திருக்குறள் உரைக்குத் தலைப்பை அறிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து

https://x.com/Vairamuthu/status/1925378494806335552?t=oV0vae168rkXUVV7XwnKQw&s=19 கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். இப்போது முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அந்த நூலுக்கான தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார். ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்று அந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார். திருக்குறளுக்கு எழுதப்பட்டிருக்கும் இந்தப் புதிய உரை நவீனமானது; டிஜிட்டல் தலைமுறைக்கானது; கணினித் தலைமுறைக்குக் கனித்தமிழில் எழுதப்பட்டது; எளிமையும் துல்லியமும் உடையது; பண்டிதரையும் பாமரரையும் ஒருசேரச் சென்றடைவது. அறத்துப்பாலும் பொருட்பாலும் ஞானத்தமிழில் இயங்குவது; இன்பத்துப்பால் கவிதைப் பொருளாய் விளங்குவது என்று சொல்கிறார் கவிஞர் வைரமுத்து. ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ ஜூலை மாதம் நூலாக வெளியிடப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

Read More

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

இந்தியாவின் 11வது ஜனாதிபதியும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தேசிய சின்னங்களில் ஒருவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான திரைப்படம், அதிகாரப்பூர்வமாக தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ புகழ் இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார். தேசிய விருது பெற்ற நாயகனும், சர்வதேச புகழ் நடிகருமான தனுஷ், இந்தத் திரைப்படத்தில்  இந்தியாவே ஒருமனதாக நேசிக்கும் மனிதரான, ஏபிஜே அப்துல் கலாம் பாத்திரத்தை, ஏற்று நடிக்கிறார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த, ‘அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் கீழ் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, ‘டி-சீரிஸ்’ நிறுவனத்தின் கீழ் பூஷன் குமார்  இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை ‘நீர்ஜா’, ‘மைதான்’ மற்றும் ‘பர்மானு: தி ஸ்டோரி ஆஃப் போக்ரான்’ போன்ற புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்றுப்…

Read More

‘நீச்சல் உடையில் வரும் காட்சி பரபரப்பாக காட்சியளிக்க, தனது கட்டுக்கோப்பான உடலை உருவாக்குவதற்காக கியாரா கடுமையாக உழைத்தார்!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா!

நேற்றைய நாள் முழுவதும் இணையத்தை கலக்கியது வார்-2 டீசர். ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் அதிரடியான சண்டை காட்சிகளில் ஒருவருக்கொருவர் மோதும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், டீசரை இன்னும் பரபரப்பாக்கிய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பவர் கியாரா அத்வானியும்தான்! எலுமிச்சையின் பச்சை நிறம் கொண்ட கவர்ச்சிகரமான பிகினி அணிந்து, நீச்சல் குளத்தருகில் நடந்து வரும் கியாரா அத்வானி, தனது கட்டுக்கோப்பான உடலமைப்புடன் காட்சியளித்த விதம் நெட்டிசங்களை மயக்கியது. இந்த தோற்றத்தை உருவாக்கியவர் இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா. இதைப்பற்றி அவர் கூறியதாவது: “ஒரு படத்திற்காக கியாராவிற்கு நான் ஆடை வடிவமைப்பது இதுவே முதல் முறை, இந்த காட்சிக்கான திட்டமிடல் தான் — ‘ஹாட்’! நீச்சலுடை காட்சிகளுக்காக நான் பல படங்களில் பணியாற்றியுள்ளேன், ஆனால் அவற்றை சற்றே…

Read More

இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு. ‘கன்கஜூரா’ டிரெய்லர் கடந்த காலத்தின் மறக்கமுடியாத ஒரு பயணத்தை நமக்கு உறுதி அளிக்கிறது”.

Sony LIV வழங்கும் ‘கன்கஜூரா’, வெளியில் அமைதியாகத் தோன்றும் பின்னணியில் பதற்றமூட்டும் ஒரு கதையை சுட்டிக்காட்டுகிறது – அங்கு அமைதியே ஏமாற்றமளிக்கிறது, மேலும் மறைந்திருக்கும் உண்மைகள், வெளியே தெரிவதைவிட அதிகம் அபாயகரமாக இருக்கின்றன. இந்த டிரெய்லர் குற்றவுணர்வும், இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளம், கடந்த காலம் என்று மாறும் ஒரு உலகத்தை உருவாக்குகிறது. விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட இஸ்ரேலிய தொடர் Magpie-இன் அதிகாரப்பூர்வ இந்தியத் தழுவலான ‘கன்கஜூரா’, இந்திய உணர்வுகளோடு கூடிய தீவிரமான மனநிலைக்கு ஏற்றபடி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை இரு சகோதரர்கள் தங்களது இருண்ட கடந்த காலத்தை எதிர்கொள்வது மற்றும் நினைவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையிலான எல்லைகள் மங்கத் தொடங்கும் தருணங்களை ஆராய்கிறது. உங்களுடன் வாழும் நினைவுகள் தான், உங்களுடைய விலக முடியாத சிறைசாலையாக மாறும்போது என்ன நடக்கும்? நிஷாவாக நடித்துள்ள சாரா ஜேன் டயஸ்…

Read More

ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்-2’ படத்தின் டீசரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், 2025-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘வார்-2’ டீஸரை இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று (20/05/2025) வெளியிட்டுள்ளது. இவர்களுடன் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ள ‘வார்-2’ திரைப்படம், ஆகஸ்ட்-14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. YRF ஸ்பை யுனிவர்ஸ் படவரிசையின் ஆறாவது படம் ‘வார்-2’ ஆகும், தொடர் வெற்றிகளை மட்டுமே தன்வசம் கொண்டுள்ள YRF ஸ்பை யுனிவர்ஸின் 6-வது திரைப்படமாகும்.

Read More

கேரளா பல திறமையான நடிகர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்து வருகிறது…அந்த வரிசையில் நடிகை சம்ரிதி தாரா!

தமிழ் சினிமா ரசிகர்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை எப்போதும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். அந்த வகையில், மொழிகளைக் கடந்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிப்பதில் நடிகை சம்ரிதி தாரா ஆர்வமாக உள்ளார். மே 23 அன்று உலகம் முழவதும் வெளியாக இருக்கும் ‘மையல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சம்ரிதி தாரா. மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘பரனு பரனு பரனு செல்லன்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது ‘மையல்’ படம் மூலம் நடந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் A.P.G. ஏழுமலை கதை பற்றி சொன்னபோது என் கதாபாத்திரத்தின் ஆழம் புரிந்து கொண்டேன். தமிழ் சினிமாவில் இப்படியான கதாபாத்திரத்தில் அறிமுகமாவது அரிய வாய்ப்பு. அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்தது…

Read More

’தில் ராஜு ட்ரீம்ஸ்:’ ஆர்வமுள்ள சினிமா திறமையாளர்களுக்கான புதிய தளம் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது!

தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக பல பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களைத் தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனர் மூலம் கொடுத்தவர் தயாரிப்பாளர் தில் ராஜூ. பல புதிய திறமையாளர்களையும் கண்டெடுத்து சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். அடுத்த தலைமுறை சினிமா திறமைகளைக் கண்டறிந்து ஆதரிப்பதற்காக ‘தில் ராஜு ட்ரீம்ஸ்’ என்ற பிரத்யேக தளத்தை தற்போது அறிமுகப்படுத்துகிறார். இந்த ஜூன் மாதம் தொடங்கப்படும் தில் ராஜு ட்ரீம்ஸில் ஆர்வமுள்ள இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம். நீங்கள் 24 கலைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலோ அல்லது சினிமாவுக்கு புதியவராக இருந்தாலும் இந்த தளம் உங்கள் திறமைக்கான வாய்ப்பு வழங்குகிறது. தடைகளை நீக்கி, பரிந்துரை இல்லாத உண்மையான திறமையாளர்கள் பிரகாசிக்கக்கூடிய நியாயமான தளமாக…

Read More

சிறப்பு வீடியோ கிளிம்பஸ் மூலம் மோகன்லால் பிறந்தநளை கொண்டாடும் ‘கண்ணப்பா’ படக்குழு!

தொடர்ந்து 200 கோடி ரூபாய் வசூல் செய்து உச்சத்தில் இருக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், அடுத்து டைனமிக் ஸ்டார் விஷ்ணு மஞ்சு இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்திய காவியமான ‘கண்ணப்பா’-வில் நடிக்கிறார். மோகன்லால் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார், கொண்டாட்டங்களுக்கு கூடுதலாக, ஜூன் 27 ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ள கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், கண்ணப்பா படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன்லால் ஒரு சக்திவாய்ந்த மற்றும் தீவிரமான அவதாரத்தில் இடம்பெறும் ஒரு மின்னூட்டக் காட்சியை வெளியிட்டனர். அவர் கடுமையான உறுதியுடன் நடப்பதை, கவனத்தை ஈர்க்கும் ஒரு காந்தத் திரை இருப்பை வெளிப்படுத்துவதை இந்த குறுகிய வீடியோ காட்டுகிறது. ஒரு அற்புதமான பின்னணி இசையால் மெருகேற்றப்பட்ட இந்த காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. தெய்வீக…

Read More

10 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘திருப்பூர் குருவி’!- மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

வி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர் தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருப்பூர் குருவி’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர்கள் கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்‌ஷா நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக பிரியராஜா நடிக்க, முக்கியமான வேடத்தில் ‘அருவா சண்ட’ பட நாயகன் இசக்கி ராஜா நடித்திருக்கிறார். ஜெ.கதிர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரக்கோணம் யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிக்றார். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். பிரியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.கே.செல்வமணி தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறார். வரும் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘திருப்பூர் குருவி’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

Read More

லியோ ஹம்சவிர்தன் என தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் ஹம்சவிர்தன்

‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார். லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் மே மாதம் 18ம் தேதி திருமண வரவேற்பு விமரிசையாக நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியோடும் வாழ்த்துகளோடும் இந்த காதல் திருமணம் நடந்தேறியது. நடிகர் லியோ ஹம்சவிர்தன் உடனான திருமணத்தை தொடர்ந்து நிமிஷா இனி நிமிஷா லியோ ஹம்சவிர்தன் என்று அழைக்கப்படுவார். இரண்டு புது படங்களில் நடிக்க லியோ ஹம்சவிர்தன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படங்களின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஹம்சவிர்தனின் முதல்…

Read More