ஏப்ரல் 22-ம் தேதி முதல் சோனி எல்ஐவி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில்

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல் சோனி எல்ஐவி சேனலில் மாஸ்டர் செஃப் பிராந்திய நிகழ்ச்சிகள் ஆரம்பம் உலகளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிராந்திய அளவிலான உணவுகளுக்கான சமையல் உலகை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் சோனி எல்ஐவி அலைவரிசை பெருமை கொள்கிறது.  மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் வியக்க வைக்கும் மாபெரும் வெற்றியை அடித்தளமாக கொண்டு அவைகளின் பிராந்திய அளவிலான இந்நிகழ்ச்சிகள், இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத சுவையான சமையல் திறன் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம். மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவை வெறுமனே சமையல் நிகழ்ச்சிகளல்ல. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களது மற்றும் இப்பிராந்தியங்களது உணவு முறைகளின் சிறப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சுவைகளையும், உணவு வகைகளையும்…

Read More

14 -வது பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம்

  சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்ற விஸ்டாஸின் பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், புகழ்பெற்ற இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ராம்சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து அங்கீகரித்துள்ளது. இந்த நிகழ்வு பல்லாவரம் விஸ்டாஸ் வளாகத்தில் உள்ள வேலன் அரங்கில் நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு தொடங்கிய விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராம் கலந்து கொண்டார். பட்டதாரி மாணவர்களுக்கு, தொடர்ச்சியான கற்றல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தினார். சமூகத்திற்கு பங்களிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பிஎச்டி உட்பட மொத்தம் 4555 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவில்…

Read More

”நடிகர் மோகன் நடிக்க வந்துவிட்டார். இனி அவர் மார்க்கெட் என்னவென்று தெரியும்” – ஹரா இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.

நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு Official Teaser https://www.youtube.com/watch?v=NZNAOnLXlCw 🔥🔥 தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.  இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வில்… தயாரிப்பாளர் S P மோகன் ராஜ் பேசியதாவது… பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இப்படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படம், முதல் படம்…

Read More

”மல்லர் கம்பம்” கற்றிருக்கும் என் மாணவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் – மாஸ்டர் ராகவா லாரன்ஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது. தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வினில் குழு ஒருங்கிணைப்பாளர் ….…

Read More

ஏப்ரல் 18ல் வெளியாகும் தேஜா சஜ்ஜாவின் அடுத்த படத் தலைப்பு

சமீபத்தில் வெளியான ஹனுமன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன் இணையும் புதிய படத்தினை டோலிவுட்டின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி “புரடக்சன் நம்பர் 36”, ஆக பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. தயாரிப்பாளர் டிஜி விஸ்வ பிரசாத் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு போஸ்டரில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா முகத்தில் தீவிரமான முக பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார். அவரது முந்தைய படத்தில் பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய ஸ்டைலான தோற்றத்திற்கு மாறி சூப்பர் யோதாவாக அசத்துகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஈகிள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் கட்டம்நேனி மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் இரண்டாவது திரைப்படம்…

Read More

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளைப் பேசும் “உப்பு புளி காரம்”

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கைப் மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்கி வருகிறது. தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. “உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில், நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நவீன தலைமுறையின் காதல் மற்றும்…

Read More

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி , தினேஷ், மாறன் நடிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் சமீபத்தில் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் வயது முதிர்ந்தவர்களின் உளவியல் சிக்கலையும் பேசியிருக்கும் ஜெ பேபி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் அரசியல் கட்டாயமாக இருக்கும். ஜெ பேபி படம் வழக்கமாக பேசும் எந்த அரசியலையும் பேசாமல் குடும்ப உறவுகளின் உன்னதத்தை பேசும் விதமாக அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய கருத்தை உள்ளடக்கியதாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Read More

சிறந்த நடிப்பிற்காக தங்கச்சங்கிலி பரிசு பெற்ற பாரதிராஜா

தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாரத்திலும் குழந்தைகளுடன் குடும்பமாகப் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ‘இயக்குநர் இமயம்’, நடிகர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தங்கச்சங்கிலி வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தருணத்தில் கதாநாயகன் ஜிவி பிரகாஷ், மேனேஜர் ஸ்ரீதர், இயக்குநர் ஷங்கர், எடிட்டர் லோகேஷ், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் பூர்னேஷ் ஆகியோர் உடனிருந்து கெளரவித்தனர். இயக்குநராகத்…

Read More

பரபரப்பைக் கிளப்பும் துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” பட டீஸர்

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ பட டீசர் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்துள்ளது! துல்கர் சல்மான் பல்வேறு மொழிகளில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம், தான் பல மொழி நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார். ’மகாநடி’ மற்றும் ’சீதா ராமம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தனி அன்பைப் பெற்றுள்ளார். அவர் வரவிருக்கும் தனது பல மொழி திரைப்படமான ’லக்கி பாஸ்கர்’ படத்திற்காக புகழ்பெற்ற இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்துள்ளார். ’லக்கி பாஸ்கர்’ படத்தில், துல்கர் ஒரு எளிய பேங்க் கேஷியராக நடித்துள்ளார். இதுவரை பார்த்திராத தோற்றத்தில் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடிகிறது. ‘லக்கி பாஸ்கர்’ படக்குழு ஈத் பண்டிகையை கொண்டாடும் வகையில் படத்தின் டீசரை ஏப்ரல் 11, இன்று வெளியிட்டனர். அதிர்ஷ்டத்தையும் பணத்தையும்…

Read More

ராம் சரணுக்கு ஐசரிகணேஷ் வழங்கும் கெளரவ டாக்டர் பட்டம்

தென்னிந்திய நடிகர் திரு. ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம். திரு ராம் சரண் அவர்கள் மெகா ஸ்டார் என மக்களால் கொண்டாடப்படும் நடிகர் திரு சிரஞ்சீவி திருமதி. சுரேகா சிரஞ்சீவி அவர்களுக்கு மகனாக 1985 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார். புகழின் வெளிச்சம் தன் மகன் மீது படாமல் இருக்க ராம் சரணை சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் படிக்க வைத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் சேர்ந்தார் ராம் சரண். கல்லூரி நாட்கள் தொட்டே திரைத்துறை மீது பேரார்வம் கொண்டிருந்தார். தன்னை தேர்ந்த நடிகராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் குதிரையேற்றம், நடனம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். திரு. ராம்சரண் அவர்கள் 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற…

Read More