”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது” ”என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்..” எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும். அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது…, ”ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள்…
Read Moreலாரா படம் வாங்கித் தந்த வாய்ப்பு : தயாரிப்பாளர் கார்த்திகேசன் மகிழ்ச்சி!
ஒரு படத்தில் தயாரிப்பாளர் நடிக்கிறார் என்றால் பெரும்பாலும் அந்தக் கதாபாத்திரம் அந்தப் படத்தின் கதையில் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கும் – ஆனால் எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘லாரா ‘ படத்தில் அதன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் ஒரு காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அந்தப் படம் வெற்றி பெற்றது. டெண்ட் கொட்டா’ ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் ஊடக விமர்சனங்களில் தயாரிப்பாளர் கார்த்திகேசன் நடித்த கதாபாத்திரம் பற்றியும் அவரது இயல்பான நடிப்பைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த அளவுக்குப் பாத்திரத்துக்கு ஏற்ப இயல்பாக நடித்து இருந்தார் .அதைப் பார்த்து திருமலை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுகவனம் இயக்கும் ‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ என்கிற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்…
Read Moreவிஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான ப்ரொடக்ஷன் நம்பர் 5 படத்தில் இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.
புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ( தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள) ப்ரொடக்ஷன் நம்பர் 5 படத்தின் முக்கியமான அப்டேட்டை பெருமையுடன் அறிவிக்கிறது, ரஃப் நோட் ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம். எதார்த்தமான வாழ்க்கை சார்ந்த இந்த படைப்பில், ஏற்கனவே இருக்கும் முன்னணி நடிப்பு குழுவினருடன் இணைவது யாரென்று கேட்டால், அதுதான் தற்போதைய இசை உலகில் கவனம் பெற்று வரும் நட்சத்திரம் ‘பால் டப்பா’ – இவர் இந்த திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமாகிறார். சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிஷ், அவரின் மேடைப்பெயரான ‘பால் டப்பா’ வின் மூலம் அனைவரிடத்திலும் மிகவும் பரிச்சயமாக உள்ளார். இவர் ஒரு பன்முக கலைஞர் – ரேப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடன இயக்குநர். 170CM, காத்து மேல, மற்றும் வைரலான கலாட்டா (ஆவேஷம் திரைப்படத்தில் இருந்து)…
Read More‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா பேசியதாவது… எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதி சாருக்கு மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் செய்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் வாழ்க்கைக்கு ஏற்ப ஸ்டைலீஷை இப்படத்தில் கொண்டு வந்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் ஜெயிக்கும்,…
Read Moreமெகாஸ்டார் சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!
மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி, சாஹு கராபதி, சுஷ்மிதா கொனிடேலா, ஷைன் ஸ்க்ரீன்ஸ், கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !! மெகாஸ்டார் சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !! மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில், பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள #Mega157, பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த அற்புதமான கூட்டணியில் உருவாகும், இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி முழு நீள நகைச்சுவை வேடத்தில் மீண்டும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் பேனரில் சாஹு கரபதி, சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், ஸ்ரீமதி அர்ச்சனா வழங்குகிறார். மிகப்பெரிய…
Read Moreடூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா !!
பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. குழந்தை நட்சத்திரம் கமலேஷ் பேசியதாவது… எல்லாருக்கும் வணக்கம். எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு வாய்ப்பு கொடுத்த அபி அண்ணாக்கு ரொம்ப நன்றி. அதுக்கப்புறம் ப்ரொடியூசர்ஸ் யுவராஜ் அண்ணாவிற்கு நன்றி. சசிகுமார் அங்கிள், என்னிடம் ரொம்ப பாசமா இருந்தார்,…
Read Moreடாம் குரூஸ் இந்தியாவை நேசிக்கிறார், மீண்டும் வர விரும்புகிறார்; அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு இதயப்பூர்வமான செய்தியை விட்டுச் செல்கிறார்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்
மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது, டாம் குரூஸ் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் ஒரு உரிமையாளரின் காவிய முடிவை அமெரிக்கா குறிக்கும் 6 நாட்களுக்கு முன்பு, உலகளாவிய பொழுதுபோக்கை உண்மையிலேயே மறுவரையறை செய்த ஐகான், இந்தியாவுடனான தனது காலத்தால் அழியாத பிணைப்பை பிரதிபலிக்கிறது. குரூஸ் படங்களைப் பற்றி மட்டுமல்ல, வழியில் தனது பயணத்தை வடிவமைத்த மக்கள் மற்றும் இடங்களைப் பற்றியும் பேசினார். இதுவரை தனது மிகவும் தனிப்பட்ட மற்றும் உயர்ந்த பங்குகளை கொண்ட அத்தியாயமாக அமைக்கப்பட்டுள்ளதை விளம்பரப்படுத்தும் அதே வேளையில், குரூஸ் இந்தியாவுடனான தனது நீடித்த தொடர்பைப் பற்றித் தெரிவித்தார் – ஒரு நாடு தனக்கு வெறும் போற்றுதலை மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் நினைவுகளை அளித்ததாகவும், மீண்டும் வர விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்!…
Read Moreமைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்ஷன் எபிக் ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!
‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இந்த ஆக்ஷன் பேக்ட் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக, வரும் மே 20 அன்று என்.டி.ஆர். பிறந்தநாளன்று படக்குழு எந்த அப்டேட்டும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், என்.டி.ஆரின் ‘வார்2’ திரைப்படத்தின் அப்டேட் அதே நாளன்று வெளியாகிறது. இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் எதிர்பார்த்துள்ளனர். ‘வார்2’ படத்தின் பெஸ்ட்…
Read Moreடெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் – திரை விமர்சனம்
யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் சந்தானம். படம் பிடிக்காவிட்டால் வெளுத்து வாங்கி விடுவார். இதனாலேயே படம் ஓடாது. இந்நிலையில் ஒரு திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு சந்தானத்தை தேடி வர… அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் புதிய படம் பார்க்கும் ஆர்வத்தில் அந்த திரையரங்கத்திற்கு செல்ல… அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களை காப்பாற்ற சந்தானமும் செல்கிறார். அப்போது அவரும், அவரது குடும்பமும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள். சைக்கோ கிரைம் திரில்லர் படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து அதிர்ந்து போகும் சந்தானம், அந்த சிக்கலில் இருந்து தன் குடும்பத்தை எப்படி மீட்கிறார் என்பதை காமெடி பாதி, களேபரம் மீதி என சொல்லி இருக்கிறார்கள்.…
Read Moreமாமன் – திரை விமர்சனம்
அக்கா-தம்பியின் அளவு கடந்த பாசம் தம்பியின் இல்லற வாழ்க்கையையே பாதிக்க நேர்ந்தால்….அதுதான் இந்த மாமன் கதை. கிராமங்களில் தாய் மாமன் உறவு உன்னதமானது. அப்படி ஒரு மாமனை திரைக்கு தந்து இருக்கிறார்கள். 10 வருடமாக குழந்தை இல்லாமல் அவமானத்தை மட்டுமே வெகு மானமாக பெற்றுக் கொண்டிருந்த தனது அக்காவுக்கு இப்போது மகன் பிறக்கிறான். பிறக்கும் மகன் அந்த தாய் மாமனுக்கு முழு நேர சந்தோஷமாகிறான். தூங்கும்போது கூட மாமனை கட்டிப் பிடித்துக் கொண்டே தூங்கும் அந்த சிறுவன், அதே மாமனுக்கு திருமணம் ஆகும்போது மாமன் குடும்பம் பிரிய காரணமாகிறான் பிரிந்த அக்கா தம்பி குடும்பம் மீண்டும் இணைந்ததா என்பது பாசமும் நேசமுமான திரைக்கதை. சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு தம்பி என்றால் உயிர். அதே மாதிரி தம்பியும் அக்காவை உயிருக்கும் மேலாக நேசிக்கிறான். இந்த அக்காவுக்கு பத்து வருடத்திற்கு…
Read More