சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனித்துவம் வாய்ந்த கேரக்டர்கள் மூலம் புகழ் பெற்றவர். இவர் ஸ்டைலிஷான கேரக்டரில் நடித்து வரும் SSMB28 திரைப்படம் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் கூட்டணியில் ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரைக்கதை வித்தைக்காரர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது SSMB28. இந்த முறை, கதையின் களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும். இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பை மெருகேற்றி, இதுவரையில்…
Read Moreசத்யராஜ் நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தில் இசைமைப்பாளராகும் பாடகர்
திரைப்பட பாடலாசிரியர் கு.கார்த்திக், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். உதித் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள் பங்களிப்பை கொடுத்துள்ள இந்த படத்தின் இசை ஆல்பம் வரும் மார்ச் 29ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார். சத்யராஜின் கதாபாத்திரத்தை சுற்றி வரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் ஸ்ரீபதி, சதீஷ் சரண் இயக்கத்தில், சைமன் கிங் இசையமைப்பில் அசுரன் புகழ் அம்மு அபிராமி மற்றும் கோமல் சர்மா கதாநாயகிகளாக நடித்துள்ள…
Read More‘செங்களம்’ இணையத்தொடரின் வெற்றியை அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு
ZEE5 தளம் வழங்க, Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்து, ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான ‘செங்களம்’ இணையத் தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இத்தொடருக்கு கிடைத்து வரும் மாபெரும் வரவேற்பை படக்குழுவினர் வித்தியாசமான வகையில் கொண்டாடியுள்ளனர். செங்களம் அரசியல் சம்பந்தமான தொடர் என்பதால், தமிழக அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களுக்கு சென்று, மாலையிட்டு மரியாதை செய்ததுடன், துப்புரவு பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி இந்த இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடியுள்ளது படக்குழு. தமிழின் முதல் அரசியல் சம்பந்தமான முழு நீள இணையத்தொடராக வெளியாகியுள்ள செங்களம், அரசியலின் கோர முகத்தையும், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரையிலான திரை வரலாற்றில் அரசியல் களம்…
Read Moreகபடி கதைக்குள் இணைந்த தாத்தா-பேரன் பாசப்போராட்டமே ‘பட்டத்து அரசன்’
அதர்வா மற்றும் ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் பட்டத்து அரசன். புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், துரை சுதாகர், ரவி காலே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஏ.சற்குணம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படம் குறித்து நாயகன் அதர்வா பேசுகையில், “சற்குணம் சார் இந்த கதையை என்னிடம் சொன்ன போதே நிச்சயம் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அதே சமயம், முதலில் என்னிடம் கதை சொல்லும் போது இதில் ராஜ்கிரண் சார் இல்லை. ஆனால், ராஜ்கிரண் சார் போன்ற ஒருவர் இந்த வேடத்தில் நடிக்கிறார் என்று தான் இயக்குநர்…
Read More10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த சிவாங்கியின் ‘தீவானா’ பாடல்
இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்ட் ‘#1MinMusic’ , ரீல்ஸ் வடிவத்துடன் இசை வீடியோக்களை வெளியிட படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்துள்ளது. ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்குப் இன்ஸ்டாகிராம் பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு #1MinMusic’, இதில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுவருகிறார்கள். இன்ஸ்டாகிராம் தமிழுக்காக Silver Tree இணைந்து 25 கலைஞர்களுடன் பணியாற்றுகிறது. அந்த வரிசையில் பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகை சிவாங்கியினுடைய ‘தீவானா’ என்ற #1MinMusic சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு அனி வீ இசையமைத்துள்ளார். சிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 1 மில்லியன் அதாவது 10 லட்சம்…
Read Moreஎஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அவரது உதவியாளர் இயக்கிய இணைய தொடர் ‘வதந்தி’ சென்னையில் முன்னோட்டம் வெளியிட்டு பிரைம் வீடியோ கொண்டாட்டம்
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில்…
Read Moreசீறிய சிங்காரவேலன் மிரட்டும் உஷா ராஜேந்தர் சிலம்பரசன் பஞ்சாயத்தில் உண்மை நிலவரம் என்ன?
தமிழ் சினிமா நடிகர்கள் நடிக்கும் படங்களின் தகவல்களை சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கும் வெளிநாட்டு மைதானங்களில் பேனர் வைத்து கேட்டு அசரடித்தார்கள் நடிகர் சிலம்பரசன் நடித்த படங்களின்தயாரிப்பாளர்கள், நடிப்பதற்காக முன்பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள், படவெளியீட்டுக்காக ராஜேந்தர்கை நீட்டி வாங்கிய கடன் இவற்றின் மொத்த மதிப்பு 10 கோடி ரூபாய் சிலம்பரசன் ஒரு படத்தில் நடிப்பதற்காக தற்போது வாங்கும் சம்பளம் எட்டு கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்கள், கடனை திருப்பிக்கொடுக்க வேண்டியவர்களிடமும் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உஷா ராஜேந்தர் அவர்களை அழைத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இடியாப்ப சிக்கலாக நீடிக்கிறது இந்த சூழ்நிலையில் சிலம்பரசன் நடிக்கும் படங்களுக்கு இடையூறு செய்தால் இந்திய பிரதமரிடம் முறையிடுவேன் என கூறி தமிழ் சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் சிலம்பரசனின் தயார் உஷா ராஜேந்தர் தொழில்சார்ந்த சிக்கல்களை சம்பந்தபட்ட சங்கங்களில் பேசி…
Read Moreகபாலி நாயகி ராதிகா ஆப்தேவுக்கு எதிராக டீவிட்டரில் போராட்டம்
தோனி, கபாலி தமிழ்படங்களில் நடித்த இந்தி நடிகை ராதிகா ஆப்தே கதாபாத்திரத்திற்காக நிர்வாணமாகவும் நடிக்க கூடிய நடிகை என்பதுடன் எதிர்மறையான விமர்சனங்கள்பற்றிகவலைப்படாதவர் இப்போதுநடிகை ராதிகா ஆப்தேவுக்கு எதிராக டிவிட்டரில் திடீரென்று போராட்டம் வெடித்துள்ளது. #BoycottRadhikaApte என்ற ஹேஸ்டேக் மூலமாக ராதிகா ஆப்தேவைக் கண்டித்து டிவீட்டரில் திடீர் எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. காரணம், சமீபத்தில் ஆபாசப் படங்களைத் தயாரித்து, வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். அது குறித்து இதுவரையிலும் எந்தவொரு பாலிவுட் நடிகரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. நாட்டு நடப்பு சம்பந்தமாகவும், பெட்ரோல் விலை சம்பந்தமாகவும், குடியுரிமைச் சட்டம் சம்பந்தமாகவும் பல்வேறு நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர் ஆனால், இப்போது தேசத்திற்கு ஒரு அசிங்கமாகத் தெரியும் இந்த ஆபாசப் பட வழக்கில் ஒரு…
Read Moreமாயன் படத்தில்கதையின் நாயகனாக சிவபெருமான்
தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு சிவபெருமானை கதையின் நாயகனாக கொண்ட படமாக ‘மாயன்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த பிரம்மாண்டமான பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் கண்ணன் தயாரித்துள்ளார். முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதையின் நாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் மூவரும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், தீனா, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன், கே.கே.மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆங்கில பதிப்பில் இவர்கள் அனைவருமே சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்கள். பின்னணி இசை – ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு – அருண் பிரசாத், கலை இயக்கம் – வனராஜ், வி.எஃப்.எக்ஸ். – ரமேஷ்…
Read Moreதோனி பிரதமர் விஜய் முதல்வர் மதுரையில் பரபரப்பு
நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார். நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இன்று இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தார். அங்கே அவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்பு முடிந்த பிறகு தோனியை விஜய் காரவன் வரையிலும் உடன் சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார். இந்தச் சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் இப்போது எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. விரைவில் இதன் காரணம் தெரிய வரலாம்..! ஆனால் இப்போது இதுவல்ல பிரச்சினை.. இந்தச் சந்திப்பு முடிந்ததும்…
Read More