…
Read Moreபடப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் !!
தயாரிப்பாளர், நடிகர் K C பிரபாத், யாமம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். படக்குழு அவரை உடனடியாக மருத்துவமைனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் உடல்நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். K C பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த்துறையில் தயாரிப்பாளராக கால்பதித்தார். அப்படத்தில் வில்லன் பாத்திரத்திலும் நடிகராக கலக்கியிருந்தார். தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். நடிகர் K C பிரபாத் “யாமம்” எனும் திரைப்படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இரவுபடப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, திடீரென இதயத்தில் வலி ஏற்பட, அவரை படக்குழு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யபட்டு, உடல்நலம் தேறி, சிசிச்சை பெற்று வருகிறார்.…
Read Moreசென்னை டிடிகே சாலையில் ‘துளசி மெட்ராஸ் ஸ்டோர்’ Grand Opening!.
சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான திருமதி. செல்வி செல்வம், திருமதி. துர்கா ஸ்டாலின், திருமதி. ஜெயந்தி தங்கபாலு, டாக்டர். எழிலரசி ஜோதிமணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களோடு நிகழ்வில் டாக்டர். மரியா ஜீனா ஜான்சன், நீனா ரெட்டி, உஷா வணங்காமுடி, தேவி கோயல், ப்ரீதா ஹரி மற்றும் அனிதா விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ‘துளசி மெட்ராஸ்’ என்ற பிராண்ட் ரஸ்வரிதி, சந்தீப் பரேக் மற்றும் பிரார்த்தனா பரேக் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்திய நெசவு மற்றும் கைவினை கலைஞர்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், அவர்கள் இந்த பிராண்டை ஆன்லைனில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களின் தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில்,…
Read Moreஆலன்: இசை வெளியீட்டு விழா கொண்டாட்டம்
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார். ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்…
Read More“அந்தமானில் அஜித்தின் ஹார்லி சாகசம்: உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற ‘வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours'”
நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலருமான அஜித்குமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகப்படுத்தினார். ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐலேண்ட் ரம்பிள் என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில், ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் தீவுகளில் பயணித்தது அனைவரையும் ஈர்த்தது. இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற சிலிர்ப்பான நாடு கடந்த பயணங்களையும் அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours வழி நடத்தியுள்ளது. ஒவ்வொரு பயணமும் கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தில் ரைடர்ஸ்…
Read Moreபிரைம் வீடியோவின் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் த்ரில்லர் தொடர் அக்டோபர் 18 முதல் ஸ்ட்ரீமிங்
இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் , 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யோகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு…
Read Moreமுதல் எபிஸோடிலேயே அதிரடி, களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை…
Read Moreஎதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்திலிருந்து “மார்டின் ஆந்தம்”, பாடல் வெளியானது!!
இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. ஆந்தம் முழுக்க துருவா சர்ஜா பட்டையை கிளப்புகிறார், தன் அதீத கவர்ச்சியால் திரையை தீப்பிடிக்க வைக்கிறார். மார்டினில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரது தோற்றமும், மிடுக்கும், சேர்ந்த கலவையில் படத்தை திரையில் காணும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. பாடலின் வரிகளை: – கன்னடம்: ஸ்ரீமணி, ஏ பி அர்ஜுன் – தமிழ்: விவேகா – தெலுங்கு: ஸ்ரீமணி – ஹிந்தி: ஷபீர் அகமது – மலையாளம்: விநாயக ஷஷி குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த ஆந்தம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. துருவா சர்ஜா நடிப்பில்…
Read More“ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” சொன்னதைச் செய்த பிக்பாஸ், ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !!
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக, புதிய ஹோஸ்டுடன், பல புதுமைகளுடன், முதல் எபிஸோடே களை கட்ட ஆரம்பித்துள்ளது. இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின்…
Read More“2K லவ்ஸ்டோரி” நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன் !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழுவினர் விரைவில் திரைக்குக்கொண்டுவரும் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் அறிமுக நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மக்கள் நாயகன் ராமராஜன் படக்குழுவினரை வாழ்த்தி, அறிமுக நாயகன் ஜெகவீரை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வினில்… இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது… மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம், வெண்ணிலா கபடி குழு படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விசயங்கள் நடந்தது.…
Read More
