Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு பாடலை A R ரஹ்மான் பாடியிருந்தாலே ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மூன்வாக் மினி கேசட் அந்த அனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது. யூடுயூபில் ஒரே வீடியோவாக, ஆல்பத்தில் உள்ள அனைத்து 5 பாடல்களையும் தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் முழு ஆல்பத்தையும் தொடர்ச்சியாக, ஒரே அமர்வில் ரசிக்க முடிகிறது. இது இசை ரசிகர்களுக்கு…
Read Moreகுழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’. இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இனிகா புரொடக்ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசியதாவது, “இந்தப் படம் எங்களுக்கு பெருமை. ஏனென்றால் சிங்கிள் பேரண்ட்டாக என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். பிற குழந்தைகளின் கல்விக்காகவும் நிறைய விஷயங்கள் செய்து வருகிறேன். இயக்குநர் நாராயணன் குழந்தைகளுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என 20 வித்தியாசமான கதாபாத்திரங்கள் எழுதியிருந்தார். அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்தான் ஸ்ரீனிகா. எந்தவிதமான சிக்கலும் இல்லாத எளிமையான கதை இது. 2 வயதில் இருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்லும்போது என்னென்ன கற்றுக் கொள்ள போகிறார்கள் என்பதுதான் கதை. நிறைய ஜாலியான விஷயங்கள் இதில் உண்டு.…
Read Moreநடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்காக பாடிய பாடல் – 🎵டிரைன் படத்தின் கன்னக்குழிக்காரா !!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது. விஜய் சேதுபதி…
Read Moreஇந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடாக மட்டுமில்லாமல், பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூலைப் பெற்று இந்திய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனது இருப்பை தக்க வைத்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி பல படங்கள் வெளிவந்தாலும் அதை எல்லாம் தாண்டி, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாது, இரண்டாவது வார இறுதிக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக உள்ளது. மேலும், பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை இந்தத் திரைப்படம் அனைத்து வயதினருக்கும் கொடுக்கிறது எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆன…
Read Moreசிறை – திரைப்பட விமர்சனம்
கொலைக் குற்றவாளியாக கருதப்படும் இளைஞன் அப்துல் ரவூப் ஐந்து ஆண்டுகளாக விசாரணை கைதியாகவே இருக்கிறார். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது வழக்கம்போல வாய்தா போட்டு விடுவார்கள். இப்படி 5 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் தொடர் வாய்தாக்கள் அவரை விசாரணைக் கைதியாகவே வைத்திருக்கிறது. இந்த அப்துலுக்கும் கனவுகள் உண்டு. கண்ணான ஒரு காதலி உண்டு. ஒரு இரவில் தன் தாயை தாக்க வந்தவரை அப்துல் ஆவேசமாய் தள்ளிவிட, அவர் தலை கல்லில் நொறுங்கி உயிர் போய் விட… இந்த மோதலில் அப்துல் தாயும் மரணிக்க , இனி அவனுக்கென்று இருப்பது காதல் நிறைந்த உயிர்க் காதலி தான். காதலியின் தந்தை தான் இங்கே கொலை செய்யப்பட்டவர். கொலையாளி இந்த அப்துல் ரவூப். வழக்கம்போல விசாரணை கைதிகளை கோர்ட்டில்…
Read Moreரெட்ட தல – திரைப்பட விமர்சனம்
பாண்டிச்சேரியில் பெற்றோர் இன்றி அனாதையாக வாழும் அருண் விஜய், தன்னைப் போலவே யாருமின்றி அனாதையாக இருக்கும் சித்தி இத்னானியை காதலிக்கிறார். ஆனால், சித்தி இத்னானிக்கோ காதலை விட பணத்தின் மீது அதீத மோகம். காதலியை சந்தோஷப்படுத்துவதற்காக அதிக பணம் சம்பாதிக்கும் முடிவுக்கு வரும் அருண் விஜய்க்கு, பணக்கார அருண் விஜய்யின் நட்பு கிடைக்கிறது. பணக்கார அருண் விஜய்யின் பணத்தின் மீது ஆசைப்படும், சித்தி இத்னானி, பணக்கார இளைஞனின் அதே சாயலை கொண்ட தன் காதலர் அருண் விஜய் மூலம் அவரது பணத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார். அதன் பிறகு நடப்பதெல்லாம் அதிரி புதிரி ஆட்டம். இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண் விஜய், உடை மற்றும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் கணிசமான வேறுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பல இடங்களில் ரிஸ்க் எடுத்து இருக்கும் அருண் விஜய்,…
Read Moreபருத்தி -திரை விமர்சனம்
குழந்தை நட்சத்திரம் திலீப்ஸ் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அவரின் தோழி சுகன்யா மேல் தட்டு வகுப்பை சேர்ந்தவர். பள்ளி மாணவர்களான இவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிப்படிப்பை படிக்கும் போது நண்பர்கள் ஆகிறார்கள். இவர்கள் நட்பு மற்றவர்கள் பார்வையில் சாதி வேற்றுமையை மையப்படுத்தி வெளிப்படுகிறது. இதே ஊரில் உயர்ந்த ஜாதியை சேர்ந்த ஒரு இளைஞன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை காதலிக்க, இளைஞனின் தந்தை அந்தப் பெண்ணை தன் வேலையாட்களுக்கு விருந்தாக்கி அவள் வாழ்க்கையை சீரழிப்பதோடு தன் மகனை இனிப்பில் விஷம் வைத்து சாகடிக்கிறார். காதலன் இறந்த சோகத்தில் காதலியும் உயிரை விடுகிறார். படத்தில் வரும் இந்த ஜோடியின் சோக முடிவே அடுத்து படம் எப்படி போகும் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. துவக்கப்பள்ளியில் படிக்கும் திலிப்ஸ் சுகன்யா நட்பு, உண்மையான நட்பு மட்டுமே என்று இயக்குனர் சொல்லி இருந்தாலும்,…
Read Moreசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் குறித்து அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் பகிர்ந்து கொண்டதாவது, “நான் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். சிவகார்த்திகேயன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர்கள், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகவே கொடுத்து கதையில் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் செய்யாமல் நினைத்தபடியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே படமும் நன்றாக வந்திருக்கிறது. உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை பற்றிய கதையாகவும், அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுநடை, அவர்களின்…
Read More“மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட இயக்குநர் சிலாகிப்பு
SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாஹிதி அவான்சா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் & ஷாஜித் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது, “படத்தின் டைட்டிலைப் பார்த்தபோது ஏதோ சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று நினைத்தால் ட்ரைலரை பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இவர்கள் செய்திருக்கும் செலவு நன்றாகவே தெரிகிறது. அதுவே இந்த படம் ஒரு கமர்சியல் படமாக வரும் என்கிற நம்பிக்கையை…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் ‘சிக்மா’ திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளுடன் கூடிய படமாக உள்ளது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி புதிய உச்சமாக 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த மைல்கல் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன், “’சிக்மா’ படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. பார்வையாளர்களும் ‘சிக்மா’ உலகில் வலுவாக இணைந்திருப்பதை பார்ப்பது…
Read More