சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அனிரூத் இசையில் இடம் பெற்ற” ரத்தமாரே ரத்தமாரே ” என்ற பாடலை பாடாத வாய்கள் இல்லை, கேட்காத காதுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இந்த பாடல் வரியை தலைப்பாக வைத்து சிறப்பான படம் ஒன்று உருவாகி இருக்கிறது. TSS Germany Films மற்றும் V2 Creation, New Jersey என்ற பட நிறுவனங்கள் சார்பில் சுமார் 13 ஈழம் மற்றும் இந்திய தமிழர்கள் இணைந்து crowd funding முறையில் தயாரித்திருக்கும் ” ரத்தமாரே ” படம் தான் அது. லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி, பிரசாத், ரமா, ஜனனி, அசார், மகிமா, ஸ்ரீஜித் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் தினேஷா ரவிச்சந்திரன். வசனம் :…
Read Moreநடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது படம் அறிவிக்கப்பட்டுள்ளது!
ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி, நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது படம் அறிவிக்கப்பட்டுள்ளது! ’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கேஎல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் பல நல்ல படங்கள் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார். இந்த மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனம் நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ஒரு புதிய படத்தை இன்று அறிவித்துள்ளனர். ’மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்ச்சர் ஆரம்பம்’ என்ற உற்சாக செய்தியுடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனம் முன்பு தயாரித்த ‘ராக்ஷசுடு’ மற்றும் ’கிலாடியை’ இயக்கிய ரமேஷ் வர்மா இந்தப் படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா…
Read Moreவெளியானது தளபதி 69 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான ‘தளபதி’விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தமிழில் தங்களது முதலாவது தயாரிப்பாக அமைவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்த படம் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான புகழ்பெற்ற ‘தளபதி’விஜய்-க்கும்,புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம், புகழ்பெற்ற இயக்குனர் எச். வினோத் மற்றும் தரவரிசையில் இடம் பிடிக்கும் பாடல்களைத் தந்த ‘அனிருத் ரவிச்சந்தர்’ ஆகியோர் இடையிலான குறிப்பிடத்தக்க புதுமையான கூட்டணியாக அமைகிறது. தனது அற்புதமான நடிப்புக்கும், பெரும் ரசிகர் பட்டாளத்துக்கும் பெயர் பெற்ற ‘தளபதி’விஜய், ‘தளபதி-69’-இல் இதற்கு முன்பு பார்த்திராத தோற்றத்தில் தோன்ற உள்ளார். தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விநியோகப்பதற்கும் பெயர் பெற்ற வெங்கட் கே நாராயணா அவர்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில், ‘தளபதி-69’-ஐ…
Read Moreகிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகிறது ராஜபுத்திரன்!!
கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி தயாரிக்கிறார், இணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸ், கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகிறது ராஜபுத்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு மற்றும் 8 தோட்டாக்கள் வெற்றி இருவரும் முதல்முறையாக இணைந்து இருக்கின்றனர் இவர்களோடு எங்களது பெருமைக்குரிய அறிமுகமாய் கன்னடத்து பிரபலம் கோமல் குமார் கதாநாயகியாக கிருஷ்ண பிரியா மற்றும் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலரும் நடிக்க. எங்கள் படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கவிப்பேரரசு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுத.. அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் விதமாக டிஆரின் வெண்கல குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது அறிமுக இசை அமைப்பாளர்…
Read Moreஇயக்குநர் சங்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடம்10லட்சம் நிதி உதவி
இயக்குநர்கள் ,உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் திருமதி.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் வருடாவருடம் ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்து முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கு இன்று 13.09.2024 ரூ.5 லட்சம் சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.நிர்வாகிகள் இயக்குனர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.
Read More‘ஹிட் -3’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் ‘ஹிட் : மூன்றாவது வழக்கு’ ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தனது 32 வது படமான ஹிட் : மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case) எனும் திரைப்படத்தில் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் அபாயகரமான கதாபாத்திரத்தை பற்றி ஒரு கண்ணோட்டத்தை வழங்கும்…
Read Moreசஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம்- 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பு வெளியானவுடன் பெரும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பு உண்மையில் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’…
Read Moreகீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில், ZEE5 இல் ‘ரகுதாத்தா’ திரைப்படம், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம், வெளியான வேகத்தில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து , சாதனை படைத்துள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், வெளியான ‘ரகுதாத்தா’ திரைப்படம், இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது. சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’. பெண் விடுதலை, பெண் சுதந்திரம் பற்றிய பார்வைகளை அழுத்தமாக எடுத்துச்சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள “ரகுதாத்தா” திரைப்படம், வீட்டில் ஓடிடியில் குடும்பத்தோடு ரசித்துக் கொண்டாட மிகச்சரியான திரைப்படமாக அமைந்துள்ளது. முன்னதாக ZEE5 தளத்தில் வெளியான ‘அயலி’ மற்றும் தி ‘கிரேட் இண்டியன் கிச்சன்’…
Read More‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு!!
பிரைம் வீடியோ – அதன் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் நகைச்சுவை இணைய தொடரின் வசீகரமான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள்ளார்ந்த கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த இணைய தொடர் எளிமையானதாகவும், அதே தருணத்தில் பிடிவாதமான கதையம்சத்தின் மூலம் மனதைக் கவரும் வகையிலும் நகைச்சுவையுடன் தயாராகி இருக்கிறது. இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக…
Read Moreநடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்!
நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்கான கூடுதல் திரைக்கதையை நடிகை சாந்தி எழுதியுள்ளார். எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. சாந்தி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் பல விருதுகளை வென்றுள்ளன. ‘சூரரைப் போற்று’ படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்ற ஷாலினி உஷாதேவி இயக்கிய மலையாளத் திரைப்படம் ‘என்னென்னும்’-ல் சாந்தி நடித்திருந்தார். இந்தப் படம் கேரள மாநில விருதுகள் 2024 இல் சிறப்பு நடுவர் விருதை வென்றது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நியூசெட்டல் இன்டர்நேஷனல் ஃபென்டாஸ்டிக் ஃபிலிம் பெஸ்டிவலில் இத்திரைப்படம் சர்வதேச விமர்சகர் விருதையும் வென்றது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சாந்தியின் முதல் இந்தி படமான ‘குல்மோஹர்’ சிறந்த இந்தி படத்திற்கான விருது வென்றது. அமேசான்…
Read More
