JioHotstar-இல் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகும் House of the Dragon சீசன் 3-இன் இறுதிக்கு முந்தைய எபிசோட் ஆன “The Dragon in Winter”, இந்த சீசனின் மிகவும் பரபரப்பான மற்றும் விறுவிறுப்பான அத்தியாயங்களில் ஒன்றாக அமைகிறது. டிராகன் போர்களும், மனதை உலுக்கும் தனிப்பட்ட மோதல்களும் ஒன்றாக கலந்த இந்த எபிசோட், “Dance of the Dragons” போராட்டத்தை உச்சக்கட்ட பரபரப்புக்குக் கொண்டு செல்கிறது. *ரேனிரா தனது மிகக் கடினமான தருணத்தில்:* தனது மிக முக்கியமான ஆதரவாளரை இழந்த ரேனிரா டார்கேரியன், அரசாட்சியும் போராட்டமும் இதுவரை பார்க்காத அளவுக்கு மனஅழுத்தத்தின் விளிம்புக்கு தள்ளப்படுகிறார். பதில்களைத் தேடும் அவரது பயணம் ஹெலேனாவை நோக்கி செல்கிறது. ஹெலேனாவின் தரிசனங்கள், ராஜ்யத்திற்கும் டார்கேரியன் வம்சத்திற்கும் எதிர்காலத்தில் என்ன காத்திருக்கிறது என்பதைப் பற்றிய அச்சமூட்டும் காட்சிகளை வெளிப்படுத்துகின்றன. *அமைதியற்ற உணர்வுகளால் நிறைந்த மீள்சந்திப்பு:*…
Read Moreநடிகர் கிருஷ்ணாவின் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் – மர்டர் இன் டவுன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன் மீண்டும் வருகிறார். ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு நடிகரின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களையும் தனித்துவமான கதைகளையும் ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற நடிகரான கிருஷ்ணா குலசேகரனுக்கு, அவரது 25வது படம் ஒரு ஈர்க்கக்கூடிய புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. அதிகாரப்பூர்வமாக ‘மர்டர் இன் டவுன்’ (Murder in Town) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மைல்கல் திட்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சினிமா ஆர்வலர்கள் மற்றும் திரையுலக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் வழங்கும் ‘மர்டர் இன் டவுன்’ படத்தை, பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். அவர் இப்படத்தை ஒரு விறுவிறுப்பான புலனாய்வு குற்றத் திரில்லராக உருவாக்கியுள்ளார்.…
Read Moreஅகமது மாலிக் வடையார் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார்!
சென்னை, ஆகஸ்ட் 1 2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை மாநகரில் இன்று தனது ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்வில் தேசிய நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் மற்றும் தென்னிந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, அகமது மாலிக் வடையார் அவர்கள் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அமைப்பின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் புதிய கட்டம் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் மார்கதர்ஷக் டாக்டர் இந்திரேஷ் குமார் ஜி அவர்கள்…
Read Moreபிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.
பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் காணக் கிடைக்கும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி பேசுகையில், ” இந்த இணைய தொடர் மிக சிறப்பாக உருவாகி இருக்கிறது.…
Read Moreஹை கான்செப்ட்’டில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய முயற்சி : விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இல.சண்முகசுந்தரின் ‘பீப்’
எம் குவெஸ்ட் மூவிஸ் (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரகுதில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா ஆகியோர் இதில் நடித்துள்ளனர் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரசாந்த் விஹாரி இசையமைக்கிறார். இவர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘கேர்ள் பிரண்ட்’ படத்திற்கு இசையமைத்தவர். கன்னட திரை உலகை சேர்ந்த, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் மலையாள திரை உலகைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் டான்பாஸ்கோவின் உதவியாளர் விக்னேஷ் ஆகியோர் படத்தொகுப்பை கவனித்துள்ளனர். மிஸ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ட்ரெயின் படத்தில் பணியாற்றிய ராம்குமார் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை…
Read Moreகார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு
கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘சர்தார்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி வரும் இப்படத்தின் டீசர், படத்தின் பிரம்மாண்டம், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் கவனித்துள்ளார். கலை இயக்குநராக ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பாளராக வேலுக்குட்டி பணியாற்றியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை ஏ. பால் பாண்டி மேற்கொண்டுள்ளார். இணைத் தயாரிப்பாளராக…
Read Moreமுற்றிலும் புது முகங்களின் ஆக்கிரமிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஆலி’..
மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள் புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் வகையில் மலையாளப் படக் குழுவினர் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் ‘ஆலி’.இது தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது. ஆலி – கதைச் சுருக்கம் தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் இளம் கதை – பெண் காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் “ஆலி கதாநாயகி திருமணம் மதம் ஜாதி கடந்து நடைபெறுகிறது என்பதே படத்தின் விறுவிறுப்பான உச்சக்கட்டம். இப்படத்தில் பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ்…
Read Moreவி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், ‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகரும், அறிமுக இயக்குநருமான வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டுள்ளார். ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டயங்கரம்’…
Read Moreநியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – GKM தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை
‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026 விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சாதனை படைத்த முன்னணி தொழிலதிபர்கள், வளரும் தொழிலதிபர்கள், தங்கள் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு. GKM தமிழ்குமரன், வேலம்மாள் குழுமம் எம்.வி.எம்.வேல்மோகன் ஆகியோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். இந்த விழாவில் பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஆச்சி மசாலா ஐசக் உட்பட பலருக்கும் விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கியபின் தொழிலதிபர்களை திரு.GKM தமிழ்குமரன் வாழ்த்தி பேசினார். இது போன்ற விருதுகள் உற்சாகம் அளிக்கும். வாழ்வில் உயர உத்வேகத்தை கொடுக்கும். தொடர்ச்சியாக இந்த விழா நடக்க வேண்டும், விருதுகளை…
Read Moreபிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !
இசையமைப்பாளர் சைமன் K. கிங், இசைக்கோர்த்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். துள்ளலான இசையும், உற்சாகமான தாளமும் கொண்ட இந்தப் பாடல், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது சீசனுக்கு மேலும் உற்சாகத்தை சேர்க்கிறது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. இணைப்பு: https://www.instagram.com/reels/DbX86jHIJlB/ பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யிலிருந்து புதிய பாடலான ‘தெய்வா’ பாடலை இன்று வெளியிட்டுள்ளன. சைமன் K. கிங் இசையமைத்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை, சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள கவர்ச்சிகரமான வரிகளும், துள்ளலான இசையும்…
Read More
