பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” ( all we imagine as light ) திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில், cannes palme d or 2024 விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் ஃபோர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாருன் நாயகனாக…
Read Moreகல்கி 2898 கிபியில் பைரவாவின் நண்பன் புஜ்ஜி யார்..? விடை மே 22ல்
கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !! கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது ‘From Skratch EP4: Building A Superstar’ என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள் கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. “சூப்பர் ஹீரோ”, “பைரவாவின் சிறந்த…
Read Moreவிஜய் சேதுபதியின் அசத்தலான ACE பட டைட்டில் டீஸர்
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ்’ ( ACE)’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஏஸ்’ எனும் திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் கவனித்திருக்கிறார். கமர்சியல் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்தின். ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக…
Read More”என் நண்பர் விஜயகாந்திற்கு வானத்தைப் போல பாடல் கொடுத்த ஆர்.வி.உதயகுமாருக்கு நன்றி.” – சத்யராஜ்
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சத்யராஜ் சார் லெஜெண்ட்! வசந்த்ரவி சார், தான்யா ஹோப் இவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ராஜீவ் மேனன் சாருக்கு பிரேம் வைத்தது என்னுடைய பாக்கியம். படத்தில் என்னுடன் வேலைப் பார்த்த எல்லோருக்குமே நன்றி!”. விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் கோகுல், “படத்தின் தயாரிப்பாளர் மன்சூர் சாருக்கும் இயக்குநர் குகன் சாருக்கும் நன்றி. நிறைய சிஜி பணிகள், கரெக்ஷன் செய்திருக்கிறோம். புதிய டெக்னாலஜி, ஏஐ உபயோகப்படுத்தி இருக்கிறோம். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். சிறந்த பணியை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை உண்டு. நீங்கள்…
Read Moreபிரபலங்களால் பாராட்டப் பெற்ற “கோதையின் குரல்” குறும்படம்
தமிழில் ‘தங்க முட்டை’ மற்றும் தெலுங்கில் ‘பங்காரு குட்டு’ என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளான மே 16 (வியாழக்கிழமை) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் பலகையை கோபிநாத் நாராயண மூர்த்தி மற்றும் இணை இயக்குநர் கரிகாலன் பிரபலங்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மை கைண்டா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பான ‘கோதையின் குரல்’ குறும்படம் திரையிடப்பட்டது.…
Read More”இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள்” – இயக்குநர் பேரரசு
ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.. இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது.. இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம். பல வருடக் கனவு இது. இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் சார் படம் பார்க்காமலே விநியோகிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள்…
Read Moreஇயக்குநர் ஆறுமுகக்குமாருடன் விஜய் சேதுபதி இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் டீசர் வெளியீடு
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘VJS 51’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி…
Read More”நான் படங்களில் நடிப்பேனா..? என்கின்ற ஒரு கேள்வி திரையுலகில் உலவி வருகிறது” – மதுவந்தி
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘P T சார்’ வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ‘P T சார்’ ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும், இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வினில்… ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது… ஹிப்ஹாப் ஆதிக்கு இது வித்தியாசமான படம், மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டு சில விசயங்கள் புதுமையாக…
Read Moreமெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் ஒருங்கிணைக்கும் இசைஞானியின் இசை நிகழ்ச்சி
இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விழாவினில் திரு அருண் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது… தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ்…
Read Moreவெப்பன் படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக ராஜீவ் மேனன்
மில்லியன் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் எழுத்தாளர்-இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும்போது, ”இந்த மாதம் உலகம் முழுவதும் உள்ல திரையரங்குகளில் வெளியாக ’வெப்பன்’ திரைப்படம் தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படத்தில் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளோம். நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றும் நம்புகிறேன். சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லராக ‘வெப்பன்’ படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து…
Read More