“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது. !!  

பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃபேன்டஸி-ஹாரர்- திரில்லர் படமான “அகத்தியா” படத்தின் மூன்றாவது சிங்கிள், “செம்மண்ணு தானே”, பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புகழ்மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல், நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மருத்துவ செழுமையைக் கொண்டாடும் தலைசிறந்த படைப்பாக, ரசிகர்களையும், விமர்சகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடலின் ஆழமான வேரூன்றிய கருப்பொருள்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், இந்தப் பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான “அகத்தியா” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான “அகத்தியா” படம், பிப்ரவரி 28, 2025 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்படுகிறது. “செம்மண்ணு தானே” என்பது வெறும் மெல்லிசை பாடல் மட்டும் அல்ல; இது நமது நிலத்தின் பாரம்பரியத்திற்கான ஒரு ஆத்மார்த்தமான பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்த…

Read More

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் “L2E எம்புரான்” திரைப்படம் மூலம், மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் “தி கம்ப்ளீட் ஆக்டர்” மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். பெரும் வெற்றிப் படங்களான லூசிஃபர் மற்றும் ப்ரோ டாடிக்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகராக அவர்களின் கூட்டணியில், உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.   2019 ல் வெளியான லூசிஃபர் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நேற்று கொச்சியில் விமரிசையாக நடைபெற்றது, இந்நிகழ்வில் மெகாஸ்டார் மம்முட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், மேலும் படத்தின்…

Read More

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் – திரை விமர்சனம்

‘லவ் யூ’ சொல்வதற்கும் ‘ஐ லவ் யூ’ சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல வந்திருக்கும் படம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஹரி பாஸ்கர் சக மாணவி லாஸ்லியா வை ஒருதலையாக விரும்புகிறார். லாஸ்லியாவோ, உன் மேல் எனக்கு காதலே இல்லை என்று தனது சொல்லி விட…லாஸ்லியா பணக்கார வீட்டு பெண்.ஹரி பாஸ்கரோ மிடில் கிளாஸ் ஃபேமிலி. போக்குவரத்துகழகத்தில் வேலை பார்க்கும் அப்பாவின் சொற்ப வருமானமே நாயகனின் குடும்பத்தை தாங்குகிறது.நாலு வருடம் கடந்த நிலையிலும் நாயகன் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.இந்நிலையில் தன் கவனக்குறைவால் குடும்பத்துக்கே அவமானம் தரக்கூடிய ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்ட நாயகன், பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம் என்ற சூழலில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு உடன்படுகிறான். ஆனால் அவன் கூட்டி பெருக்க வேண்டிய பங்களா…

Read More

பட அதிபரின் தந்தை காலமானார்!!

இரவும் பகலும், போக்கிரி மன்னன், ஒற்றைப் பனைமரம், சிப்பாய், உள்ளிட்ட பல படங்களை தயாரித்த, திருவண்ணாமலை மாட்டத்தைச் சார்ந்த ”RSSS பிக்சர்ஸ்” படத் தயாரிப்பு நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான எஸ். தணிகைவேல் அவர்களின் தந்தை எம்.சீனிவாசன் அவர்கள் 24.01.2025 அன்று இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

Read More

ஆர்யா – அனுராக் காஷ்யப் – கிரீஷ் ஜகர்லமுடி – ராஜ் பி. ஷெட்டி – லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்ட சசிகுமாரின் ‘மை லார்ட் ‘ பட ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா – பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் – கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி – தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி – மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர்…

Read More

அனுராக் கஷ்யப்-வெற்றிமாறன் தயாரிக்கும் Bad Girl படம்! டீசர் வெளியானது..

அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது…

Read More

பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்கள் அஜித் குமார் மற்றும் ஷோபனாவிற்கு வாழ்த்துகள்.

  ‘அமராவதி’ திரைப்படம் மூலம் 1993-ல் தனது திரைப்பயணத்தை தொடங்கி, 61 திரைப்படங்கள் மூலம், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, பல சிறப்பான திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்புடன், முன்னணி நடிகராகவும், Box Office வசூலில் பல சாதனைகளையும் புரிந்த திரு. அஜித் குமார் அவர்களுக்கு இந்திய அரசின் பெருமைக்குரிய “பத்ம பூஷன்” விருது கிடைத்துள்ளது தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது. சினிமாவில் மட்டுமல்லாது கார் ரேஸிங் மூலமும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் திரு. அஜித் குமார் அவர்களின் இந்த பயணம் மேலும் தொடர்ந்து, அவர் பல வெற்றிகளை குவிக்கவும், விருதுகளைப் பெறவும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. நடனம் மற்றும் நடிப்பு மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை…

Read More

அம்மாவின் தியாகம், அப்பா இருந்திருக்கணும்.. நடிகர் அஜித் குமார் உருக்கம்

குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது. பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த…

Read More

குழந்தைகள் முன்னேற்ற கழகம் – திரை விமர்சனம்

அடுத்த தலைமுறை அரசியலை பேசும் படம். அதை முடிந்தவரை கலகலப்பாக சொல்ல முயன்று இருக்கிறார்கள். அரசியல்வாதி யோகி பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகன் பிறந்த நிலையில் வீட்டு வேலைக்கு வந்த வட மாநில பணிப்பெண் மூலமும் ஒரு மகனை பெற்றுக் கொள்கிறார். வட மாநில பெண்ணுக்கு பிறந்த மகன் சிறுவயதாக இருக்கும் போதே தாயையும் மகனையும் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். நாட்களின் வேகமான நகர்வில் ஒரே பள்ளியில் மகன்கள் இருவரும் படிக்கிறார்கள். இருவருமே அரசியல் கனவுடன் வளர்கிறார்கள். இருவரின் லட்சியமுமே எதிர்காலத்தில் அரசியலில் உச்சம் தொட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே. இருவரின் கனவும் நனவானதா என்பது கிளைமாக்ஸ். குற்ற உணர்வு இல்லாத இந்த அரசியல்வாதி கேரக்டரில் காமெடி, கலகலப்பு என ரசிகனை சிரிக்க வைக்கும் வேலையை செவ்வனே செய்கிறார், யோகி பாபு.…

Read More

ராமாயணா: தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ் ராமா – திரை விமர்சனம்

அயோத்தியில் அரசராக பதவி ஏற்க இருந்த ராமர் மந்தாரையின் சூழ்ச்சியால் 14 வருடம் காட்டுக்கு போக நேரிடுகிறது. மனைவி சீதை, தம்பி லட்சுமணனும் உடன் போகிறார்கள். காட்டில் லட்சுமணனை பார்த்த மாத்திரத்தில் ராவணனின் தங்கை சூர்ப்ப னகைக்கு காதல் பிறக்க, அதை சூர்ப்பனகை லட்சுமணனிடமே சொல்லும் போது லட்சுமணனின் வாள் சூர்ப்பனகை மூக்கை பதம் பார்த்து விடுகிறது. மூக்கை இழந்த சூர்ப்பனகை தனது புகாரை தனது அண்ணனும் இலங்கை வேந்தனுமான ராவணனிடம் கொண்டு போக… அதற்கு பழிவாங்கும் நோக்கில் ராவணன் சீதையை சிறை எடுக்க… சுக்ரீவன் தலைமையிலான வானர படை உதவியுடன் ராவணனை போரில் வென்று சீதையை மீட்ட கதை. அதை அனிமேஷனில் திகட்ட திகட்ட தந்து இருக்கிறார்கள். படத்தின் சிறப்பம்சம் நேர்த்தியான தமிழ் டப்பிங். குரல் கொடுத்தவர்கள் ராமாயண காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள்.கும்பகர்ணனின்…

Read More