எனக்குக் கல்யாணமா? – சிம்பு மறுப்பு!

சிம்புவின் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் பரவிவரும் நிலையில், சில நாள்களாக தனது தாயார் பார்த்துள்ள உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கு சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார் என்று செய்திகள் பரவின. அது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். ‘என்னுடைய பயணம் மற்றும் ஊடகங்களுடனான பிணைப்பு என்பது நீண்ட காலமானது. என்னுடைய சினிமா வாழ்க்கையைத் தாண்டி ஊடகங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. ஒருவேளை ஊடகங்களில் பங்களிப்பு இல்லாமல் இருந்தால், என்னால் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது சொந்த சகோதரராகவும் மகனாகவும் நினைத்திருக்க மாட்டார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள்…

Read More

மாநில கட்சி அந்தஸ்தை தேமுதிக, பாமக இழந்தது!

மக்களவை தேர்தலில் 8 சதவீதம் கூட வாக்குகளை பெற முடியாததால் தேமுதிக மற்றும் பாமகவின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்தானது. தமிழ் திரைப்படத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து, மக்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த். மக்கள் செல்வாக்கை பெற்ற அவர், 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கட்சி தொடங்கும்போதே, “நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி அமைப்பேன்” என்று விஜயகாந்த் கூறினார். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. புதிய கட்சி தொடங்கியதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். பின்னர் 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை…

Read More

திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!!

திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ  வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது இயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக…

Read More

மே 30ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரியுள்ளார். 17ஆவது மக்களவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வென்றுள்ளது. 16ஆவது மக்களவைக் கலைக்கப்பட்டதாக நேற்று (மே 25) குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனிலிருந்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக…

Read More

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா!!

குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியதாவது, “இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்குத் தெரியும். மிக நன்றாக வந்திருக்கிறது படம்.…

Read More

இனி என் வழி சகல தரப்பும் விரும்பும் மான்ஸ்டர் வழி – எஸ். ஜே. சூர்யா அறிவிப்பு

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :- ‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகை யாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. புகழை அனைவருக்கும் சேர்க்க அவர்கள் தவறியதில்லை. அதற்கு ஆதாரம் தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ.50/- கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் சோலைவனமாக தெரிகிறது. நேற்று மக்களோடு…

Read More

’ஒத்த செருப்பு சைஸ் 7’ கதையின் கரு 15 வருடங்களுக்கு முன்பு தோன்றியது! – பார்த்திபன்

பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்கும் உலக நாயகன் கமல்ஹாசன், ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமாவிலும் படங்களை கொடுப்பது சாத்தியம் என்பதை நிரூபித்த இயக்குனர் ஷங்கர், திரைக்கதை வித்தகரும், பார்த்திபனின் குருநாதருமான பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பார்த்திபன்…

Read More

‘களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக களமிறங்கும் ‘பப்ளிக் ஸ்டார்’!

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை பெற்றது தான். இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக, தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை தொடர்ந்து ‘களவாணி 2’ பத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ‘களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தனது கெட்டப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் சில சிறு முதலீட்டு படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், பிறகு…

Read More

“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு!

ஜஸ்ட் இரண்டே இரண்டு படங்கள்தான் இயக்கி இருக்கிறார் ராஜு முருகன். ஆனால் அந்த இரு படங்களின் தாக்கம் கோலிவுட்டையும் தாண்டி இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கிக் கொண்டே இருக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்கா மல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய “துணிவின் பாடகன் பாந்த் சிங்” என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது. இந்த நூலை தமிழில் கமலாலயன் மொழி பெயர்த்திருக்கிறார்.…

Read More

தங்க மகளை தங்கம் வழங்கி பாராட்டிய விஜய் சேதுபதி!

தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கியது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம்.  சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த தங்கமங்கையை மேலும் உற்சாக படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .

Read More