விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது. 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்த படம், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர். இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர். மற்றும் வி.டி.வி கணேஷ், ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர். நடிகர் சிலம்பரசன் டி.ஆர் கூறியதாவது… “விண்ணைத்தாண்டி வருவாயா…

Read More

முத்தத்தினால் வரும் பிரச்னை..!கிஸ் கிஸ் கிஸ்ஸிக் டிரைலர்!

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான “பிண்டு கி பப்பி” இப்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் “கிஸ் கிஸ் கிஸிக்” என்ற பெயரில் மார்ச் 21 ஆம் தேதி இந்தி பதிப்புடன் இணைந்து வெளியாகிறது. புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடுகிறது, மேலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மார்ச் 8 ஆம் தேதி வெளியானது. காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமான “பிண்டு கி பப்பி” கவர்ச்சிமிகு இளைஞனான பிண்டு வாழ்வில் ஏற்படும் காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைச் சொல்கிறது. அவன் ஒரு உற்சாகமான…

Read More

ரவி மோகன் நடித்த ஹிட் படம் “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ் .

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் திரைத்துறையில் 20 வருடங்களைக் கடந்திருக்கிறார். இதனைக் கொண்டாடும் வகையில் அவர் நடித்த பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மீண்டும் புதுப்பொலிவுடன் மார்ச் 14ம் தேதி வெளியாகவுள்ளது. எடிட்டர் மோகன் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், 2003 ஆம் வருடம் ரவி மோகனை திரைக்கு அறிமுகப்படுத்திய படம் ஜெயம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து திரையுலகில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதர்கடுத்த ஆண்டு 2004 ல் இதே கூட்டணியில் வெளியான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. அதிரடி ஆக்‌ஷன் படமான இப்படத்தை தியேட்டர்களில் மக்கள் கொடுத்த ஆர்பாட்ட ரியாக்‌ஷன் மறக்க முடியாதது. இந்த வெற்றி ரவிமோகன்-மோகன்ராஜா இருவர் காம்பினேஷனுக்கும் இன்றைக்கும் பெரும் வரவேற்ப்புள்ளது. இதில்…

Read More

ஜென்டில் வுமன்- திரை விமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிஜோமோல் ஜோஸை திருமணம் செய்து, தான் பணிபுரியும் சென்னைக்கு அழைத்து வருகிறார் ஹரி கிருஷ்ணன். எல் ஐ சி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் அவர் சென்னையில் ஒரு பிளாட்டில் தனது மனைவி லிஜோ மோலுடன் இனிதான இல்லறம் நடத்துகிறார். மனைவியை தங்கமாக தாங்குகிறார். இனிதான இல்லறம் மூன்று மாதங்களை கடந்த நிலையில் லிஜாவின் தோழியின் தங்கை ஒரு இன்டர்வியூவிற்காக சென்னை வர, கணவரின் அனுமதி பெற்று தனது இல்லத்தில் தங்க வைக்கிறார். இந்நிலையில் லிஜோமோல் கோவிலுக்குச் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்ணிடம் குடிக்க வென்னீர் கேட்கிறார் ஹரிகிருஷ்ணன். அப்போது அந்தப் பெண்ணை தொடர்ந்து ஹரிகிருஷ்ணன் உடன் போகிறார். வென்னீர் போடுவதில் மும்முர மாக இருந்த அந்த பெண்ணுக்கே தெரியாமல் போய் அவள் பின்னால் நிற்கிறார். அப்போது எதிர்பாராமல் ஹரி…

Read More

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள’பைசன்’ எனும் துணிச்சலான விளையாட்டு வீரரை பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பைசனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அனைவரின் பாராட்டையும் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விளையாட்டு வீரர் பற்றிய இந்த கதையின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- நீலம் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. கபடி வீரராக துருவ் விக்ரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவருடன் இணைந்து நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு.. ஆர்வம்.. மீள் உருவாக்கம்.. மற்றும் அனைத்து தடைகளையும் எதிர்த்து வெற்றி பெறுவதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டை உயிர்ப்பிக்கிறது. கதை சொல்வதில் தனித்துவமான பாணியை கொண்டிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன்’- பார்வையாளர்களை உத்வேகப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் தமிழில் வெளியாகும் ஒரு மைல்கல் படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. மேலும் இந்த பயணத்தின் புதிய தகவல்களுக்காக…

Read More

மர்மர் -திரை விமர்சனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைப் பகுதி தான் இந்த கதையின் நாயகன். அங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் ஏழு கன்னி தெய்வங்கள் இருப்பதாகவும், அவர்கள் பெளணர்மி தினத்தில் அங்கிருக்கும் குளத்தில் நீராட வருவதாகவும், அந்த கன்னி தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் செய்ய வேண்டிய பூஜையை செய்ய விடாமல், அங்கிருக்கும் சூனியக்காரியின் ஆவி தடுப்பதாகவும்அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். அந்த சூனியக்காரி காட்டில் ஆவியாக அலைவதால், அந்த காட்டுக்குள் சென்ற யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை என்பதும் கிராம மக்கள் திகிலுடன் தரும் செய்தியாக இருக்க…இதை கட்டுக்கதை என்று நம்பும் கூட்டமும் இருக்கும் அல்லவா.அந்தப்படியே இது வெறும் கட்டுக்கதை என்பதை நிரூபிக்க அந்த காட்டுக்குள் சென்று ஆவணப்படம் எடுக்க முடிவு செய்கிறது இரண்டு ஆண் இரண்டு பெண் அடங்கிய ஒரு இளைஞர் கூட்டம். இதற்காக அந்த காட்டுப் பகுதியில் உள்ள…

Read More

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘3 BHK’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இதன் டீசரும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தெரிவித்திருப்பதாவது, “மனதை வருடும் இதமான, திருப்தியான கதைகளைத் தயாரிப்பது தயாரிப்பாளராக எனக்கு மகிழ்ச்சியான விஷயம். அந்த அனுபவத்தைக் கொடுத்த ‘3 BHK’ படத்திற்கும், படக்குழுவினருக்கும் நன்றி. நாங்கள் திட்டமிட்டபடியே சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்போம்.…

Read More

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக,…

Read More

எமகாதகி – திரை விமர்சனம்

பாசமிகு அப்பா, கனிவு காட்டும் அம்மா, அண்ணன், அண்ணி என்று சின்ன குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வருகிறார் ரூபா குடவையூர்.ஆஸ்துமா பேஷண்டான அவர் ஒருநாள் தனது அப்பா கோபத்தில் கன்னத்தில் அறைந்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கில் தொங்கிவிடுகிறார்.ரூபா தற்கொலை செய்து கொண்டார் என்பது வெளியே தெரிந்தால் ஊரார் பலவிதமாக கதை கட்டுவார்கள் என பயந்த குடும்பத்தார், அவருக்கு ஏற்கனவே இருந்த ஆஸ்துமா பிரச்சனையால் இறந்தவிட்டதாக ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள். இறுதிச் சடங்குகள் முடிந்து சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல தயாராகும் போது தான் பிரச்சனை ஆரம்பம். தூக்க முடியாத அளவுக்கு சடலம் கனமாக இருக்க, சடலத்தை தூக்க முயன்றவர்கள் சடலத்தில் ஏற்பட்ட திடீர் அசைவுக்கு பயந்து அலறி அடித்து வெளியே ஓடி வருகிறார்கள்.மீண்டும் சடலத்தை தூக்க இப்போது முன்பை விடவும் அதிகம் பேர் வருகிறார்கள்.…

Read More

மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ஒரு கதை: ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது!

நம் வாழ்வின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. சில சோதனைகள் உங்கள் தைரியம், உங்கள் கனவுகள் மற்றும் உங்கள் தியாகங்களை சோதிக்கும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது. கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் ‘டெஸ்ட்’. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான மற்றும் அழுத்தமான கதைகளைத் தயாரித்த ‘YNOT’ ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இது பற்றி இயக்குநர் சஷிகாந்த் பகிர்ந்து கொண்டதாவது, “பல ஆண்டுகளாக…

Read More