அற்புதமான விஷ்வலுடன் ஹனுமான் டிரைலர்

அதிசயமான காட்சிகளுக்கு சாட்சி- பிரசாந்த் வர்மாவின் அசல் சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது! நமது அசல் நாயகன் ஹனுமானின் வீரதீரத்தைக் காண்பதற்காக புனிதமாக காத்திருந்தமைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம்..! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான ‘ஹனுமான்’ திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. அகண்ட பாரதத்தின் இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த முன்னோட்டத்தின் முதல் காட்சி- அஞ்சனாத்திரி இடம் பெற்றிருப்பது, நம்மை கற்பனை பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கிறது. தண்ணீருக்கடியில் நடக்கும் காட்சியில் கதாநாயகன் ஒரு நட்சத்திரம் போல் ஜொலிக்கும் முத்து ஓட்டின் அருகில் செல்வதை காட்சிப்படுத்துகிறது. ‘யதோ தர்ம ததோ ஹனுமா.. யதோ ஹனுமா ததோ ஜெய..’ (எங்கே நீதி…

Read More

பிரபாஸை பிரம்மாண்டப்படுத்தும் நட்பும் துரோகமும் கலந்த “சலார்” டிரைலர்

  ‘கே ஜி எஃப் சீரிஸ்’ போன்ற பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சலார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை தனித்துவமான பாணியில் வெளியிட்டு, வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கி உள்ளது. இந்த முன்னோட்டம்- அடக்க இயலாத பிரபாஸுடன் தொடங்குகிறது. இத்தகைய காட்சிகளில் வழங்கப்படும் மயக்கும் அழகியல் காட்சிகள் மற்றும் துடிப்பான சண்டை காட்சிகள் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.‌ இந்தியா முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சலார்’- ஒரு சினிமா கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. மேலும் சமீபத்திய ட்ரெய்லரில் கான்சார் எனப்படும் உலகத்தையும், பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் என்ற இரு நண்பர்களின் புதிரான கதையையும், கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வழங்குகிறது. முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை சித்தரிக்கும் பிரபாஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.‌ ட்ரெய்லர் ஒரு அழுத்தமான விவரிப்புடன்…

Read More

டிவியிலேயே 300 தடவைக்கு மேல் போட்ட படங்கள் எல்லாம் இப்போது எதற்கு திரையரங்கில். சிறய படங்களுக்கு தியேட்டர் தாருங்கள் – பாடலாசிரியர் பிரியன் !!

தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. பாடலாசிரியர் பாலா பேசியதாவது… இது எனது முதல் திரைப்படப் பாடல், சிறு வயதிலிருந்து பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது கனவு, எனது ஆசான் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் நானும் பாடலாசிரியராக அறிமுகமாவது மகிழ்ச்சி. காத்துல என்ன தூத்துது எனும் பாடல் அனைவரையும் கவரும், இசையமைப்பாளர் ராஜன் மாதவிற்கு நன்றி. தமிழ் திரைப்படக்கூடத்திற்கு என் நன்றிகள் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி. பாடலாசிரியர் சஹானா பேசியதாவது.. அரணம் படத்தில் ஆரிராரோ எனும் பாடல் தான் என் முதல் பாடல்…

Read More

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம் :

  முழுக்க முழுக்க பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில், கதை, திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு இப்படி எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாமல், நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஆயிரம் பொற்காசுகள்”.  இப்படம் அதன் நோக்கமான நகைச்சுவையை நமக்குப் பரிசளித்திருக்கிறதா…?  இல்லையா…? என்பதை பார்ப்போம். “ஆயிரம் பொற்காசுகள்” அடங்கிய ஒரு புதையல் ஒன்று கிடைக்கிறது. அதை அரசாங்கத்திற்கு தெரியாமல் பங்கு பிரித்துக் கொள்வதற்கான போராட்டமே “ஆயிரம் பொற்காசுகள்” திரைப்படத்தின் ஒன்லைன். அந்த ஆயிரம் பொற்காசுகள் யாருக்கு கிடைக்கிறது…? எப்படி கிடைக்கிறது..? அதை ஆண்டு அனுபவிக்க நினைக்கும் மைய கதாபாத்திரங்களுக்கு எப்படி எந்த ரூபத்தில் எல்லாம் சிக்கல் வருகிறது…? பங்கு பிரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும், அதன் இறுதிகட்டத் தீர்வையும் இப்படத்தின் திரைக்கதை விளக்குகிறது. ஆரம்பத்திலேயே சொன்னது மாதிரி சிரிக்க வைக்க வேண்டும் என்பது…

Read More

கண்ணகி விமர்சனம்

  தன் கணவனால் பல்வேறு அவலங்களுக்கு ஆனாலும் கூட கணவனுக்காக கடைசி வரை நின்றவள் அந்தக் கால கண்ணகி. இந்த காலத்தில் திருமண உறவுக்கு காத்திருக்கும் பெண்ணோ, திருமண பந்தம் சரியில்லாமல் விவாகரத்து கோரும் பெண்ணோ, திருமணமோ காதலோ தனக்கு செட் ஆகாது என்று லிவிங்-கில் வாழும் பெண்ணோ, அல்லது காதலனோடு லிவிங்-கில் இருக்கும் பெண்ணோ, யாராக இருந்தாலும் இன்னும் ஆண்களை நம்பி வாழ வேண்டிய கலியுக கண்ணகியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதே “கண்ணகி” திரைப்படத்தின் கதை. பெண்களுக்கு திருமணமே பாதுகாப்பைத் தரும் என்று சொல்லி  சொல்லி வளர்க்கப்படும் கலை (அம்மு அபிராமி), திருமணம் தனக்கான பாதுகாப்பை தராமல் விவாகரத்து கொடுத்து தன்னை வெளித்தள்ள முயலும் போது செய்வதறியாது திகைக்கும் நேத்ரா (வித்யா பிரதீப்), காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் லிவிங்-கில் இருப்போம் என்று வாழும்  நதி,…

Read More

ஃபைட் க்ளப் விமர்சனம்

  வடசென்னை களம், கஞ்சா போதைப் பொருள் கடத்தல், வளர்ச்சிக்கு முயலும் இளைஞர், அவருக்கு உதவும் வடசென்னை முக்கியப் புள்ளி, துரோகம், பழிவாங்கல், கேங்க், கேங்க்வார் சண்டை இவைகளின் தொகுப்பே ஃபைட் க்ளப். வட சென்னைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அங்க அடையாளத்தில் இருந்து சற்றும் பிரளாத மற்றுமொரு தமிழ் சினிமா. வடசென்னை என்றாலே போதை கலாச்சாரம், கேங்க் வார், சண்டை, அடிதடி வம்புக்கு பயப்படாத இளைஞர்கள், கால் பந்தாட்டம், கேரம், மேற்கத்திய நடனம், நட்பு, துரோகம், பழி வாங்கல் என்று ஏற்கனவே போட்டு வைக்கப்பட்டிருக்கும் கெட்டியான எந்த மழைக்கும் எந்த நூற்றாண்டுக்கும் பெயர்ந்தே போகாத தார் சாலையில்  ஓடவிடப்பட்டிருக்கும் புதிய பேருந்து தான் “ஃபைட் க்ளப்”. எங்களை குற்றவாளிகளாகவே சித்தரிக்காதீர்கள்; பிற பகுதி மக்கள் எங்களை பார்த்தாலே பழகத் தயங்குகிறார்கள்; ஒதுங்கிப் போகிறார்கள், எங்களிடமும் வாழ்க்கை இருக்கிறது, எந்த…

Read More

சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் “ஸ்பார்க் L.I.F.E” அமேசானில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது

‘இளம் நாயகன்’ விக்ராந்த், நடிகைகள் மெஹரின் பிர்சாதா மற்றும் ருக்ஷா தில்லான் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘ஸ்பார்க் L.I.F.E’. இந்தத் திரைப்படம் நவம்பர் 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இளம் நாயகன் விக்ராந்த் கதையின் நாயகனாக அறிமுகமானதுடன், இப்படத்திற்கு கதை, திரைக்கதையும் அவரே எழுதி இருக்கிறார். இப்படத்தை டெஃப் ஃப்ராக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘ஹிருதயம்’ மற்றும் ‘குஷி’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். திரில்லர் ஜானரிலான படைப்புகளை விரும்பி ரசிக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தத் திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது. எதிர்பாராத திருப்பங்களையும் சுவாராசியமான முடிச்சுகளையும் கொண்ட இந்த சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படம்.. நல்ல சக்திக்கும் – தீய…

Read More

கோவை வெடிவிபத்தை பேசும் படமா இந்த பாய் – Sleeper Cell?

இயக்குநர் புவன் செல்வகுமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “பாய்” ஸ்லீப்பர் செல். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது பாய் ஸ்லீப்பர் செல் படத்தின் ட்ரைலர் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மூன்று இடங்களில் bomb blast உறுதி என்ற வசனத்தைக்கொண்டு Church மற்றும் கோவில் visual – உடன் trailer ஆரம்பம் ஆகிறது. எங்க பாய் சொல்வார் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் (அப்பொழுது மூன்று மதங்களின் பெயர் paper – ல் எழுதியிருப்பது ) நான் மதம் மாறனுமா? இஸ்லாமிய பெண் தொழுகும்போது மூன்று பேர் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டு இருப்பது. பிடித்த பெண்ணை கல்யாணம் செய்ய மதம் மாற்றம் போன்ற வசனங்களைக் கொண்டு விறுவிறுப்பான காட்சிகளுடன் Trailer சுவாரஸ்யமாக இருக்க இறுதியில்…

Read More

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களைக் குவித்த “உடன்பால்” திரைப்படம் !!

  டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. பார்வையாளர்கள் பெரும் கரகோஷம் எழுப்பிப் படக்குழுவினரை வாழ்த்தினர். சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர். இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நேற்று “உடன்பால்” படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி,…

Read More

சமுத்திரக்கனி, யோகி பாபு நடிப்பில் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகிறது

11:11 புரொடக்‌ஷன் டாக்டர். பிரபு திலக் வழங்கும், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி. ஆனந் ஜோசப் ராஜ் தயாரிப்பில், சமுத்திரகனி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் டிசம்பர் 29,2023 அன்று வெளியாகிறது! ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 புரொடக்‌ஷன் டாக்டர். பிரபு திலக் அவர்கள். தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ எனும் புதிய படத்தை வழங்கவுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 11:11 புரொடக்‌ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’…

Read More