ஒரு சில தலைவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு தலைவர் தான் டாக்டர் எம். ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து வருகிறார். அவரின் பாடல்களும் காலத்தால் அழியாதவை. பல ஆண்டுகள் மற்றும் தலைமுறைகள் கடந்தாலும் இன்னும் ஆழமாக மனதில் நிற்கக் கூடியவை. தற்போதைய தலைமுறை நடிகர்களில் வணிக ரீதியில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனது கனா படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.தனது இரண்டாவது தயாரிப்பிற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று பெயரிட்டிருக்கிறார். பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். “எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். ஒரு நடிகர்…
Read Moreசென்னை பாடியில் உள்ள சிவசக்தி சினிமாஸ் திரையரங்கில் நவீன லேசர் திரையிடல்!
சென்னை பாடியில் நல்ல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வரும் திரையரங்கம் சிவசக்தி சினிமாஸ். தற்போது மேலும் அதிநவீன தொழில்நுட்பமான RGB Laser தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கிறது. இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கும் 3வது திரையரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். மேலும் லேசர் தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்ட குப்பத்து ராஜா, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் ட்ரைலர்களை பார்த்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பல வகையான ப்ரஜக்ஷன்களை பார்த்திருக்கிறோம், இங்கு புது வகையான ஒரு லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார் படூர் ரமேஷ். அவர் தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக மாறிக் கொண்டிருக்கிறார். பல தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். இதில் படங்கள் மிக துல்லியமாக தெரிகிறது என்றார் ரோகிணி பன்னீர் செல்வம்.இந்த…
Read Moreபிரம்மாஸ்த்ரா படத்தின் லோகோவை தமிழ் மொழியில் வெளியிட்ட தனுஷ் மற்றும் சூர்யா !!
இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன் , ரன்பீர் கபூர், அலியா பாட் , மௌனி ராய் , நாகர்ஜுனா அக்கிநேநி ஆகியோர் நடிக்கும் பிரமாண்ட படம் தான் பிரம்மாஸ்த்ரா . மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் பிரம்மாண்டமான லோகோ வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் லோகோ தமிழ் மொழியில் வெளியானது.. தமிழில் நடிகர் தனுஷ் மற்றும் சூர்யா ஆகியோர் மதியம் 2 மணிக்கு வெளியிட்டனர் .தெலுங்கு மொழியில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும் ,பிரபல நடிகர் ராணா டகுபடி -யும் காலை 11 மணிக்கு வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிராமாஸ்டரா திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் 2019 ல் வெளியாக இருக்கிறது. தயாரிப்பு :ஹிரோ யாஷ் ஜோகர் கரண் ஜோகர், அபூர்வா மேஹ்டா , நமிட் மல்ஹோத்ரா , ரன்பீர் கபூர் ,…
Read Moreபடம் பார்பவர்களை ஏங்க வைக்கும் “ நெடுநல்வாடை “ மார்ச் 15 ல் வெளியாகிறது
உடன் படித்த 50 நண்பர்களின் பண முதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்ஷன்ஸின் ‘நெடுநல்வாடை. பூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர்,அஜய்நடராஜ்,மைம்கோபி,ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் தயாரிப்பு : பி – ஸ்டார் புரொடக்ஷன்ஸ் இசை : ஜோஸ் ஃபிராங்க்ளின் ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து படத்தொகுப்பு : மு.காசிவிஸ்வநாதன் கலை : விஜய் தென்னரசு சண்டை பயிற்சி : ராம்போ விமல் நடனம் : தினா, சதீஷ்போஸ் மக்கள் தொடர்பு : மணவை புவன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செல்வகண்ணன் படம் பற்றி இயக்குனர் செல்வகண்ணன் கூறியதாவது… எல்லோரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் யாரோ ஒருத்தரோட தியாகம் இருக்கும் என்னோட இந்த நெடுநல்வாடை படத்திற்கு பிறகு என்…
Read Moreஇயக்குனராக அவதாரம் எடுத்துள்ள பிரித்விராஜின் `லூசிஃபெர் ‘ படத்தில் நடிக்கும் மோகன்லால் !!
நடிகர் பிரித்விராஜ் மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர் . தமிழ் தெலுங்கு , பாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.தமிழ் சினிமாவில் கனா கண்டேன் படத்தில் அறிமுகமாகிய இவர் பாரிஜாதம் , மொழி , அபியும் நானும் , ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் , பாடகர் , தயாரிப்பாளர் என அனைத்து பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். . இயக்குனராக இவர் இயக்கும் முதல் படம் ‘லூசிஃபெர் ‘. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தளபதி விஜய் உடன் ஜில்லா , சூர்யாவுடன் காப்பான் போன்ற படங்களில் தமிழ் நடித்து இருக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. …
Read Moreமக்களவை + தமிழக இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
இந்திய மக்களில் பலர் எதிர்பார்த்திருந்த மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, 7ஆம் கட்ட தேர்தல் மே 17ஆம் தேதி முடிவடையும். மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் மார்ச் 25. தேர்தலில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். . நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில்…
Read Moreசாதிய ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்டு அதற்கானத் தீர்வைச் சொல்லும் படம் உறியடி2
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், “உறியடி உறியடி2 எடுப்பதற்கான காரணம் என்ன?” என்பதற்கு அழகான பதிலைச் சொல்லி இருக்கிறார்.”இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி2 வருவதற்கான காரணம்” என்கிறார் மற்றும் நடிகரான விஜய்குமார். மேலும் அவர் படம் பற்றி கூறும்போது, “எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான்…
Read Moreகமல் கட்சி சின்னம் ’டார்ச் லைட்’
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல், 39 கட்சிகளுக்கான சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில், கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். வெள்ளை நிறம் கொண்ட கொடியின் நடுவில் நட்சத்திரமும், அதை சுற்றி 6 கைகள் கோர்த்து இருப்பது போன்ற படமும் இடம்பெற்றது. கமல் தனது கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார். தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில்,…
Read Moreராணுவ வீரர் படத்தை அரசியல் கட்சிகள் பயன் படுத்த தடை : தேர்தல் கமிஷன்
விமானி அபிநந்தனின் புகைப்படத்தைப் போட்டு பாஜ ஆதாயம் தேடுவதாக எழுந்த புகாரையடுத்து, அரசியல் கட்சிகள் நடத்தும் பிரசாரத்தில் ராணுவ வீரர்களின் புகைப்படம் பயன்படுத்தத் தடைவிதித்து, தேர்தல் ஆணைய செயலர் பிரமோத் குமார் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாகப் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்திய போது அவர்களை விரட்டிச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார். உலக நாடுகள் அழுத்தம் கொடுத்ததின் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, மக்களவை தேர்தலையொட்டி கட்சிகள் ஆரம்பக்கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ள நிலையில், ராணுவ வீரர்களின் நடவடிக்கையை பாஜ தனது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில், உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்…
Read Moreபுல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி!
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா தன்னுடைய வரவேற்புரையில்,“ இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும் நானும் நாற்பதாண்டுகளுக்கு மேல் நண்பர்கள். அவர் மிகச் சிறந்த உழைப்பாளி என்பதை நாங்கள் ஒரு முறை மலைவாசஸ்தலம் ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டபோது அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் எனது உறவினர். இந்த படத்தின் இயக்குனரும் எனது உறவினரே. அதனால் இது எமக்கு குடும்ப விழாவாக தெரிகிறது. ஒரு பெண்ணிற்கு பிரசவத்திற்கு…
Read More