இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!

தனித்துவமான, உள்ளடக்கம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து, பல அடுக்குகளுடன் கூடிய கதாநாயகன் கதாபாத்திரங்களில் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிற நடிகர் கவுதம் ராம் கார்த்திக், தற்போது வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப் எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெயரிடப்படாத திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கிரைம் த்ரில்லர் ஆக உருவாகவிருக்கிறது. இதில் கவுதம் ராம் கார்த்திக், ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கூறியதாவது, “நாங்கள் வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவத்தை…

Read More

இது நல்ல படம்; விமர்சகர்கள் பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..!” – இயக்குநர் பாலா

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, “இப்படி ஒரு வித்தியாசமான ஆடியோ லான்ச் பார்த்ததில்லை! எனக்கு தெரிந்தது இயக்குநர் ராம் மட்டுமே. பாலாவுடன் அவரைப் பார்த்து இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய இயக்குநர், ஒருவர் பெரிய நடிகர். என்னதான் அவர்களுக்கு பணம், புகழ் இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தகப்பன் என்று நேரம் செலவிடுவதை பார்க்கும் போது தான் நான் இதை மிஸ் செய்து…

Read More

மேதகு பட இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் இசக்கி கார்வண்ணன் நடிக்கும் ‘ஆட்டி’!!

  சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் பெற்ற படம் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் அதில் கதாநாயகனுக்கு இணையான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது ‘ஆட்டி’ என்கிற படத்தில் கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இசக்கி கார்வண்ணன். ‘மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டுவின் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் தயாரித்துள்ளார். அயலி புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்திய கதையாக இது உருவாகியுள்ளது. குறிப்பாக வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழின குல தெய்வங்கள் பற்றி விரிவாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஊட்டி,…

Read More

‘3 பிஎச்கே’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!!

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த…

Read More

டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது!!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான  ஆக்‌ஷன் அவதாரத்தை  வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல  இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம்  இயக்குநராக  அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். நேற்றைய அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து,  இந்த திரைப்படத்தின் தலைப்பும், ராஷ்மிகாவின் மிரட்டலான  லுக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர். தெலுங்கில்: இயக்குநர் ஹனு ராகவபுடி தமிழில்: “குபேரா” படத்தில் நடித்த சக நடிகர் தனுஷ் இந்தியில்: “சாவா” பட நாயகன் விக்கி…

Read More

“ சின்னதா ஒரு படம் ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.

நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே ‘சின்னதா ஒரு படம்’. நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டவை. ஜானி டிசோசா.எஸ் இயக்கத்தில் உருவாகும் “சின்னதா ஒரு படம்” ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படமாகும். புதிய கதை சொல்லும் முறைகளுடன் பல்வேறு மனித நிலைமைகளை மையப்படுத்தும் சுவாரஸ்மான கதைகளையும் இத்திரைப்படம் வழங்குகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு முயற்சியாக இத்திரைப்படம் பேசப்படும் என்று நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது. இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு (டாடா படத்தின் இயக்குநர்) எம்ஜி ஸ்டுடியோஸின் கீழ் வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு M.D. திருச்சித்திரம் தயாரிப்பின் கீழ் தயாரித்துள்ளார். அஞ்சாமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக இது இவரது இரண்டாவது படமாகும். *படத்தின் நடிகர்கள்:* விதார்த், பூஜா தேவரையா,…

Read More

யஷ் ராஜ் பிலிம்ஸின் வார்-2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது . 50 நாட்களில் வெளியாகவுள்ள வார் 2 படத்திற்காக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்!*

யஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்சில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்சன் படம் வார் 2 திரைப்படம் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் போன்ற முக்கிய சர்வதேச மார்கெட்டைல் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் பிரத்தியேகமாக திரையிடப்படுகிறது .மேலும் இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் திரை களிலும் இப்படம் வெளியாகவுள்ளது . மும்பை, இந்தியா: இந்தியாவின் முதன்மையான திரைப்பட ஸ்டுடியோ மற்றும் நாட்டின் மிகப்பெரிய சினிமா உரிமையாளர்களின் தாயகமான யஷ் ராஜ் பிலிம்ஸ், வார் 2 படத்தை பிரத்யேகமாக உலகளவில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடுவதை பெருமையுடன் அறிவித்துள்ளனர் . பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளுடன் ஸ்பை த்ரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படம் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா…

Read More

குட் டே – திரை விமர்சனம்

பணிப்பெண்ணை சீண்டிய அலுவலக மேலாளரை தட்டிக் கேட்டபோது உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்துகிறது நிர்வாகம். அம்மாவின் மருந்து செலவுக்கு பணம் அனுப்பினால் கோபத்தில் எரிந்து விழும் மனைவி, வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவனிடம் முறை வாசலுக்கும் சேர்த்து பணம் கேட்கும் உரிமையாளரிடம் ஆத்திரம்.. உடல்நிலை சரியில்லாத பெண் குழந்தை, 1000 ரூபாய் கடன் கேட்டால், அவமானப்படுத்தும் அறை நண்பன்… இப்படி ஒரு நாள் முழுவதும் பல அவமானங்களை கடந்து செல்லும் நாயகன், அத்தனைக்கும் ஒரே தீர்வு மது தான் என்று எண்ணி அன்றைய இரவு மதுவில் குளிக் கிறார். இதற்கிடையே காணாமல் போன குழந்தையை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் காவல்துறையும், நாயகனால் பாதிக்கப்பட, குழந்தையை தேடும் காவல்துறை தங்களை டென்ஷன் ஆக்கிய நாயகனையும் சேர்த்து தேடுகிறது. நாயகன் போலீசில் சிக்கினாரா… கடத்தப்பட்ட குழந்தையை காவல்துறை…

Read More

மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது!

’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அதிரடி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்‌ஷன் சினிமா அனுபவத்தை ரசிகர்கள் பெற இன்னும் ஒரு மாதமே உள்ளது. மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோ குடும்பம் vs பூமியை விழுங்கும் கேலக்டஸ் மோதல் ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 1960களின் ரெட்ரோ-ஃப்யூச்சரிஸ்டிக் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், புதிய MCU Lineup-ஐ அறிமுகப்படுத்துகிறது. ரீட் ரிச்சர்ட்ஸ்/ மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் ஆக பெட்ரோ பாஸ்கல், சூ ஸ்டார்ம்/ இன்விசிபிள் வுமனாக வனேசா கிர்பி, ஜானி ஸ்டார்ம்/ ஹ்யூமன் டார்ச்சாக ஜோசப் க்வின் மற்றும் பென் கிரிம்/ தி திங் ஆக எபோன் மோஸ்-பக்ராச் ஆகியோர் நடித்துள்ளார். சரி, இவர்களின் நோக்கம் என்ன? பூமியை விழுங்கத் துடிக்கும் வலுவான சக்தியான கேலக்டஸ்…

Read More

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர், மாமன் ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது!!

~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படத்தை, ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. ~ இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மாமன்” திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம், குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது. இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார். மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ZEE5 மற்றும் ZEE தமிழ்…

Read More