ஆலகாலம் – திரை விமர்சனம்

கிராமத்து ஏழைத்தாயின் ஒரே மகனான நாயகன் ஜெயகிருஷ்ணா சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். படிப்பு முடிந்ததும் தங்களது நிலை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயகிருஷ்ணாவின் தாய் ஈஸ்வரி ராவ். இதற்கிடையே ஜெயகிருஷ்ணாவின் நேர்மையான கேரக்டர் பார்த்து சக மாணவி சாந்தினி காதலாகிறார். சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக் கொள்கிறார். தாயிடம் அப்புறம் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் திருமணமும் செய்கிறார். இதன்பிறகு ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. இதனால், ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை நெகிழ்ச்சி பொங்க சொல்வது தான் இந்த ‘ஆலகாலம்’. நாயகனாக ஜெய கிருஷ்ணமூர்த்தி, கதாபாத்திரமாக மாற ஆரம்பத்தில் தடுமாறினாலும், போகப்போக கதையின் நாயகனாக தன்னை நிலைநிறுத்தி விடுகிறார். குடிக்கு அடிமையான பிறகு இவரது நடிப்பு வேறு…

Read More

’மான் கராத்தே’ இயக்குநருடன் கை கோர்க்கும் அருண் விஜய்

  தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். BTG Universal நிறுவன தலைவர் திரு.பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, BTG Universal நிறுவன தலைமை திட்ட இயக்குநர் டாக்டர் M.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாக பணிகளைகளையும் செய்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்கவிழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார். டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாகக் கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,…

Read More

மெரினாவில் ரசிகர்களைச் சந்திக்கும் இன்ஸ்பெக்டர் ரிஷி படக்குழுவினர்

  மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷி இறுதியாக ப்ரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட தருணத்தில் ஒரு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை கரை புரண்டோடச் செய்து, அவர்களின் உற்சாகத்தை வெளியிடச்செய்யும் வகையில், பிரைம் வீடியோ, மனதை ஒன்றிப்போகச்செய்யும் இந்தத் தொடர் நிகழ்ச்சியின் விளம்பர போஸ்டர்களை சென்னை முழுவதும் நிறுவியது. ஒரு வலைப் பின்னலில் இருந்து ‘வனராட்சி’ AKA ‘ராட்சி’ என்ற ஒரு கொடிய புராணகால வன மோகினி மற்றும் பழங்குடியினருக்கான வன தெய்வம், வெளிவரும் இதயத்தைத் பிழியும் காட்சிகளை இந்த விளம்பரக் காட்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. விளம்பரப் பலகைகளின் ஓரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் சிலந்தி வலை தமிழ்நாட்டின் தென்காடு என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக செயல்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட இந்த…

Read More

ஏப்ரல் 14ல் மோகன் நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் “ஹரா”வின் டீசர்

  பரப்பரப்பான பான் இந்தியா ஆக்ஷன் படமான ‘ஹரா’ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி-யின் சமீபத்திய படைப்பான ‘பவுடர்’ ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான ‘ஹரா’-வின் டீசர் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். டீசரை தொடர்ந்து திரைப்படம் விரைவில் திரையரங்களில் வெளியாகவுள்ளது, அதுவும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர்…

Read More

சுயம்பு -வில் நிகிலுடன் இணையும் நபா நடேஷ்

பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நிகில் நடிப்பில் உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் நடிகை நபா நடேஷ் இணைந்துள்ளார்!   ’கார்த்திகேயா 2’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பிரபலமடைந்த நிகில் தற்போது நடிக்கும் ’சுயம்பு’ திரைப்படம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகும். பழம்பெரும் வீரராக நடிக்கும் நடிகர் நிகில் படத்தில் தன் கதாபாத்திரத்திற்காக ஆயுதம், தற்காப்பு கலை, குதிரை சவாரி போன்றவற்றில் தீவிர பயிற்சி எடுத்துள்ளார். பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் நடிகர் நிகிலின் இருபதாவது படமாகும். தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் இந்த பான் இந்தியா படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். ’சுயம்பு’ திரைப்படம் உயர்தர தொழில்நுட்ப மற்றும் அதிக தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாகிறது. இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.…

Read More

கோடை விடுமுறைக்கு ‘கள்வன்’ படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான ட்ரீட்

இசையமைப்பாளர்- நடிகர் எனப் பன்முகம் கொண்ட ஜிவி பிரகாஷ் குமார், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட அதேசமயம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரக்கூடிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரின் ‘கள்வன்’ திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.   இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அனுபவத்தை பகிரும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் பி.வி. ஷங்கரை இதற்கு முன்பு ஒளிப்பதிவாளராகவும் பார்த்திருக்கிறார். ‘கள்வன்’ படத்தின் ஸ்கிரிப்டை ஷங்கர் சொன்னபோது, ​​ஜிவி பிரகாஷால் காடுகளின் சூழலை தெளிவாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஷங்கர், ஒளிப்பதிவாளராக இருப்பதால், திரைக்கதையுடன் காட்சி நேர்த்தியை திறமையாகக் கலந்து, பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளார். படத்தைப் பார்த்த ஜிவி பிரகாஷ், இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…

Read More

கள்வன் குடும்பங்களை கவர்ந்திழுக்கும் பொழுதுபோக்கு திரைப்படம்

தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தரம்மிக்க படைப்புகளைத் தயாரிப்பதன் மூலம் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்திலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் இப்போது வரவிருக்கும் ‘கள்வன்’ படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர தயாராகி வருகிறது. ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போதும் பல்வேறு ஜானர் மற்றும் தனித்துவமான கதைக்களங்களைக் கொடுக்க ஆர்வமுடன் உள்ளது என்கிறார் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு. அட்வென்ச்சர் ஜானரில் ஏதாவது புது முயற்சி செய்ய வேண்டும் என காத்திருந்தபோது, ‘கள்வன்’ திரைக்கதை மூலம்…

Read More

‘பிபி 180’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியான டேனியல் பாலாஜிக்கான அஞ்சலி குறிப்பு!

எங்கள் ‘பிபி 180’ திரைப்படத்தின் வில்லனாக நடித்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி குறிப்பு! அன்புள்ள டேனியல், அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு நல்ல மனிதருக்கு பிரியாவிடை கொடுக்க இந்த அஞ்சலி குறிப்பை எழுதுகிறோம். உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் உட்பட பலரது மனதிலும் அழியாத இடத்தை விட்டு சென்றிருக்கிறது. உங்களது கடைசி திரைப்படமான ’பிபி 180’ இன் தயாரிப்பாளர் என்ற முறையில் கதாபாத்திரங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும், நம்பகத்தன்மையுடனும் திரையில் கொண்டு வருவதற்காக எந்த அளவுக்கு நீங்கள் இணையற்ற அர்ப்பணிப்பை கொடுக்கிறீர்கள் என்பதை நேரடியாக காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திரையில் உங்கள் நடிப்பு…

Read More

சூப்பர்குட் சுப்பிரமணி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரமன்’

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ‘ஜெய்பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஸே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனை தமிழ் சினிமாவின்…

Read More

புதுமையான வடிவத்தில் அசத்தும் “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

  ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கேன் (can).” புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ், திரைப்படங்களில் 4 வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றிய பிறகு, முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி, நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ். படத்தின் கதாபாத்திரங்களைக் கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், நவீன வடிவிலான ஃபர்ஸ்ட்…

Read More