டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசியதாவது.., பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. தயாரிப்பாளர் லட்சு கணேஷ் பேசியதாவது.., பருத்தி படத்தை படக்குழு மிகச்சிறப்பாக எடுத்துள்ளனர். படத்தில் நடித்த சோனியா அகர்வால் முதலாக அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. இயக்குநர் குரு A பேசியதாவது.., என் முதலாளி கோதண்டம், லட்சு கணேஷ் இருவரும் கதை சொன்ன உடனே, எப்போது ஷீட்டிங் போகலாம் என்று கேட்டனர். எனக்கு முழு ஆதரவு தந்து இப்படத்தை எடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த குழந்தை தயாரிப்பாளரின் குழந்தை. அவர்கள் இருவருக்கும்…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் டிசம்பர் 23, 2025 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், “ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. படமாக்குவது குறித்து ஜேசன் சஞ்சயின் தெளிவும், திட்டமிட்டபடி முழு படப்பிடிப்பையும் அவர் முடித்துக் கொடுத்துள்ளதுள்ளதும் இயக்குநராக அவரது திறமையை காட்டுகிறது. படப்பிடிப்பை முதலில் 80 நாட்கள் திட்டமிட்டோம். ஆனால், எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஆக்ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் உட்பட முழு படப்பிடிப்பையும் படக்குழுவினர் திட்டமிட்ட நாட்களுக்கு…
Read Moreநடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய தமிழ் தொடருக்கான அறிமுக புரோமோவை ஜியோஹாட்ஸ்டார் அதன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!
’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’ மற்றும் ’ஆஃபீஸ்’ போன்ற லாங்-ஃபார்மேட் வெப் சீரிஸ் வெற்றியை தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப்சீரிஸை ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் அறிமுகப்படுத்துகிறது. பிளாக்பஸ்டர் ’ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த அட்லீஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தத் தொடர் மூலம் நடிகர் விக்ராந்த் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார். ஜனவரி 1, 2026 முதல் LBW ப்ரீமியர் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற, ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி ப்ரீமியர் ஆகும் முதல் அசல் தமிழ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’டின் புதிய புரோமோவில், ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரனாக இருந்த ரங்கனின் கரியரில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகிறது. இப்போது பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், போராடும் கிரிக்கெட்…
Read Moreபராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா !!
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்னதாக,…
Read More23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்
தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேஷன் சார்பில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது. இந்த திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான தமிழ் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 திரைப்படங்கள் தேர்வாகியிருந்தது. விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட விழாவின் இறுதி நாளில் நடைப்பெற்றது. ராமின் இயக்கத்தில் வெளிவந்த ‘பறந்து போ’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வுக்குழுவினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. விழாவில் இயக்குநர் ராம், டிஸ்னி + ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் திரு. ப்ரதீப் மில்ராய் மற்றும் ஜி கே எஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனர் திரு. கருப்புசாமி அவர்களுடன் விருதை பெற்றுக்கொண்டார்.
Read Moreதுல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி !!
துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை –…
Read Moreயார் தீயசக்தி? பொதுவெளியில் பேச ஒத்தையா வரேன்! நீங்க தயாரா மிஸ்டர் விஜய்!
–மன்சூர் அலிகான் சரமாரியாக கேள்வி!! பாஜக தீயசக்தி. 2014 இல் இருந்து E.V.M. வச்சு பதவியவிட்டு இறங்காம, பாசிச ஆட்சி நடத்துறாங்களே கண்ணுக்கு தெரியலையா விஜய்! இல்ல, எஜமான விசுவாசமா? நீட்’ட யாரு கொண்டு வந்தா? தீய சக்தி பாஜாக இல்லயா விஜய்? 100 நாள் வேலை திட்டத்துல இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்து, நிதியும் ஒதுக்காம களவாணித்தனம் செய்யுற பிஜேபி தீய சக்தி இல்லயா விஜய்? திருப்பரங்குன்றத்துல கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்ட கபளீகரம் பண்ணி ரத்த ஆறு ஓட வைக்க நினைத்த பிஜேபி தீய சக்தி இல்லையா? பாதுகாத்த தி.மு.க அரசு உன் கண்ணுக்கு தீய சக்தியா விஜய்? எல்லாப் பொதுத்துறையையும் வித்து ஏப்பம் விட்டுட்டு, இந்தியாவுக்குன்னு சொந்தமா ஒரு ஏர்லைன்ஸ் கூட இல்லாத நாடா, மக்கள பிச்சை காரங்களா தொங்கவிட்டுட்ட பிஜேபி தீய…
Read More‘பாட்ஷா ‘- ‘பறந்து போ’- ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025
தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெள்ளித்திரை -சின்னத்திரை- டிஜிட்டல் திரை- ஆகிய திரையுலகில் வெளியான தரமிக்க படைப்புகளையும் , கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆட் ஃபிலிம் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் – தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் ஈஸ்வர் மற்றும் ரோகிணி சினிமாஸ் ஆகியோர் இணைந்து சாதனை படைத்த வெற்றியாளர்களுக்கு ‘ 7 ஸ்டார் அவார்ட்ஸ் 2025 ‘ எனும் விருதினை வழங்கி கௌரவிக்க தீர்மானித்தனர். இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கலை விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் – சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட வழக்கமான விருதுடன் ரீ ரிலிஸ் அவார்ட்- பெஸ்ட் ஸ்டோரிடெல்லர் அவார்ட் – பெஸ்ட் ட்ரெண்ட் செட்டர் தியேட்டர்…
Read Moreஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா – பத்திரிகையாளர் சந்திப்பு!
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் டூரிங் டாக்கீஸ். தமிழ் திரைப்பட வரலாற்றை டிஜிட்டல் ஆவணமாகப் பாதுகாப்பது, அதே நேரத்தில் வதந்தி மற்றும் சர்ச்சைகளைத் தவிர்த்து, சினிமாவைப் பற்றிய ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் ஆய்வுத் தன்மையுடைய உரையாடல்களை வழங்குவது இந்த சேனலின் பிரதான நோக்கமாகும். இந்த சேனலில் பல தசாப்தங்களாக தமிழ் திரைப்படத் துறையில் நேரடியாகச் செயல்பட்ட அனுபவத்தின் மூலம், திரு. சித்ரா லட்சுமணன் அவர்கள் உண்மைத்தன்மை கொண்ட தகவல்களையும் ஆழமான பார்வைகளையும் பகிர்ந்து வருகிறார். மற்ற எங்கும் பதிவு செய்யப்படாத பல அரிய நினைவுகள், அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் இந்த சேனலின் மூலம் ஆவணப்படுத்தப்படுகின்றன. பரபரப்பையும் ஊகங்களையும் தவிர்த்து, சினிமாவின் கலை, பண்பாடு,…
Read Moreஹாட் ஸ்பாட் 2much – முதல் பாகத்தை விட எதிர்பாராத மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட ஃபேமிலி என்டர்டெய்னர்
நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை யூ. முத்தையன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகம்…
Read More