பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின். உலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பெற்று வரும் பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ஆரி அர்ஜுனன் ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதிப் கதாநாயகியாகவும் நடிக்கும் இன்வெஸ்ட்டிகேசன் க்ரைம், கமர்சியல் த்ரில்லராக புதிய படம் உருவாகி , சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரைவில் வருகின்றது. பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து வந்த ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி முதன்முறையாக தமிழில் திரைப்படம் ஒன்றை…
Read Moreமாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து
மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து. மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து சிபிராஜுக்கு ‘கபடதாரி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் – பிரபலங்கள் நம்பிக்கை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில்…
Read Moreவெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதாவது
* வெட்டி பசங்க * படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது. ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட் ‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது முரளி ராமசாமி பேசும்போது, தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். ‘போஸ்‘ வெங்கட் பேசும்போது, ‘வெட்டி பசங்க‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். விருதுகள் பெற்று, சிறந்த விமர்சனங்களைப்…
Read Moreபுதிதாய் மலர்ந்திருக்கும் ” GREEN CINEMAS “
புதிதாய் மலர்ந்திருக்கும் GREEN CINEMAS. தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா அவர்களின் Studio Green Films நிறுவனம் பல்லாண்டுகளாக மதிப்புமிகு படைப்புகளை, தரமான படங்களை தயாரித்து, வழங்கி, மற்றும் விநியோகித்தும் வருகிறது. தென்னிந்திய திரையுலகில் மதிப்புமிக்க தயாரிப்பாளர்களுள் ஒருவராக வலம்வரும் K.E. ஞானவேல் ராஜா 2021 ஆண்டிலும் பல ஆச்சர்யகராமான படைப்புகளை தயாரித்து வரிசையாக வெளியிட காத்திருக்கிறார். தயாரிப்பு உலகில் பெரும் வெற்றியை கண்டிருக்கும் அவர் தற்போது புதியதொரு பயணத்தை தொடங்கியிருக்கிறார். Green Cinemas எனும் பெயரில் தொடர் தியேட்டர் குழுமமாக விரைவில் பரிமளிக்க போகும் வகையில் பாடி ராதா (சென்னை) யில் முதல் திரையரங்கை துவங்கியுள்ளார். Green Cinemas சார்பில் K.E. ஞானவேல் ராஜா கூறியதாவது… சாய் நல்லாசியோடு GREEN CINEMAS குழுமம் சார்பில் எங்களின் முதல் திரையரங்கை பாடியில் (அண்ணா நகர் அருகில்) GREEN…
Read Moreதென் மாவட்ட உண்மைச் சம்பவங்களின் பின்னணியுடன் ‘சிவப்பு மனிதர்கள்’!
தென் மாவட்ட உண்மைச் சம்பவங்களின் பின்னணியுடன் ‘சிவப்பு மனிதர்கள்’ தென் மாவட்ட மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லி அதில் வீரம், கோபம் , குடும்ப உறவு,நட்பு, காதல் என அனைத்தும் கலந்து சமூக அக்கறையோடு கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக உள்ளாட்சி தேர்தலும் அதில் தலைதூக்கும் சாதி அரசியலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரங்கேறும் சம்பவங்களும் ரத்தமும் சதையுமாக கலந்து சமத்துவம், தனித்துவம் மனித நேயம் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது. பி.டி.கே பிலிம்ஸ் சார்பில் பி.டி.அரசக்குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மீனாட்சி சர்கார் கதையின் நாயகன் நாயகியாக நடிக்க மற்றொரு புதுமுக நாயகி சத்யா, அனுகிருஷ்ணா, குட்டிப்புலி, கொம்பன் புகழ் ராஜசிம்மன், வேன்மைக்கேல் டேவிட் (அறிமுகம்), கஞ்சா கருப்பு, பெஞ்சமின், ஆதேஷ் பாலா, பிரேம்சங்கர், வேல்முருகன், சின்ராசு, கருத்தம்மா ராஜஸ்ரீ, சோனா, ரேஷ்மி, லேகா…
Read Moreதமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தை
தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தை. தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தைவசப்படுத்தும் சுவர் ஓவியங்கள் மற்றும் விளம்பர தட்டிகள் மூலம் தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தையை அமேசான் பிரைம் வீடியோ பரப்புகிறது* ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மாறாவை பிரமோத் பிலிம்ஸ் பேனரில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரிக்க, திலீப் குமார் இயக்கியுள்ளார். ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய தமிழ் வெளியீடான மாறா, வெளியான சில மணி நேரங்களிலேயே உலகெங்கிலும் உள்ள விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடமிருந்து மிகவும் உற்சாகமூட்டும் விமர்சனங்களைப் பெற்றது. ஓவியங்கள், அழகிய இடங்கள் மற்றும் வசீகரிக்கும் கதைகள் நிறைந்த ஒரு மாயாஜால உலகிற்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்று, எல்லோரும் விரும்பும் நன்னம்பிக்கை மற்றும் நலனைப் பேணும் திரைப்படமாக…
Read Moreஅண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்
அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள் இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், அட்டக்கத்தி தினேஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றப் படம் அண்ணனுக்கு ஜே. இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார், ஒரு தாய் மக்கள் என்ற ஆவணப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலை மையப் படுத்தி, தமிழர்களின் வாழ்வியலையும், வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகளையும் பல்வேறு கோணங்களில் அணுகுகிறது இந்த ஆவணப்படம். தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடைப்பெறும் இடங்களில் எல்லாம் படக்குழுவினர் களமிறங்கி, மாடு பிடி வீரர்களுடன் பல மாதங்கள் பயணம் செய்து, இதுவரை காணாத காட்சிகளை, எட்டுக்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு பதிவு செய்து இருக்கின்றனர். மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் வாழ்வியல், மாடு பிடிப்பதில் இருக்கும்…
Read Moreநம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்…
நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். நம் இந்திய நாடு, விவசாயப்பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது… சுதந்திரத்துக்குப்பின், நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால், மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள், பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன், உரம், பூச்சிக்கொல்லி, வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் செல்வங்களை கொள்ளையடித்ததோடு, நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்.. அதன் காரணமாக, இன்று நம் விவசாயப்பெருமக்கள், வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு, தற்கொலையும் பண்ணிக்கொள்கிறார்கள்… விவசாயத்தொழிலை ஆதாரமாக வைத்து இயங்கிய சிறு, குறு வணிகப்பெருமக்களும் வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர். இது போக, விவசாயம் பொய்த்துப்போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும், கனிம வளங்களை, அரசியல்வாதிகளின் துணையோடு கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் முயன்று கொண்டிருக்கின்றனர்……
Read More‘பூமி’ சினிமா விமர்சனம்
‘பூமி’ சினிமா விமர்சனம். சமூக அக்கறை சுமந்த படங்களின் வரிசையில் புதுவரவாய் ‘பூமி.’ ஜெயம் ரவியின் 25-வது படம்! ஜெயம் ரவி 16 வயதிலேயே சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் லெப்ட், ரைட் வாங்குகிறார். அதன் காரணமாக நாசாவில் வேலை கிடைக்கிறது. ‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிற விஞ்ஞானிகளில் ஒருவராக செயல்படுகிறார். இடையில் விடுமுறை கிடைத்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். சுயலாபத்துக்காக இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கரங்கள், தன் கிராமத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கொதிக்கிறார். கிராமத்தைக் காப்பாற்ற, கார்ப்பரேட் கம்பெனிக்கெதிராய் களமிறங்குகிறார். விரிகின்றன வழக்கமான ஹீரோயிஸக் காட்சிகள்… இயக்கம்: லெஷ்மணன் ஜெயம் ரவியின் நடிப்பு துடிப்பு. டயலாக் டெலிவரி தீ! ஹீரோயின் நிதி அகர்வால் அழகாக இருக்கிறார். கவர்ச்சியாக வருகிறார், போகிறார். டூயட் பாட்டில் மேடம் செம ஹாட்!…
Read Moreஅப்பா, மகள், இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…
அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…. 1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் குழந்தையின் அப்பா அமைச்சர் ஜெயக்குமார் என்பது. நாட்கள் செல்ல செல்ல குழந்தை மாணவனாகி,பள்ளிப்படிப்பை முடித்து,மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார். 22வது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன். படித்து முடித்த போது வயது 24 அவருக்கு……
Read More