மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் பயணிக்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் தேடலின் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. கதை குறித்த முக்கிய தகவல்கள் எதையும் வெளிப்படுத்தாமல், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டீசரில் விஜய்…
Read Moreஇளையராஜா, சரத்குமாரை சந்தித்த இயக்குநர் சேரன் தலைமையிலான குழுவினர்!! ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.
பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய இசைஞானி திரு. இளையராஜா அவர்களையும், மூன்று திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய திரு. சரத்குமார் அவர்களையும் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன், இணைச் செயலாளர் பாஸ்கர் சக்தி, செயற்குழு உறுப்பினர் நவீன் ஆகியோர் சந்தித்தோம். “நீங்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக இருப்பது சங்கத்திற்குப் பெருமை” என்ற எங்களது வேண்டுகோளை இருவரும் உடனடியாக ஏற்றுக்கொண்டு, விண்ணப்பப் படிவத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கையெழுத்திட்டார்கள். எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் இருவருக்கும் ஒரு பேனா அன்புடன் வழங்கப்பட்டது. நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணையும் தகுதியுடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் பங்களித்து வரும் பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களைச் சங்கத்தில் இணைக்கும் நமது பணி தொடர்ந்து நடைபெறும்.
Read Moreபிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா, ஆனந்தியை தள்ளியதில், ஆனந்தி காயமடைந்து வலியில் அழுகிறார். இதையடுத்து, மற்ற போட்டியாளர்கள் உடனடியாக ஆனந்திக்கு உதவி செய்து, அவரை தாங்கிப் பிடித்து டாஸ்க் பகுதியிலிருந்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். இந்த சம்பவம் பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24×7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.
Read Moreஐந்து மொழிகளில் உருவாகி வரும் ” ஃபீல் மை லவ் ” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது!
காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் ‘ஃபீல் மை லவ் ” இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது! இறுதி கட்டப் பணிகளை நெருங்கியுள்ளது ” ஃபீல் மை லவ் ” ஹரி பிரகாஷ்.எம் இயக்கியுள்ளார்! பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல ‘பான்-இந்தியா’ (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ” Feel My Love ” ஃபீல் மை லவ் ” தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில்…
Read Moreகஅட்ல் இந்தியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அட்ல் எம். போசாமியா தயாரித்து வழங்கும் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’, குஜராத்தி திரையுலகின் முதல் பான்இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், குஜராத்தி சினிமாவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படம் குஜராத்தி மொழியில் மட்டுமல்லாமல், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி என மொத்தம் 7 இந்திய மொழிகளில் வெளியாகிறது. தென்னிந்திய மற்றும் குஜராத்தி கலைஞர்களின் தனித்துவமான கூட்டணி இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தை விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் எழுதி இயக்குகிறார். பிரபல நடிகர்களான அர்பித் ரங்கா மற்றும் மௌலிக் சௌஹான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். சர்வதேச தரத்திலான காட்சியமைப்பை உருவாக்குவதற்காக, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சுபாஷ்…
Read Moreஅட்டகாசமான வீடியோவுடன் தலைப்பை அறிவித்த படக்குழு – கமர்ஷியல் ஆக்ஷன் விருந்துக்கு தயாராகும் படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, ரசிகர்களை கவரும் வகையிலான அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘பவர்ஹவுஸ்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ஒரு அழகான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில் தொடங்குகிறது. கல்யாண ஆர்டர்…
Read Moreசமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் VFX நிறைந்த சயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் திரைப்படம்
லயன் வீ ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரான் டாங் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கஸ்தூரி வீடு’. இப்படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. லயன் டாக்டர் எஸ். வாகேஷ் மற்றும் ராணி ஸ்ரீ ரெட்டி தயாரிக்கும் இப்படத்தை விஜய் ஆர். ஆனந்த் எழுதி இயக்குகிறார். GGB விஜயலட்சுமி, பப்லு மற்றும் அனிதா விஜய் ஆனந்த் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். இப்படத்தில் சமுத்திரக்கனி, டேவிட் டிட்டோ, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், தம்பி ராமையா மற்றும் தனுஜா மதுரபந்துலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யோகி பாபு சிறப்புத் தோற்றத்தில் இடம்பெறுகிறார். **இதுவரை காணாத புதிய அவதாரங்களில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு** இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான அவதாரங்களில் தோன்றுகின்றனர். மேலும், சமுத்திரக்கனி முதன்முறையாக ஹாரர்…
Read Moreஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்”இராவணன் சோலையில் சிவன் மலை” இசைஞானி இளையராஜா குத்து விளக்கேற்ற விழா இனிதே துவங்கியது
இசைஞானி இளையராஜா இசையில் “இராவணன் சோலையில் சிவன் மலை” பூஜை இன்று (14/09/2026) இளையராஜாவின் இசைக்கோவிலில் இனிதே நடைபெற்றது. திரு இசைஞானி இளையராஜா, திரு கங்கை அமரன், திரு இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற விழா இனிதே துவங்கியது.. தென்னகத்தில் பல மலைப்பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படம், இயற்கை எழில்கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்டமாக படப்பிடிப்பு துவங்குகிறது. இப்படத்தில் ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
Read Moreதீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆப் மகாசக்தி – Rise of Mahasakthi’ எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை –…
Read More‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!
தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா (பென் ஸ்டுடியோஸ்) இணைந்து தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘டாய்ரா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உண்மை என்பது எப்போதும் முழுமையானதல்ல, நீதியைப் பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள முடியும், ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு விளைவு உண்டு போன்ற விஷயங்களை முன்னிறுத்தி கதையின் முதல் பார்வையை இந்த டிரெய்லர் வழங்குகிறது. மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் குற்றம், நீதி மற்றும் தண்டனை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, பரபரப்பு நிறைந்த உணர்வுப்பூர்வமான கதையைச் சொல்கிறது. யஷ் கேஸ்வானி, சிமா அகர்வால் மற்றும் மேக்னா குல்சார் ஆகியோர் இணைந்து இப்படத்தின்…
Read More
