நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலருமான அஜித்குமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகப்படுத்தினார். ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐலேண்ட் ரம்பிள் என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில், ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் தீவுகளில் பயணித்தது அனைவரையும் ஈர்த்தது. இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற சிலிர்ப்பான நாடு கடந்த பயணங்களையும் அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours வழி நடத்தியுள்ளது. ஒவ்வொரு பயணமும் கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தில் ரைடர்ஸ்…
Read Moreபிரைம் வீடியோவின் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் த்ரில்லர் தொடர் அக்டோபர் 18 முதல் ஸ்ட்ரீமிங்
இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் , 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யோகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு…
Read Moreமுதல் எபிஸோடிலேயே அதிரடி, களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை…
Read Moreஎதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்திலிருந்து “மார்டின் ஆந்தம்”, பாடல் வெளியானது!!
இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. ஆந்தம் முழுக்க துருவா சர்ஜா பட்டையை கிளப்புகிறார், தன் அதீத கவர்ச்சியால் திரையை தீப்பிடிக்க வைக்கிறார். மார்டினில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரது தோற்றமும், மிடுக்கும், சேர்ந்த கலவையில் படத்தை திரையில் காணும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. பாடலின் வரிகளை: – கன்னடம்: ஸ்ரீமணி, ஏ பி அர்ஜுன் – தமிழ்: விவேகா – தெலுங்கு: ஸ்ரீமணி – ஹிந்தி: ஷபீர் அகமது – மலையாளம்: விநாயக ஷஷி குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த ஆந்தம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. துருவா சர்ஜா நடிப்பில்…
Read More“ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” சொன்னதைச் செய்த பிக்பாஸ், ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !!
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக, புதிய ஹோஸ்டுடன், பல புதுமைகளுடன், முதல் எபிஸோடே களை கட்ட ஆரம்பித்துள்ளது. இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின்…
Read More“2K லவ்ஸ்டோரி” நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன் !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழுவினர் விரைவில் திரைக்குக்கொண்டுவரும் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் அறிமுக நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மக்கள் நாயகன் ராமராஜன் படக்குழுவினரை வாழ்த்தி, அறிமுக நாயகன் ஜெகவீரை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வினில்… இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது… மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம், வெண்ணிலா கபடி குழு படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விசயங்கள் நடந்தது.…
Read Moreகலன்: திரைப்படத்தின் முதல் பார்வை
ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரிக்கும் கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது இப்படத்தின் முக்கிய முக்கிய கதாபாத்திரத்தில் தீபா, அப்பு குட்டி , சம்பத் ராம், சேரன் ராஜ்,குருமூர்த்தி, மணிமாறன்,ராஜேஷ்,யாசர், பீட்டர் சரவணன்,வேலு, முகேஷ்,மோகன்,பாலா,மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை கிடுகு படத்தின் இயக்குனர். திரு. வீரமுருகன்.இயக்கி உள்ளார். இசை.ஜெர்சன் படத்தொகுப்பு.விக்னேஷ் வர்ணம்.விநாயகம், ஒளிப்பதிவு.ஜெயக்குமார் மற்றும் ஜேகே பாடலாசிரியர்.குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன். கலை. திலகராஜன்,அம்பேத், நடனம். வெரைட்டி பாலா சவுண்ட் எஞ்சினியர். சந்தோஷ், துணை இணை இயக்குனர் ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குனர் பாலாஜி சாமிநாதன்,மகேஷ்,மற்றும் பலர் பணியாற்றி உள்ளனர்
Read More“கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார். இந்த நிகழ்வு நேற்று மாலை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது, “நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி.…
Read More*மெகா பிரின்ஸ் வருண் தேஜ் “மட்கா” திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது !!
மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கருணா குமார் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மட்கா மன்னனாக உயரும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை விவரிக்கிறது. இந்த டீஸர் கதாநாயகனின் வளர்ச்சியை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகிறது, சிறையில் இருக்கும் போது, ஜெயிலர் ஒருவரின் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் நாயகன், நாட்டில் 90% செல்வத்தைக் கட்டுப்படுத்தும், ஒரு சதவீத பணக்கார குழுவில் தானும் இணைய வேண்டுமெனத் தீர்மானிக்கிறார், லட்சியத்தின் பாதையில், மனித பேராசை பற்றிய புரிதலால் உந்தப்படும் நாயகன், இரக்கமற்ற உலகில் வெற்றியை அடையப் புறப்படுகிறார், செல்வத்தை தேடி அடையும் ஆசை, அவரது வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்கிறது.…
Read Moreசிலம்பரசன் வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ ஃபேன்டஸி பட டிரைலர்
ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக ‘ராக்கெட் டிரைவர்’ உருவாகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தனித்துவ கதையம்சம் சார்ந்த பொழுதுபோக்கு படங்கள் மொழி எல்லைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், ‘ராக்கெட் டிரைவர்’ புதிய படமாக இணையும் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் டிரெயிலரை வெளியிட்ட நடிகர் சிலம்பரசனுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் நன்றி தெரிவித்தனர். ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளது. முன்னாள் இந்திய குடியரசு…
Read More