பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான திரைப்படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் தான் ‘கரிகாடன்’. ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக ‘கரிகாடன் ‘ உருவாகியுள்ளது. இப்படத்தில் காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய் சந்தூர், சந்திரபிரபா,கரிசுப்பு, கிரி,பாலராஜாவாடி, மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ். இசை: அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி, ஒளிப்பதிவு: ஜீவன் கவுடா, எடிட்டிங் தீபக் சி.எஸ், கலை ரவி, கவுடல்லி சாஷி, நடனம் ராம்கிரண். ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர்: தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார். இணைத் தயாரிப்பு: ரவிக்குமார் எஸ்.ஆர்.இசையையும் சிலிர்ப்பையும் இணைக்கும் ‘கரிகாடன்’ படத்தின்…
Read Moreமார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு
அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார். நாடு முழுவதும் 23 நகரங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படும். இதில் அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பொறுப்பேற்க ஊக்குவிப்பதும் தான் இந்த CSR பிரச்சாரத்தின் நோக்கமாகும். ஹைதராபாத், ஜூன் 11, 2025: சுகாதார துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள FUJIFILM இந்தியா, அப்போலோ மருத்துவமனை அறக்கட்டளையின் CSR பிரிவின் துணைத் தலைவர் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா முன்னிலையில் , ”முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்” ( Find It Early, Fight It Early) எனும்…
Read More‘காட் ஆஃப் மாஸஸ்’ நந்தமுரி பாலகிருஷ்ணா – பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு – ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம் . தேஜஸ்வினி நந்தமுரி கூட்டணியில் தயாராகும் ‘அகண்டா 2 : தாண்டவம் ‘ படத்தின் டீசர் ‘பத்மபூஷண் ‘ பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகிறது.
‘காட் ஆப் மாஸஸ் ‘ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தயாராகி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘அகண்டா 2 : தாண்டவம்’. பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘அகண்டா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக அகண்டா படத்தின் இரண்டாம் பாகம், அதிரடி மிக்க ஆக்சன் படைப்பாக இருக்கும் என படக் குழு உறுதி அளிக்கிறது. ஆக்சன் காட்சிகள்- ஆன்மீக பின்னணியுடன் கலந்திருக்கிறது. இந்த திரைப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார். ‘ பத்மபூஷண் ‘நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ‘ அகண்டா 2 : தாண்டவம்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். படக்குழு, படத்தின் நாயகனான…
Read More‘அகண்டா 2 : தாண்டவம் ‘ படத்தின் டீசர் ‘பத்மபூஷண் ‘ பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது
‘காட் ஆஃப் மாஸஸ்’ நந்தமுரி பாலகிருஷ்ணா – பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு – ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம் . தேஜஸ்வினி நந்தமுரி கூட்டணியில் தயாராகும் ‘அகண்டா 2 : தாண்டவம் ‘ படத்தின் டீசர் ‘பத்மபூஷண் ‘ பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகிறது. ‘காட் ஆப் மாஸஸ் ‘ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தயாராகி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘அகண்டா 2 : தாண்டவம்’. பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘அகண்டா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக அகண்டா படத்தின் இரண்டாம் பாகம், அதிரடி மிக்க ஆக்சன்…
Read Moreஹார்ட்பீட்’ வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்!
கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட்பீட்’ வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த ‘தேன்மிட்டாய்’ சீரிஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிட் காலக்கட்டத்தில் ஹிட் ஆன இந்த சீரிஸ் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதுடன் திரைத்துறையினர் கவனத்தையும் தீபா கவர்ந்தார். ஹாட்ஸ்டார் வெப்சீரிஸூக்காக எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் ஷியாம் தீபாவை தொடர்பு கொண்டதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த கதாபாத்திரத்தை அவரோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே ஒத்துக் கொண்டார். முதல் நாள் மிகவும் நம்பிக்கையுடன்…
Read Moreகட்ஸ் – திரை விமர்சனம்
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, அதிகார பலமிக்கவர்ளை எதிர்க்கத் துணிந்தால் என்னாகும்? ரங்கராஜ் நேர்மையான இன்ஸ்பெக்டர். அநீதிக்கு துணை போகாதவர். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கத் தயங்காதவர். இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னணியில் அந்த ஊரின் தொழில் அதிபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவர, கைது செய்ய முனைகிறார். அதற்கு தண்டனையாக அவரது கர்ப்பிணி மனைவி தொழிலதிபரின் அடியாட்களால் கொல்லப்படுகிறார். தாயை இழந்து வாடும் ஐந்து வயது மகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறார் போலீஸ் அப்பா. இந்த சமயத்தில் அவரது தந்தையும் இதே நபரின் தந்தையால் கொல்லப் பட்டது தெரிய வர, நாயகன் எடுக்கும் ஆக்ஷன் அவதாரமே கதை. விவசாய நிலத்தை அதிக மகசூல் என்ற பெயரில் ஆசை காட்டி ஊராரை ஏமாற்ற முனைந்த வெளியூர்க் காரனை துரத்தி அடிக்கும்…
Read Moreஅதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி…
Read Moreநடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் விரைவில் படக்குழு அடுத்த ஷெட்யூலை தொடங்க உள்ளது. படம் குறித்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பகிர்ந்து கொண்டதாவது, “சென்னை முழுவதும் பென்ஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஷெட்யூலில் ராகவா லாரன்ஸ் நடித்த முக்கியமான காட்சிகளை படமாக்கினோம். உண்மையிலேயே இந்த ஷெட்யூல் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சுதன் சார், ஜெகதீஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முழுமையான படைப்பு சுதந்திரத்திற்கும், ராகவா லாரன்ஸ் சாரின் முழுமையான ஒத்துழைப்பிற்கும் நன்றி. விரைவில் எங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். இதுமட்டுமல்லாது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகளையும் வெளியிட இருக்கிறோம்” என்றார்.…
Read Moreஇந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் ! இன்று வெளியான சையாரா பட ‘பர்பாத்’ பாடலுக்கு ஜூபினை பாட வைத்தது குறித்து மோஹித் சூரி விளக்கம்.
சையாரா படத்தின் தலைப்பு பாடலின் பெரும் வெற்றிக்குப் பிறகு, யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி, ஜூபின் நௌடியல் பாடியுள்ள ‘பர்பாத்’ பாடலை வெளியிட்டுள்ளனர் .தி ரிஷ் இந்த பாடல் வரிகளை எழுதி ,இசையமைத்துள்ளார் . சையாரா பட டீசர் வெளியானதிலிருந்து, அற்புதமான நடிப்புத் திறன்களை காட்டிய அறிமுகக் கலைஞர்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்கியதற்காக யஷ் ராஜ் மற்றும் மோஹித் கூட்டணி ஒரு மனதாகப் பாராட்டைப் பெற்றுள்ளது. பர்பாத் பாடலுக்காக ஆத்மார்த்தமான காதல் பாடலை பாடி அதிக வரவேற்பு பெற்ற இந்த தலைமுறையை சார்ந்த ஜூபின் நௌடியலை பாட வைத்துள்ளார் மோஹித். இது குறித்து மோஹித் கூறுகையில், “காதலுக்காக இந்த தலைமுறையின் குரலாக உள்ள பாடகர்கள் பல பேர் உள்ளார்கள், ஜூபின் நௌடியல் நிச்சயமாக இந்த பட்டியலில் உள்ளார் .சையாராவின் இசை ஆல்பத்தில் ஜூபின்…
Read Moreபோரூரில் தனது 14வது கிளையைத் தொடங்கியது கீதம்.
ஜூன் 9, சென்னை: சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீ தம் வெஜ், தனது 14வது கிளையை போரூரில் திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீ தம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் தனது பயணத்தைத் தொடர்கிறது. போரூர் ஏரிக்கு அருகிலுள்ள இந்த புதிய கிளை, கீ தத்தின் சிறப்பான அனுபவங்களை வழங்குகிறது — ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலை. “நல்ல உணவு மக்களை ஒன்றிணைக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம்,” என்கிறார் திரு. முரளி, கீ தத்தின் நிறுவனர். “போரூர் என்ற இடம் நீண்ட நாட்களாக எங்கள் கவனத்தில் இருந்தது; இது வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. எங்கள் 14வது கிளையை இங்கு தொடங்குவதில் நாங்கள்…
Read More