காதல் தோல்வி, தந்தை உடல்நலக் குறைவு என்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நாயகி பூர்ணிமா ரவிக்கு மன அழுத்தத்தை கூட்டி வைக்க… மன உளைச்சலோடு மல்லுக்கட்டும் மகளை அப்படி காண சசிக்காத தந்தை, மகளின் மனநிலையில் மாற்றம் காண விரும்புகிறார். பிடித்த இடத்துக்கு சுற்றுலா சென்று வர கேட்டுக்கொள்கிறார். மகளும் அதன்படி, தன் சிறுவயதில் தன்னுடன் விடுதியில் தங்கிப் படித்த சில நண்பர்களை தேடி பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவருக்கு வைபவ் முருகேசனின் அறிமுகம் கிடைக்க.. இருவரும் இணைந்து பயணத்தை தொடர்கிறார்கள். இந்த பயணம், அவர்கள் இருவரது வாழ்விலும் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்தது? நாயகி தேடிச் சென்ற நண்பர்கள் கிடைத்தார்களா? என்பதை பயணம் வழியே நம் மனம் சந்தோஷ நிறைவில் பொங்கி வழிய வழிய தருவதே இந்த ‘யெல்லோ’. யூடியுப் பிரபலமான பூர்ணிமா ரவி, சில…
Read Moreதிடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!
மும்பை, நவம்பர் 20, 2025:உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’. இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்ட ஆனால் பார்த்திராத களத்துடன் கதை இருக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில் கோமதி சங்கர் நடித்துள்ளார். திடுக் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொலை மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியை ‘ஸ்டீபன்’ தர இருக்கிறது. தமிழில் தனித்துவமான கதைகளைத் தர வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ‘ஸ்டீபன்’ இருக்கும். கதைக்கேற்ற அதன் துரத்தும் இசையும் உணர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும். வளர்ந்து வரும் படைப்பாளிகளும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி பெயர்…
Read More“லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் பெரியாரிஸ்ட் சுப. வீரபாண்டியன்.
உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக்கதைகளால் பெரிதும் பாராட்டைப் பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன், தற்போது “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக திரு.சுப. வீரபாண்டியன் நடிக்கிறார். இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறியதாவது: தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கு தான் இந்த “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு”. இந்தக் கொலை வழக்கு பற்றிப் பல ஆராய்ச்சிகளைத் தழுவியே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தக் கொலை வழக்கின் உண்மைச் சம்பவங்கள், இதற்கு பின்னால் அமைந்திருக்கும் மர்மங்களைப் பற்றி இன்னும் உண்மைத்தன்மையுடன் கொண்டு வருவதற்காக ஐயா சுப. வீரபாண்டியன் அவர்களும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.…
Read Moreதனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார். அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார். இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு நினைவிடத்தக்க நேரத்தை பகிர்ந்துகொண்டார். சமூக நலத்திற்கான தனது பற்றும், மனிதநேயத்தை மையமாக கொண்ட செயல்பாடுகளும் வெளிப்படுத்திய இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது வாழ்க்கையில்…
Read More“மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !
சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “மாண்புமிகு பறை “. பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இயக்குநர் விஜய் சுகுமார் பேசியதாவது.., எங்களை வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்புமிகு பறை எங்கள் தயாரிப்பாளர் சுபா & சுரேஷ் ராம் தான் எழுதியுள்ளார்கள். பறையிசை ஒரு பொதுவான…
Read Moreதமிழ்நாட்டின் புதிய பொழுதுபோக்கு சகாப்தமான வொண்டர்லா சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று திறக்கப்படுகிறது!
தமிழ்நாட்டில், வொண்டர்லா சென்னையில் இந்தியாவின் முதல் பொலிகர் & மாபில்லார்ட் (பி & எம்) இன்வெர்ட்டட் கோஸ்டர் ‘தஞ்சோரா’ மற்றும் தனித்துவமான உயர்த்தப்பட்ட ஸ்கை ரெயில் என இவை அனைத்தும் அறிமுகமாகிறது. சென்னை, 19, நவம்பர் 2025: இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமான வொண்டர்லா ஹாலிடேஸ், அதன் ஐந்தாவது பெரிய திட்டமான வொண்டர்லா சென்னை அறிமுகத்தை இன்று அறிவித்தது. இது இந்திய குடும்பங்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழா. சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் 64.30 ஏக்கர் பரப்பளவில் (தற்போது 37 ஏக்கர் பரப்பளவு) இது உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ரூ. 611 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட வொண்டர்லா சென்னை, எதிர்கால புதுமை மற்றும் பண்டைய தமிழ் கட்டிடக்கலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்ற முக்கிய பிரமுகர்கள் டிசம்பர் 1,…
Read Moreபெற்றோர்களுக்கு உறுதுணையாக இல்லாதவர்கள் பிள்ளைகளே இல்லை – ’டிரம்ப் கார்டு’, ‘சேரநாட்டு யானைதந்தம்’ பட அறிமுக விழாவில் இயக்குநர் பேரரசு ஆதங்கம்
லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’. வெளிநாட்டில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வெளிநாட்டுக்கு படிக்க செல்ல விரும்புகிறவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விசயங்களையும் மையமாக வைத்து உருவாகும் ‘டிரம்ப் கார்டு’ படத்தை ஜியோ ராஜகோபால் இயக்குகிறார். காதல் கதையாக உருவாகும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தை பூலோகம் ரவி இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்கிறார். ‘டிரம்ப் கார்டு’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிலாக் பாண்டி நடிக்கிறார். இவருடன் ஜி.எம்.குமார், இ.வி.கணேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படங்களின் அறிமுக விழா நவம்பர் 15 ஆம் தேதி,…
Read Moreடெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்
சென்னை, நவம்பர் 14, 2025 — சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி, நவீன டெர்மடாலஜி மற்றும் காஸ்மெடாலஜி நிபுணத்துவத்தால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை ஸ்கின் கேர் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் டெர்மிபியூரின் பார்வையை வெளிப்படுத்தியது. அறிவியல் புதுமைகள், தனிப்பயன் சிகிச்சைகள் மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட ஸ்கின் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு, இந்த கிளினிக் அழகு, நம்பிக்கை மற்றும் மருத்துவத் தரத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் நோக்கம் கொண்டுள்ளது. நடிகை பிரியா ஆனந்த் கூறியதாவது: “டாக்டர் சௌம்யா எனக்கு மிக நெருங்கிய தோழி. நான் முதல் முறையாக அவருடைய…
Read Moreமீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ்,…
Read More‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது
5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா. தக்ஷ் மற்றும் மாடில்டா பாஜர் முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று இது வரை 1.7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா, ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்திற்கு தனது காலத்தால் அழியாத திறமையின் மூலம் சிம்பொனி இசையை வழங்கியுள்ளார். மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்ட இந்த இசை, படத்திற்கு ஆழத்தையும் வலுவையும் சேர்த்துள்ளது. இப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த திறமை…
Read More