சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி…

Read More

‘காந்தா’ படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத் தோற்றம் வெளியாகியுள்ளது!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காந்தா’ திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் இருந்து வெளியாகியுள்ள இருவரின் முதல் தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில், படக்குழு நடிகர் சமுத்திரக்கனியின் பவர்ஃபுல்லான கதாப்பாத்திர தோற்றத்தை வெளியிட்டது. இன்று படக்குழு அழகு மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் திறமையான நடிகை பாக்கியஸ்ரீ போர்சேவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. வசீகரிக்கும் புன்னகையுடன் கார் ஜன்னலை எட்டிப்பார்த்தபடி அவர் அந்த போஸ்டரில் இருக்கிறார். அவரது வசீகரிக்கும் பார்வை கவிதைத்துவமாக அமைந்துள்ளது. 1950களின் மெட்ராஸின் பரபரப்பான தெருக்களோடு செட் அமைக்கப்பட்டு ‘காந்தா’ படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் ராணா டகுபதி தலைமையிலான ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கும் இந்தப் படம்…

Read More

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார். எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும்…

Read More

கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் ” அம்பி “

மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே, Tt #50 படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் A.B. முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நா.ராசா பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி மற்றும் பிரபல பாடகர்கள்…

Read More

ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

பன்முகத் திறமை கொண்ட ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரில்லர் திரைப்படம் “நாக் நாக்”. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராகவ்வின் முதல் இயக்க முயற்சியான இந்தப் படம், அதன் வெளியீட்டு தருணத்திலேயே ஒரு முக்கிய வலு சேர்க்கும் விதமாக, தேஜாவு, தருணம் போன்ற தரமான படங்களை இயக்கியவரும், இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது “ஆர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ்” நிறுவனம் வாயிலாக வெளியிட உள்ளார். ஒரு புதிய சினிமா அனுபவத்தை ‘நாக் நாக்’ திரைப்படம் நிச்சயம் தரும். இந்தப் படத்தின் தனித்துவமான கதைக்கருவும், தரமான உருவாக்கமும் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், இந்தப் படத்துடன் கைகோர்த்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதன்…

Read More

மலையாளப் படங்களை கொண்டாடுகிறோம்…தமிழ்ப்படங்களை விட்டுவிடுகிறோம்* *-இயக்குநர் ஜஸ்டின் பிரபு வருத்தம்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்து தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. நிறைய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வந்து வெற்றி காணும் “உத்ரா புரொடக்சன்ஸ்- (ஹரி உத்ரா ) ‘வேம்பு’ படத்தை மே-23ஆம் தேதி தமிழகமெங்கும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியிடுகிறது. இன்னொரு பக்கம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளவும் ‘வேம்பு’ படம் அனுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான வேம்பு, சிறந்த நடிகருக்கான விருதை ஹரிகிருஷ்ணனும், சிறந்த…

Read More

மலையாள திரையுகினருக்கு வழங்கப்படும் சிறந்த விருதான ‘மலையாளம் புரஷ்காரம் 1200’ விருது வென்ற நடிகர் சம்பத் ராம்!

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சம்பத் ராம். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், தனக்கு கொடுக்கப்படும் வேடத்தை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவரான சம்பத் ராம், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியான வில்லன் நடிகராக உருவெடுத்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் நடிக்கும் பான் இந்தியா நடிகராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில், மலையாள திரையுலகம் மற்றும் எழுத்துலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வரும் மலையாள புரஷ்காரம் சமிதி, நடிகர் திலீப் நடித்த ’தங்கமணி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்த சம்பத் ராமுக்கு, சிறந்த வில்லன் நடிகருக்கான ‘மலையாள புரஷ்காரம் 1200’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.…

Read More

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை ” ஸ்கூல் ” பட இயக்குனர் R. K. வித்யாதரன்

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ” ஸ்கூல் “ இந்த படத்தில் யோகிபாபு,பூமிகா சாவ்லா,கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் R. K. வித்யாதரன் யோகி பாபு பற்றி பகிர்ந்தவை…. சமீபத்தில் நடந்த யோகி பாபு நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவில்லை என்று மேடையிலேயே படு மோசமாக விமர்சித்துள்ளனர். என்னை பொறுத்தவரை அவர் அப்படி செய்ய கூடிய நடிகர் கிடையாது. முறையாக அவரிடம் பேசி தேதி, நேரம் வாங்கி படத்தின் பிரமோஷன் நிகழ்வை வைத்தால் நிச்சயமாக கலந்துகொள்வார். ஸ்கூல் படம் துவங்கியது முதல் இன்றுவரை எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். பட பூஜை நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா என எல்லா…

Read More

வியக்க வைக்கும் VFX காட்சிகள் மூலம் உருவாகியுள்ள ‘கஜானா’! – மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கஜானா’ திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு மற்றும் வியாபாரம் இருப்பதற்கு முக்கிய காரணம், அப்படங்களின் பிரமாண்டம் மற்றும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிகளே. அப்படிப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கஜானா’. மொழிகளை கடந்த கதைக்களத்துடன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் வியக்க வைக்கும் VFX காட்சிகளுடன் உருவாகியுள்ளது. ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படம் வரும் மே 9 ஆம்…

Read More

ஜகதீஷ் ஆமாஞ்சியின் ‘யமன்’ புதிய போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது

இப்போது பாக்ஸ் ஆஃபிஸில் புராண அடிப்படையிலான திரைப்படங்கள் வெற்றி பெறுவது ஒரு வெளியறிய ரகசியமல்ல. இந்த ஒரு அலை மீது சவாரி செய்கிற படம் தான் யமன், ஜகந்நாதா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதுமையான திரைப்படம். இதில் நடிகர் ஜகதீஷ் ஆமாஞ்சி முக்கிய கதாப்பாத்திரத்துடன் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். “தர்மோ ரக்ஷதி ரக்ஷித꞉” எனும் சக்திவாய்ந்த வாசகம் படத்துக்கு அடையாளமாக இருக்கிறது. ஜகதீஷுக்கு ஜோடியாக நடிகை ஸ்ராவணி ஷெட்டி நடித்துள்ளார். இப்போது இப்படத்திற்கான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு வெளியான தலைப்பு போஸ்டர்கள் மற்றும் தீபாவளி சிறப்பு பதிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. ஆனால் இந்த புதிய போஸ்டர் அதன் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. புதிய போஸ்டரில், யமன் என்ற மரண தெய்வமாக ஜகதீஷ் பயமுறுத்தும் வலிமையான தோற்றத்தில்…

Read More