Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுதும் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன். புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்குப்…
Read Moreவருண் தேஜ்ஜின் ’மட்கா’-விற்காக பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட நகரம்
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமான “மட்கா” படத்திற்காக, 15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது !! நடிகர் வருண் தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘மட்கா’. தற்போது இப்படத்தின் மூன்றாவது ஷெட்யூல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு விரிவான 35 நாள் ஷூட்டிங் ஷெட்யூலாகும், இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் 15 கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமோஜி ஃபிலிம் சிட்டியில் (RFC) விண்டேஜ் வைஸாக் நகர அமைப்பை, தயாரிப்புக் குழு உருவாக்கியுள்ளது. இது பிரம்மாண்டத்துடன் கூடிய பழைய வைஸாக் நகருக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் புதுமையான அனுபவமாக இருக்கும். ‘மட்கா’ மிகப்பெரும் பட்ஜெட்டில் பான்-இந்திய படமாக உருவாக்கப்படுகிறது. விண்டேஜ்…
Read Moreஅஸ்வத்தாமா – வாக அமிதாப்பச்சன், உச்ச யாஸ்கின் – ஆக கமல்ஹாசன்
இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”. பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என இப்படம் இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது. படம் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கல்கி 2898 கிபி இல், அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் கமல்ஹாசன் உச்ச யாஸ்கின் பாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. பார்வையாளர்கள் இருவரையும் ஒன்றாக ஒரே ஃபிரேமில்…
Read Moreபிரபாஸுக்கு வாழ்த்துக்கள் சொன்ன காந்தாரா “ரிஷப் ஷெட்டி”
‘கல்கி 2898 கிபி’ படமும் “காந்தாரா” படமும் இணைந்த ஒரு மகிழ்வான தருணம். காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி ‘கல்கி 2898 AD’ படத்தில் பயன்படுத்தப்பட்ட, எதிர்கால வாகனமான புஜ்ஜியை ஓட்டியது, இப்போது இணையம் முழுதும் பெரும் வைரலாகி வருகிறது. ‘கல்கி 2898 கிபி’ x “காந்தாரா” எனும் டேக்குடன் புஜ்ஜியை தான் ஓட்டும் வீடியோவை ரிஷப் ஷெட்டி டிவிட்டரில் பகிர, ரசிகர்கள் அதனைக் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர். புஜ்ஜியை ரிஷப் ஷெட்டி ஓட்டும் வீடியோ கல்கி படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. ரசிகர்கள் மத்தியில் கல்கி திரைப்படம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக, ஆனந்த் மஹிந்திராவும் புஜ்ஜியை ஓட்டியது வாகனத்தின் வசீகரத்தை அதிகப்படுத்தியது. ‘கல்கி 2898 கிபி’ படத்தின் முன்னணி நடிகரான பிரபாஸுக்கு ரிஷப் ஷெட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பிரபாஸின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார்.…
Read Moreகல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் – மற்றொரு வித்தியாசமான விளம்பர யுக்தி
சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. முழு வீடியோ லிங் : https://youtu.be/z6cZSWF7dy4 படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். வீடியோவில் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும்…
Read Moreசாய் துர்கா தேஜின் புதிய திரைப்படம் தொடர்பான அறிவிப்பு
‘விருபாக்ஷா’ மற்றும் ‘ப்ரோ’ ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து, மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் KP இப்படத்தை இயக்குகிறார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள், K.நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அட்டகாசமான போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கண்ணிவெடிகளால் சூழப்பட்ட ஒரு பாலைவனத்தின் மத்தியில் தனித்த பச்சை மரத்தைக் கொண்டுள்ள போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்த அதிரடி- பீரியட் – ஆக்சன் திரைப்படத்தில் சாய் துர்கா தேஜ் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார். முதல் ஷெட்யூலுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், தற்போது…
Read Moreபிரபுதேவாவின் பேட்ட ராப் பட டீஸரை வெளியிட்டார் விஜய் சேதுபதி
நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி…
Read Moreடிஸ்னி ஹாட் ஸ்டாரில் குடும்பங்களின் அமோக வரவேற்பில் “அரண்மனை 4”
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “அரண்மனை 4” திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார். அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தில், ரசிகர்களை ஒரு…
Read Moreமிகப் பிரம்மாண்டமான ஆக்ஷன் அவதாரத்தில் சன்னி தியோல் நடிக்கும் SDGM படம் ஜூன் 22 முதல் துவங்குகிறது !!
இந்தியாவையே தன் கதர் 2 படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். இவரது அடுத்த படம், மிகப்பெரும் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. நவீன் யெர்னேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் Y ரவிசங்கர் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் TG விஸ்வ பிரசாத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாகத் தயாரிக்க, பிளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்குகிறார். கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் கோபிசந்த் மலினேனி, #SDGM திரைப்படத்தை, முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னராக…
Read Moreஇசையமைப்பாளர் சதீஷ்நாதன் இசையில் வெளியாகவிருக்கும் ”வா தளபதி” பாடல்
தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது. தளபதியின் கடின உழைப்புக்கும், அவரின் வெற்றிக்கும், என்னையும் சேர்த்து கோடான கோடி ரசிகர்களின் அரவணைப்புக்கும் இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன். இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் எழுதியிருக்கிறார், மற்றும் திரைப்பட பாடகர், வேலு மற்றும் தீத்யா , பவன் குழுவினர்கள் இப்பாடலை பாடி இருக்கிறார்கள். வரும் 21ஆம் தேதி அன்று திரை பிரபலங்கள் இப்பாடலை தங்களது சமூக வலைதளத்தில் பகிரவும் இருக்கிறார்கள்.
Read More