சென்னை பரணிபுதூர் ரொஹாபாத் பெண்கள் மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கி அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது… பின்பு ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு மோர், பிரியாணி வழங்கப்பட்டன…இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் நடிகர் மோகன் அவர்கள் நேரில் வருகை தந்து தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்… நிகழ்வில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் திரு. ஆர்.தமிழ்ச்செல்வன், முன்னால் தமிழக அரசவை கவிஞரும் மோகன் அவர்களுக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களை தந்த கவிஞர் முத்துலிங்கம் மற்றும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்…நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமத்தினர் செய்து இருந்தனர்…
Read Moreகஜானா – திரை விமர்சனம்
காலகாலமாக கேட்ட பூதம் காக்கும் புதையல் கதை தான். அதை கண்களில் பிரமிப்பு விலகாமல் பார்க்க நேர்ந்தால்…அப்படி ஒரு படம் தான் இந்த கஜானா.இதில் புதையலுக்குப் பதில் நவரத்தின கற்கள்.அவற்றைப் பாதுகாக்கும் யாளி என்று கதை போகிறது, சுவாரசியமாகவே. இனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு என்று புதையலுக்காக உயிரை பணயம் வைத்து புறப்படுகிரார்கள். இவர்களைத் தாண்டி கருடர் இனத் தலைவி சாந்தினி ஒரு பக்கம் அந்த நவரத்தின கற்களுக்கு குறி வைக்கிறார்.இந்த மும்முனை போட்டியில் புதையலை யாராவது கைப்பற்றினார்களா என்பது பர பர கிளைமேக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர், அடிதடி காட்சிகளில் அசத்தி இருக்கிறார். அபாயங்கள் நிறைந்த வனப்பகுதியில் அதைவிட அபாய மனிதர்களை எதிர்கொள்ளும் இடங்கள் அத்தனையும் கரகோஷத்துக்குரியவை.காட்டைக் காக்கும் பெரியவராக வரும் வேலு பிரபாகரனிடம் நடிப்பும் சுத்தம்.…
Read Moreமைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது!
‘லவ் டுடே’ படத்தில் நடிகராக அறிமுகமான பிறகு நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதற்கடுத்து அவர் நடித்த ‘டிராகன்’ படமும் தமிழ், தெலுங்கில் வெற்றிடயடைந்தது. அடுத்தடுத்து வெற்றிகளுக்குப் பிறகு அவர் இப்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்திய படம் ஒன்றில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டைட்டில், முதல் பார்வை மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியையும் இன்று படக்குழு அறிவித்துள்ளது. இளைஞர்களைக் கவரும்படி ‘Dude’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. முகத்தில் காயங்களோடு கையில் தாலி வைத்துக் கொண்டு பிரதீப் முதல் பார்வை போஸ்டரில் இருக்கிறார். மாடர்ன் ட்விஸ்ட்டோடு கதை இருக்கும் என்பதை போஸ்டர் தெளிவாகக் காட்டுகிறது. இந்த…
Read Moreஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ்
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாகடர்.ஐசரி கே கணேஷ்- ஆர்த்தி கணேஷ் அவர்களின் மூத்த மகள் டாகடர்.பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் – சித்திரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இதில் அரசியல், சினிமா, ஊடகம், கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். இந்த திருமணத்தையொட்டி ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோர் என 1500 பேருக்காக மட்டும் நேற்று மாலை சிறப்பு திருமண வரவேற்பு நடைபெற்றது. ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், சிறப்புக்குழந்தைகளின் நடனமும் இசைக்கச்சேரி மற்றும் விருந்துடன் ஒவ்வொருவர்களுக்கும் பரிசு பொருட்களை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார். “ இவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது இந்த சிறந்த நாளில் நம் வேல்ஸ் குடும்பத்திற்கு…
Read Moreசசிகுமார் & லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், “ப்ரீடம்” படம் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமரார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள “ப்ரீடம்” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது, இதன் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா, 90 களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார். டூரிஸ்ட் ஃபேமிலி பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, சசிக்குமார் அதே போன்ற மாறுபட்ட ஈழ பின்னணி களத்தில், இப்படத்தில் அசத்தவுள்ளார். சசிக்குமார், சிம்ரன் ஜோடி போலவே, இப்படத்தில் சசிகுமார் மற்றும் ஜெய்பீம் புகழ் லிஜோ மோல் ஜோஷ் ஜோடி ரசிகர்களை ஈர்ர்கும். அவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிக அழகாக…
Read Moreமக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஜிவி பிரகாஷுன் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் !!
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஃபேண்டஸி திரில்லராக உருவாகி வரும் “இம்மார்டல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி திரை நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மிக வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், டிராகன் படம் மூலம், இளைஞர்கள் மனதைக் கொள்ளையடித்த கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். இளைஞன் வாழ்வில் தீடீரென நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் என்பதன் பின்னணியில், அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன், கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக…
Read Moreநிழற்குடை – திரை விமர்சனம்
இளம் தம்பதிகள் விஜித் –கண்மணி இருவரும் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையின் கேர் டேக்கராக தேவயானியை வேலையில் அமர்த்துகிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு ஒட்டிக்கொள்கிறாள். இதற்கிடையே, அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் விஜித் – கண்மணி தம்பதிக்கு விசா கிடைத்து விட… தேவயானியை தாய்க்கும் மேலாக நேசிக்கும் அந்த குழந்தை அமெரிக்காவுக்கு தேவயானியும் வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறது.இதற்கிடையே, அமெரிக்கா புறப்படுவதற்கு முந்தின இரவு குழந்தை திடீரென்று காணாமல் போக. தங்கள் அமெரிக்கா பயணத்தை தடுக்க இதை செய்திருக்கலாம் என்று நினைக்கும் குழந்தையின் பெற்றோர், சிலர் மீது புகார் அளிக்கிறார்கள். அதன்படி, அவர்களிடம் போலீஸ் விசாரித்தும் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போக……
Read Moreசிறிய படங்களுக்கு அதில் நடித்தவர்கள் கூட ஒத்துழைப்பதில்லை! – ‘யாமன்’ பட இயக்குநர் வருத்தம்
’ஒற்றாடல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன், தனது இரண்டாவது படமாக, ‘யாமன்’ என்ற படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு, கே.எஸ்.எம். ஸ்கிரீன் பிளே பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். சக்தி சிவன், காயத்ரி ரெமா நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஆதேஷ் பாலா, சம்பத்ராம், அருள் டி.சங்கர், திருச்சி சாதானா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திகில் ஜானர் திரைப்படமான இப்படம், பார்ப்பவர்களை மிரள வைப்பதோடு, வழக்கமான பாணியில் பயத்தாலும் திகில் காட்சிகள் நிறைந்த, சுவாரஸ்யமான பேய் படமாக பயணிக்கிறது, என்று படம் பார்த்த பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில், ‘யாமன்’ படத்திற்காக அப்படத்தில் நடித்தவர்களே விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்துள்ளதால், தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.எஸ்.மணிகண்டன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும்,…
Read Moreமுன்னெப்போதும் காணாத முன்னோட்டம்: மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ‘பிளாக் ரோஸ்’ திரைப்படத்தின் பைலட் மூவி திரைப்பட விழாக்களிலும் ஓடிடியிலும் வெளியீடு
சிறு வயது முதல் இங்கிலாந்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான SJ சரண், லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழந்து வருகிறார். திரைத்துறை மீது தீராத தாகம் கொண்ட இவர், இயக்குநர் ஏ எல் விஜய் உடன் ‘மிஷன்’ திரைப்படத்திலும், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்த ‘மோகினி’ திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே பாக்யராஜிடமும் பயிற்சி பெற்ற இவர், ‘பிளாக் ரோஸ்’ எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி இருக்கிறார். நிழல்கள் ரவி, பிரித்விராஜ் (பப்லு), சாந்தினி தமிழரசன், நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் பேரன் விஜேஷ், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இத்திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஆகும். இது வரை யாரும் மேற்கொள்ளாத புதுமையான முயற்சியாக, இத்திரைப்படத்திற்காக மிக அதிக பொருட்செலவில் பைலட் மூவி ஒன்றை சரண்…
Read Moreகீனோ – திரை விமர்சனம்
திகில் மர்மம் கொண்ட பட வரிசையில் வந்திருக்கும் படம் கீனோ. ஆனால் இந்த கீனோவில் இடம் பெறும் திகில் எந்த வகையைச் சேர்ந்தது என்பது தான் படமே. மகாதாரா பகவத்- ரேணு சதீஷ் தம்பதியருக்கு ஒரே மகன் கந்தர்வா. அவன் தனியாக இருக்கும் போதெல்லாம் மனித உடலும் வித்தியாசமான தலையும் கொண்ட ஓர் உருவம், அவன் முன் தோன்றி, ‘ நான் தான் கீனோ என்னிடம் வா’ என்று அழைக்கிறது. சிறுவன் பயந்து நடுங்க, பெற்றோர் இது ஏதேனும் ஆவி சேட்டையாக இருக்குமோ என்ற கோணத்தில் மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் அலசி ஆராய்ந்து வீட்டில் தீய சக்தி எதுவும் இல்லை என்று உறுதி கூறுகிறார்கள். ஆனாலும் மறுநாளே வந்து சிறுவன் முன் நிற்கிறது கீனோ. அதே அழைப்பு.அதே மிரட்டல்.உண்மையில் அந்த கீனோ யார்? சிறுவன் கீனோவில்…
Read More