இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘சாரி’ திரைப்படத்தின் டிரெய்லர் முத்திரை பதிக்கிறது!

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் வெளியாக இருக்கும் ‘சாரி’ திரைப்படம் அதன் அறிவிப்பு வந்ததில் இருந்தே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் டிரெய்லர் அதன் எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகை ஜானர் எடுப்பதில் வல்லவர். அந்த ஜானரில் அமைந்திருக்கும் இந்தக் கதையில் பல திருப்பங்கள் அமைந்திருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த விருந்தாக அமையும் என்பதையே டிரெய்லர் காட்டுகிறது. இதை இயக்குநர் கிரி கிருஷ்ணா சரியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். ‘சாரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிப்ரவரி 28, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் ஆராத்யா…

Read More

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா!

உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர்,R சரத்குமார், சரண்யாபொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தனுஷின் ஆஸ்தான தொழில்நுட்ப குழுவான G V பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவில், பிரசன்னா G K படத்தொகுப்பில், ஜாக்கி கலை இயக்கத்தில், ‘பாபா’ பாஸ்கர் நடன இயக்கத்தில் பிப்ரவரி-21 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழு படத்தை விளம்பரபடுத்தும் நோக்கில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது. படத்தின்…

Read More

ஃபயர் – திரை விமர்சனம்

நல்லவன் போல் நடித்து பெண்களை வேட்டையாடும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவரின் மறுபக்கமே கதை. ஏமாந்த பெண்களின் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் அந்த பிசியோதெரபிஸ்ட் ஒருநாள் திடீரென காணாமல் போகிறார். மகனை காணவில்லை என்று மருத்துவரின் பெற்றோர் போலீசில் புகார் தர, காமுக வேட்டையில் கைதேர்ந்த அந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் என்னவானார் என்பதை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கதைக்காக ஏ சான்றிதழ் வழங்கி இருந்தாலும் கொண்ட கருத்துக்காக நிஜமாகவே இது ‘ஏ ஒன்’ படமாகவும் ஆகி இருக்கிறது நாகர்கோவிலை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் காசி தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு உதவுவது போல் நடித்து படுக்கையில்வீழ்த்துவதோடு அதை வீடியோவாகவும் எடுத்து கூசாமல் அவர்களிடமிருந்து லட்சங்களை கறக்கிறான். போலீஸ் விசாரணையில் இது தெரிய வரும்போது அவனால் பாதிக்கப்பட்ட யாரேனும் அவன் கதையை முடித்து…

Read More

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

அனைத்து தரப்பும் ரசிக்கும் படியான புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “ உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES). இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கிறார் , இவர் ஏற்கனவே கனா , தும்பா போன்ற படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் . விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் அவர்களும் நடித்திருக்கிறார். இவர்களுடன்…

Read More

டாடா புகழ்  இயக்குநர் கணேஷ் K பாபு  கதையில்,  இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், “டார்க்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

MG STUDIOS & FiveStar தயாரிப்பில், டாடா இயக்குநர் கணேஷ் K பாபு கதையில் உருவாகியுள்ள “டார்க்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் மற்றும் FiveStar நிறுவனம் சார்பில் செந்தில் ஆகியோருடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் திரைக்கதை, இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “டார்க்” திரைப்படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் அமானுஷ்ய விசயங்களும் அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், அதிரடி திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. காமெடி பேய்ப்படங்களுக்கு மத்தியில், மாறுபட்ட களத்தில்,…

Read More

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், “ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. சசி சார் அந்த நிகழ்வில் இருந்தார். நான் மேடையில் ஏறும்போது, சசி சாரைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். அங்க போனதும் நான் டோட்டலா பிளாங்க் ஆயிட்டேன். என்னால் ஒரு வார்த்தை கூடப் பேச முடில. அன்னிக்கு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா, என் ஃபர்ஸ்ட் தமிழ்ப்படத்தைப் பத்திப் பேசாம…

Read More

“கண்ட கனவு பலித்தது” – ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் அறிமுக நாயகன் பரவசம்

நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி ஊடகம் மற்றும் அச்சு செய்தியாளர் சந்திப்பில் படக் குழுவினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து உள்ளனர். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் பவிஷ் நாராயண் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.நாயகியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். ரம்யா ரங்கநாதன், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன், இவர்களுடன் பிரபலமான மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சித்தார்த்தா ஆகியோரும் இருக்கிறார்கள். அதோடு மூத்த நடிகர்களான ஆர். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், பிரியங்கா மோகன் ‘கோல்டன் ஸ்பாரோ’ என்ற பாடலில் சிறப்பு…

Read More

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார் வழங்கும் விக்ரம் பிரபு, எல்.கே. அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம்!

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘லியோ’, விக்ரமின் ’மகான்’, விஜய் சேதுபதி-நயன்தாரா-சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைத் தயாரித்தார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார். இவரது தயாரிப்பில், இந்த வருடம் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ உட்பட சில படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. தற்போது, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை அறிவிப்பதில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் மகிழ்ச்சியடைகிறார். இந்தப் படத்தில் எஸ்.எஸ்.லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமாரும் அறிமுகமாகிறார். திறமை மற்றும் கடின உழைப்பு இருப்பவர்களை நிச்சயம் கோலிவுட் சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கும். அதன்படி எல்.கே. அக்‌ஷய்குமாரின் இந்த அர்ப்பணிப்பு இயக்குநர் சுரேஷைக் கவர்ந்தது. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநரான சுரேஷ் இந்த…

Read More

தண்டேல் – திரை விமர்சனம்

கடலளவு காதல் கொண்ட காதல் ஜோடியில் காதலன் மீன் பிடிக்கப் போய் அந்நிய எல்லையில் மாட்டிக் கொண்டால்… அந்த ஊரின் பாரம்பரிய தொழிலே மீன் பிடித்தல் தான். அதன்படி நாயகனும் தந்தை வழியில் மீன் பிடி தொழிலை தொடர்கிறான். வருஷத்தில் ஒன்பது மாதம் கடல் மூன்று மாதம் வீடு என்றிருக்கும் அவன் வாழ்க்கையின் ஒரே சந்தோஷம் அவனது உயிர்க் காதலி தான். தரையில் இருக்கும் மூன்று மாத காலமும் மீதி ஒன்பது மாதத்துக்கான காதலையும் சேர்த்து கொட்டுகிறார்கள் இந்த காதலர்கள். இதில் சோதனையாக நாயகியின் உறவுக்காரர் மீன் பிடிக்கப் போய் கடும் புயலில் படகு கவிழ்ந்து உயிரை விட…இதனால் பயந்து போகும் காதலி இனி மீன் பிடிக்க போக வேண்டாம் என்று காதலனுக்கு அன்பு கட்டளை இடுகிறாள். அப்போதைக்கு சரி என்று தலையாட்டி விட்டு காதலியிடம் சொல்லாமலே…

Read More

திரைத்துறையில் பணிபுரியும் மகளிருக்கு பி.டி.ஜி அறக்கட்டளையினால் ரெயின்கோட் வழங்கும் விழா!

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘ரெட்ட தல’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக திரு. பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர். மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரடஜியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். திரு. பாபி அவர்கள் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.ஜி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 8 ஆண்டுகளாக திறன்பட நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு கடந்த 8 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் மூலம் திரைத்துறையில் பணிபுரியும் விளிம்புநிலை ஊழியர்களுக்கு பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இன்று 09.02.2025 பி.டி.ஜி அறக்கட்டளை…

Read More