ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு!!

சென்னை தி நகர் கிருஷ்ணகான சபாவில் சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம் என்ற தலைப்பில் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தை கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகம் நடைபெற்றது. திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் டாக்டர் சோபனாவின் மாணவியான சீதாலட்சுமி விஜய் அவர்கள் தனது மாணவிகளுடன் இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார். திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தலைமை ஏற்க, நடனக் கலைஞர் உமா சத்தியநாராயணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வு ஆகஸ்ட் 31 (நேற்று) தி.நகர் கிருஷ்ணகான சபாவில் 10வது முறையாக அரங்கேறியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரங்கம் நிறைந்த மக்களுடன் விழா நடைபெற்றது. நமது அடையாளத்தை நமது கலாச்சாரத்தை, அனைவரையும் ஈர்க்கும் விதமாக, அற்புதமான நாடகமாக, அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் விதமாக உருவாக்கி…

Read More

GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு “பாம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK ,கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழுவினர் கலந்துகொள்ள, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. எஸ் ஆர் எம் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இசை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசியதாவது.., GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம், நல்லதொரு குழுவின் உழைப்பில், மிக சிறந்த படைப்பாக இப்படம் வந்துள்ளது. இப்பட டீம் அனைவருக்கும் என் நன்றிகள்.…

Read More

விருந்து – விமர்சனம் 3.75/5.. ஆக்சன் விருந்து

கதை… படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொழில் அதிபர் மலையாள நடிகர் முகேஷ் கொல்லப்படுகிறார்.. கொலைக்கான காரணம் என போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கையில் சில தினங்களில் அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இதனால் இவர்களது மகள் நிக்கி கல்ராணி மிகுந்த சோகத்தில் இருக்கிறார்.. தன் பெற்றோரின் கொலைக்கு என்ன காரணம் கொலை செய்தவர்கள் யார் என விசாரணையில் இறங்குகிறார் மகள். அப்போது இவரது சந்தேகம் அர்ஜுன் மீது விழுகிறது.. இதனையடுத்து அர்ஜுனை கொல்ல திட்டமிடுகிறார்.. அர்ஜுனுக்கும் இவர்கள் குடும்பத்திற்கு என்ன சம்பந்தம்..? நிஜமாகவே நிக்கி பெற்றோர்களை அர்ஜுன்தான் கொலை செய்தாரா? இவர்களது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார் அர்ஜுன்.. தனக்கு படத்தில் ரொமான்ஸ் இல்லை ஜோடி இல்லை என்பதை உணர்ந்து ஆக்ஷனில் மட்டுமே ஸ்கோர்ஸ் செய்ய முடியும்…

Read More

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி!

பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது! இசை என்பது இரைச்சல். பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகிவிட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் சினிமா பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சாஃட்வேர்களில் தமிழ் தேடும் லிரிக் என்ஜினியர்களை கவுரவிக்கும் சினிமா, இத்தகைய நல்ல கவிஞர்களுக்கும் ஒரு சூடத்தை கொளுத்தி வைத்து ஆராதிப்பதுதான் தமிழ்சினிமாவின் தனிச்சிறப்பு. அப்படி சமீபத்திய ஆராதனைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு, தமிழ் சினிமாவில் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின், பாட்டு ரசிகர்களை கவனிக்க வைக்கிறார். தமிழ்சினிமாவில் பாடல் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களில் சமூக வலைத்தளத்தள பக்கங்களில் உலகெங்கும் இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் விரல்விட்டு எண்ணக்கூடிய கவிஞர்களில் அஸ்மினும் ஒருவர். “இளம் வயதில் மொழியை ஆளத்தெரிந்தவராக திகழ்கிறார் ஈழத்து இளங்கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் யாத்துள்ள கவிதைகளில் ஒரு தேர்ந்த…

Read More

கம்பு சுத்தும் ஸ்ருதிஹாசன்.. ’கூலி’ படத்தில் ஆக்‌ஷன் பிளாக்?

உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி… அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது. சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, ” எனது தந்தையும், பழம்பெரும் நடிகருமான கமல்ஹாசன் ‘தேவர் மகன்’ படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு…

Read More

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடந்த ’CorporArt’24’ கலாச்சார நிகழ்வில் சென்னையின் கார்ப்பரேட் திறமை மிளிர்கிறது!

பிரபல கலை இயக்குநர் உமேஷ் ஜே. குமார் மற்றும் இன்னோவேட்டிவ் கிரியேட்டிவ் இயக்குனர்/ ஈவண்ட்ஸ் ராகினி முரளிதரன் ஆகியோருக்குச் சொந்தமான, சென்னையின் முன்னணி ஈவண்ட்ஸ் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்று Renaissance Events. அரசு நிகழ்வுகள், கார்ப்பரேட் நிகழ்வுகள், தயாரிப்பு வெளியீடுகள், ஆடியோ வெளியீடுகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கான விழாக்களை நடத்தும் நிறுவனங்களில் Renaissance Events மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும். சென்னையின் மிகப்பெரிய இன்டர் கம்பெனி கல்ச்சுரல் விழாவான ‘CorporArt’-ஐ  நடத்துவதில் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இந்த நிகழ்வின் இறுதிப் போட்டி நாளை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னையின் கார்ப்பரேட் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த திறமையாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 277-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் 4000-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் படைப்பாற்றலை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கிறது. கடுமையான தேர்வுக்குப் பிறகு 4000 பணியாளர்களில் இருந்து 650 இறுதிப்…

Read More

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் ‘தங்கலான்’

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞான வேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் சீயான் விக்ரமின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து.. கண்டு ரசித்து, வியந்து…

Read More

சென்னையில் துவங்கும் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 . சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா!!

வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 ஐ பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இத்தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன. மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத் துறையின் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள், மாணவர்கள் சர்வதேச சினிமாக்களை பார்ப்பது மற்றும் விவாதிப்பது மூலம் அவர்களின் கற்றல்…

Read More

மின்னல் முரளி ஹீரோ டோவினோ தாமஸின் 50வது படமான “ஏஆர்எம்” படத்தின், அதிரடியான டிரெய்லர்  வெளியாகியுள்ளது!!

மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், பான் இந்திய படைப்பாக, மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் “ஏஆர்எம்” படத்தின், அதிரடியான டிரெய்லர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “மின்னல் முரளி” மற்றும் “2018 – எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ” ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுதும்  கவனத்தை ஈர்த்த டோவினோ தாமஸ், அடுத்ததாக பிரம்மாண்டமான “ARM” ஏஆர்எம் எனும் – ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படம் மூலம் அசத்தவுள்ளார். மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கத்தில் டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இப்படம், முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளது. மலையாள வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக மிகப் பிரம்மாண்ட படைப்பாக இப்படம்…

Read More

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’ திரைப்படம்!

நல்ல கதையம்சம் உள்ள கதைகள் மொழிகளைக் கடந்து பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். சமீபகாலமாக தமிழ் சினிமா இப்படி பல நம்பிக்கை தரும் படங்களையும் திறமைசாலிகளையும் வரவேற்று வருகிறது. மைனாவில் ‘பாஸ்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்றவர் நடிகர் சேது. இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ என்ற ஆழமான உணர்வுப்பூர்வமான படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஒரு சாதாரண, அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவுகளால் உண்மையான காதல் சிதைந்து விடுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை. மலையாள நடிகை சம்ரிதி தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மற்ற நடிகர்களுடன் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர்…

Read More