அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த படத்தில் அஸ்வின் கந்தசாமி இயக்குனராக அறிமுகமாகிறார், மேலும் இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பிஜோர்ன் சுர்ராவ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் நகைச்சுவை, காதல் மற்றும் உத்வேகம் கொண்ட கற்பனை ஆகியவற்றின் தனித்துவமான கலவையை உள்ளடக்கியது, அனிமியில் காணப்படும் மிக விசித்திரமான மற்றும் அதைவிடவும் மிகப்பெரிய வாழ்க்கை கதையை சொல்லும் படமாக இருக்கும். படத்தின் கதையம்சம் இரண்டு மாறுபட்ட யதார்த்தங்களை வழிநடத்தும் ஒரு கதாபாத்திரத்தைப் பின்பற்றுகிறது, நகைச்சுவை மற்றும் இதயப்பூர்வமான உணர்ச்சியை…
Read Moreசசிகுமார், சத்யராஜ் மற்றும் பரத் நடிக்கும் குடும்பத்துடன் காணக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் குடும்பத்துடன் காணக்கூடிய திரைப்படத்தின் படக்குழு பாரம்பரியமான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. யதார்த்தமான மற்றும் உணர்ச்சிகரமான படங்களுக்கு பெயர் பெற்ற சசிகுமார், மூத்த நடிகர் சத்யராஜ் மற்றும் பரத் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் இத்திரைப்படத்தின் மூலம் இணைந்து மற்றொரு இதயத்தைத் தொடும் கதையை பெரிய திரைக்கு கொண்டு வர உள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். அனுபவமிக்க கலைஞர்களான M.S. பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரவணன், ‘கஞ்சா’ கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லோரி ஆகியோர் திறமையான மற்றும் சிறப்பான நடிப்பு ஆகியவை ஒருசேர உருவாகும் ஒரு தரமான திரைப்படத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும். M. குரு, இதற்கு முன்னர் இயக்குனர் இரா. சரவணனிடம்…
Read Moreதுஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கும் ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு
யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து…
Read More*ஜனநாயக துரோகம்! – இயக்குனர்_பேரரசு*
சட்டசபைக்குள் அனுப்புவதற்காகத்தான் MLAக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்! அதேபோல் பாராளுமன்றத்திற்குள் அனுப்புவதற்காகத்தான் எம்பிக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்! ஆஊன்னா வெளிநடப்பு செய்வதற்கல்ல! சபைக்குள் முடிந்தவரை தன் கருத்துக்களை சொல்லி போராட வேண்டும். இல்லையென்றால் அங்கு என்னதான் நடக்கிறது என்று இறுதிவரை இருந்து பார்க்க வேண்டும். அடிக்கடி இப்படி வெளிநடப்பு செய்வது வாக்களித்த மக்களை அவமதிப்பதற்கு சமம்! மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று, விமான டிக்கெட் போட்டு,இருக்க வசதியான அறை குடுத்து, உண்ண உணவு கொடுத்து இதெல்லாம் எதுக்கு வெளிநடப்பு செய்யவா? இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். வெளிநடப்பு செய்து சாதித்ததாய் ஒரு நிகழ்வும் இல்லை. வெளி நடப்பு உரிமை அல்ல! அது பொறுப்பின்மை! இதுவும் ஒரு ஜனநாயக துரோகம்! அடிக்கடி வெளிநடப்பு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வேண்டும். #இயக்குனர்_பேரரசு
Read More“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்…
“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது. ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா – சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர். இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை “மணல்” என்கிற திரைப்படத்தினூடாக சர்வதேச விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்…
Read Moreபடவா – திரை விமர்சனம்
ஊருக்கு ஆகாதவன் அந்த ஊருக்கே சிறப்பு சேர்த்த கதை.எக்காரணம் கொண்டும் வேலை செய்யக் கூடாது என்ற முடிவில் இருப்பவர் விமல். வேலை செய்யப் போகிறவர்களையும் தடுத்து விடுவார். சூரியுடன் சேர்ந்து வெட்டியாக ஊர் சுற்றுவது, நள்ளிரவில் பட்டாசு வெடித்து ஊர் மக்களை பீதி ஆக்குவது, கண்ணில் பட்ட பொருட்களை திருடி விற்பது என ஜாலியாக சுற்றித் திரிகிறார். அந்த ஊருக்கே அவரால் தலைவலி. சொந்த அக்கா வீட்டிலேயே ஏமாற்றி பணத்தை ஆட்டை போடுவதால் அக்கா குடும்பமும் அவரைப் பார்த்தால் அலறுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், ஆட்குறைப்பில் அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக, மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார்.விமலை கண்டாலே பயந்து ஓடும்…
Read Moreநிறம் மாறும் உலகில் – திரை விமர்சனம்
தனது காதலை அங்கீகரிக்காத அம்மாவுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் தோழியின் ஊருக்கு பயணமாகிறார். ரயிலில் அவரை சந்திக்கும் டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு, லவ்லினிடம் நடந்ததை கேட்டு அறிந்து கொள்கிறார். அப்போது அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொல்கிறார். நான்குமே தாயின் பெருமைக்கானது. முதல் கதையில் அம்மா பாசத்திற்காக ஏங்கும் மும்பை தாதாவாக நட்டி வருகிறார். அவரைப் போட்டுத்தள்ள துடிக்கும் கேரக்டரில் வரும் சுரேஷ் மேனன் தமிழ்நாட்டில் இருந்து ஓடிவந்த கிராமத்து காதல் ஜோடிகளை இதற்கென பயன்படுத்திக் கொள்கிறார். காதலன் கத்தி நட்டியை பதம் பார்த்ததா? காதல் ஜோடிகள் அங்கிருந்து உயிருடன் தப்ப முடிந்ததா? பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, அப்பா கதை இரண்டாவது. (நான்கு…
Read Moreகிங்ஸ்டன் – திரை விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலில் மீன் பிடிக்க தடைவிதிக்கப் பட்டிருக்கிறது. இந்த தடையை மீறி மீன் பிடிக்க சென்றவர்கள்பிணமாக கரை ஒதுங்குவார்கள். இதற்கு இடையே அந்த ஊரின் கன்னிப்பெண்களும் அவ்வப்போது காணாமல் போகிறார்கள். உள்ளூர் தாதா தாமஸிடம் (ஷிபுமோன்) மீனவராக பணியாற்றும் நாயகன் கிங் (ஜி.வி.பிரகாஷ்) இந்த மர்மத்தை கண்டறிய நண்பர்களோடு துணிச்சலாக கடலுக்குள் படகில் பயணப்படுகிறார். அவர் கடல் மர்மத்தை கண்டு பிடித்தாரா? உயிரோடு கரைக்கு திரும்பினாரா? என்பது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை. படத்தின் தொடக்கக் காட்சிகள் வழக்கமான படமாகச் சென்றாலும் தடையை மீறி கடலுக்கு நாயகன் செல்லும்போது படம் வேகம் பிடித்து விடுகிறது. கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களுக்குபடபடப்பையும் பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் அக்காட்சிகள் ஏற்படுத்தி விடுகின்றன. மேற்கொண்டு நகரும்…
Read Moreராபர் இசை வெளியீடு செய்தி. தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட “ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!
பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது : முதலில் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது: எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் இருப்பவர்கள், முன்னாடி இருப்பவர்கள், மேடைக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் இருந்திருக்கீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. விமர்சனங்களும் வரவேற்பும் ஒருவரை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும். அதுபோல் என்னை ஊக்குவித்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. எப்போதும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும்,…
Read Moreஇளைய திலகம் பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன் !!
கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார் 90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாச போராட்டத்தை உணர்வு பூர்வமாக எதார்த்தத்தை மீறாமல் மனதுக்கு மிக நெருக்கமாக பதிவு செய்து இருக்கிறார் படத்தின் இயக்குனர் மகா கந்தன் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார், டி. ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார் ஏஐஸ் நௌஃபல் ராஜா இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவு ஆலிவர் டெனி ஆர்.வி உதயகுமார் ,மன்சூர் அலிகான் ,லிவிங் ஸ்டன், தங்கதுரை இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே .எம் .சஃபி தயாரித்துள்ளார் படத்தைப் பற்றி இயக்குனர் மகாகந்தன் கூறியது. ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்…
Read More