முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ஐமேகஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்… எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த டிரெய்லர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. “எம்புரான்” டிரெய்லர், ரசிகர்களுக்கு அதிரடியான ஒரு விஷுவல் விருந்தாக அமைந்துள்ளது, லூசிபர் படத்தின் கதையிலிருந்து துவங்கும் இந்த டிரெய்லர், மொத்த அரசியல் சூழல் மற்றும் அதிரடி த்ரில்லர் கதைக்களத்தை…
Read Moreதயாரிப்பாளர், நடிகர் V. ராஜாவின் புதிய அலுவலகத்தை கலைப்புலி எஸ். தாணு திறந்து வைத்தார்.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் V .ராஜா தயாரித்து , கதாநாயகனாக அறிமுகமான படம் ” அருவா சண்ட ” ஆதிராஜன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது தயாரிப்பாளர் V. ராஜா ” நானும் ஹீரோதான் ” என்ற படத்தை இயக்கி நாயகனாக நடிக்கிறார். இன்று அவரது புதிய அலுவலகத்தின் துவக்க விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் மற்றும் நடன இயக்குனர் ஹரிகுமார், பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார், இயக்குனர் ஆதிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி தயாரிப்பாளர் V.ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Read More“எம்புரான்” டிரெய்லர் நாளை மார்ச் 20 ஆம் தேதி, ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகிறது !!
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் டிரெய்லர் நாளை, மார்ச் 20 ஆம் தேதி, மும்பையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில் வெளியிடப்படவுள்ளது. “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில், ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது. இதன் ஒரு பகுதியாக படத்தின் டிரெய்லர் நாளை ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகவுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய…
Read Moreஅஸ்திரம் – திரை விமர்சனம்
மூன்று இளைஞர்கள் அடுத்தடுத்து பொது இடத்தில் வயிற்றை கிழித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். மூன்று பேருமே ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்கள். ஒருவரை ஒருவர் உயிரோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டதே இல்லை. இந்த தற்கொலை விவகாரம் காவல்துறைக்கு தலைவலியாய் அமைய… இந்த தற்கொலைகளுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களை காவல்துறை கண்டுபிடித்ததா? என்பது திருப்பு முனைகளுடன் கூடிய கிளைமாக்ஸ். இந்த வழக்கில் புலன் விசாரணை செய்யும் பொறுப்பு கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஷாமை தேடி வருகிறது. முதல் கட்ட தகவலாக இவர்கள் மூவருக்கும் பொதுவாக இருப்பது நன்றாக செஸ் விளையாடும் திறமை என்பதை அறிந்து கொள்ளும் ஷாம், தனது உதவியாளர் சுமனுடன் இணைந்து இந்த வழக்கை தீவிரமாய் துப்பு துலக்குகிறார். விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் திடீரென்று இவரை பார்க்க வருகிறார், பள்ளிக்கால நண்பன் விஜய். ஷாமுக்கு மட்டுமே…
Read Moreஜல்லிக்கட்டு தடைக்கெதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தியது சோசியல் மீடியா தான் – SISMIA தலைவர் கவிஞர் விவேகா பேச்சு
தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் திரு.விவேகா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் LNH Creations திரு.கே.லஷ்மி நாராயணன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைவர் கவிஞர் திரு. விவேகா, “இந்த இனிய மாலைப்பொழுதில் இங்கே குழுமியிருக்கும் ஊடக உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். South indian social media influencers association (SISMIA) தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கமானது கடந்த 14-ஆம் தேதி க்ரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்ட தொடக்க விழாவாக நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். மாபெரும் வெற்றி விழாவாக அது அமைந்தது. சோசியல் மீடியா Influencers என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏன் என்றால் ஒரு உளியை எடுத்து தன்னை சிற்பமாக செதுக்குவது போல தன் கைவசம் இருக்கும்…
Read Moreதமிழர் பிரச்சனைகளுக்கு த.வெ.க. தோழர்கள் குரல் கொடுக்க வேண்டும் – நடிகர் சௌந்தர ராஜா
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி 16/03/2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் அமீரகம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்து இருந்தனர். இந்நிகழ்வினை அமீரக தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ரகுவரன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்மாயில், பொருளாளர் சதிஸ், மகளிர் அணிச் செயலாளர் RJ மாயா மற்றும் கழக நிர்வாகிகளான சுதாகர், சரவணன் சேதுபதி, காரல் மார்க்ஸ், விஜய், ரியாஸ், புவி, சரத் மற்றும் நிஜாம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கழகத் தலைவர் அவர்களின் அன்பு தம்பியுமான திரு மு. சொளந்தர ராஜா அவர்கள்…
Read Moreவேம்பு படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா
ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற நம் பாரம்பரிய கலையான சிலம்பகலையில் ஒன்றான மான் கொம்பு சுற்றும் போட்டியானது நடைபெற்றது, இப்போட்டியில் சிறுவர் சிறுமிகள் பலரும் கலந்து கொண்டனர், அவ்விழாவில் கலந்துகொண்ட வேம்பு படத்தின் நாயகன் ஹரிகிருஷ்ணன் நாயகி ஷீலா மற்றும் இயக்குனர் V. ஜஸ்ட்டின் பிரபு, ஒளிப்பதிவாளர் A. குமரன் பங்கேற்றனர், நடிகர்கள் இருவரும் உலக சாதனை படைத்த சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர், வேம்பு படம் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் படம் என்று அவர்கள் முன்னிலையில் பேசினார்கள் மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் வி.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி…
Read More‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு !
இப்போது மறு வெளியீடு செய்கிற படங்களும் வெற்றி பெறும் காலமாகி வருகிறது. எவ்வளவுதான் ஆக்சன் படங்கள் , திகில் படங்கள் வந்தாலும் நகைச்சுவை முலாம் பூசிய கலகலப்பான வணிகப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தமிழ் ரசிகர்கள் தவறுவதில்லை. இப்போது அப்படிப்பட்ட படங்கள் வராதது தான் ஒரு குறையாக உள்ளதே தவிர, அந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. இதற்கு அண்மை உதாரணமாக அப்படிப்பட்ட வகையில் ‘மத கஜ ராஜா’ படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அதுவும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்துத் தாமதமாக வெளியான போதும் இந்த அளவுக்கு வெற்றியை அடைந்திருக்கிறது என்றால் அப்படிப்பட்ட கலகலப்பான படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மை. 2010 இல் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூல் சாதனையும் பெற்ற படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. ஆர்யா, நயன்தாரா, சந்தானம்,…
Read Moreசாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது!
மலையாளத்தில் அறிமுகமான “பெஸ்டி” திரைப்படத்தின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, சாக்ஷி அகர்வாலின் தமிழ்த் திரைப்படமான “ஃபயர்” குறிப்பிடத்தக்க வகையில் 30 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, நடிகை சாக்ஷி அகர்வால் திரைத்துறையில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறார். அவரது பன்முகத்தன்மை மற்றும் திறமை பரவலான பாராட்டைப் பெற்று, தமிழ், மலையாளம் மற்றும் ஓடிடி தளங்களில் அற்புதமான புதிய படங்களில் நடிப்பதற்காக கையெழுத்திட்டுள்ளார். சாக்ஷியின் மலையாள அறிமுக திரைப்படமான “பெஸ்டி” விமர்சகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல், தொழில்துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் அவரை நிலைநிறுத்தியுள்ளது. இதற்கிடையில், அவரது தமிழ் திரைப்படமான “ஃபயர்” பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியை பதிவு செய்தது மட்டுமல்லாமல், திரையரங்குகளில் 30 நாட்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருப்பதால், குறிப்பிடத்தக்க மைல்கல்லை பதிவு செய்துள்ளது. அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியால் உற்சாக மிகுதியான சாக்ஷி, பல்வேறு கதாபாத்திரங்கள்…
Read More‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது
இயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கவிருக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ எனும் வெற்றி படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கான தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூர் அருகே உள்ள சாஸ்தா கோவிலில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப…
Read More