நேர்கொண்ட பார்வை வக்கில் சாப் ஆக தெலுங்கில் ரீமேக்கானது

ஒரு மொழியில் பெரிய வெற்றியைப் பெரும் படங்கள் மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அப்படி, இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான திரைப்படம் பிங்க். பாலிவுட்டில் மிகப்பெரியளவில் கவனம் ஈர்த்தது. மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இந்தக் கதையை தமிழுக்கு எடுத்துவந்தார். சர்ப்ரைஸ் விஷயம் என்னவென்றால், ஒரு ரீமேக் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, அஜித், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் நேர்கொண்டப் பார்வை திரைப்படம் உருவானது. வயதான லுக்கில் அஜித் நடித்திருந்தார். பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா மிரட்டியிருப்பார். படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். தமிழுலும் பெரிய வெற்றியைப் பெற்றது. பிங்க் படத்துக்கும் நேர்கொண்டப் பார்வைப் படத்துக்கும் இடையே திரைக்கதையில் சில வித்தியாசங்கள் இருந்தது. தமிழின் உச்ச நடிகர் அஜித் என்பதால், அவருக்கென ஒரு காதல்…

Read More

வலிமை படத்தில் சில மாற்றங்கள்

அஜித் ரசிகர்கள் மத்தியில் வலிமை படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திலிருந்து ஒரு ஸ்டில்லாவது வெளியாகிவிடாதா என தவியாய் தவித்து வருகிறார்கள். சமீபத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அஜித் 50வது பிறந்த தினமான மே 1ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். அதன்பிறகு, படம் குறித்த அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலுக்கு பிறகே, அஜித் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். படத்துக்கான 90சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும், ஸ்பெயின் நாட்டில் எடுக்க வேண்டிய ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டால் மொத்தப் படமும் முடிந்துவிடும். இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான ஃபைனல் எடிட்டையும் முடித்துவிட்டார்கள் படக்குழுவினர். சமீபத்தில், டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு செய்யப்படாத முழு படத்தையும் படக்குழுவினர்கள் பார்த்திருக்கிறார்கள். அதோடு, நெருங்கிய வட்டாரத்தினர் சிலரும் படத்தைப்…

Read More

தேசிய விருதை எதிர்நோக்கும் நடிகை அபர்ணதி

தமிழ் சினிமாவில் விமர்சகர்களால் பாரபட்சம் இன்றி பாராட்டப்படும் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருகின்றன. அந்த விதத்தில் இந்த மாதம் வெளிவந்த ஒரு படம் ‘தேன்’. மலைக்கிராம மக்களின் வாழ்வியலைத் திரைக்கதையாகக் கொண்டு வெளிவந்த இந்தப் படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் அபர்ணதி நடித்திருந்தார். அவருடைய நடிப்பிற்கு விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அப்படம் பற்றிய தனது அனுபவத்தை பத்திரிகையாளர்களிடம் அபர்ணதி பகிர்ந்து கொண்டார். ’ “தேன்” படத்திற்குக் கிடைத்து வரும் நேர்மறையான பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் அவர்களையே சேரும். இந்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய முழுக்காரணமும் அவர்கள் தான்.  மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் பொருட்டு, படப்பிடிப்பு முடியும் வரை ஷாம்பு, மேக்கப் என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று…

Read More

எல்லாமே பாசிட்டிவா இருக்கு டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்தார் டி.எஸ்.கே.  தற்போது ஜி.வி.பிரகாஷ்-சரத்குமார் காம்பினேஷனில் அடங்காதே, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவாவுடன் ஒரு படம், ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராஜசரவணன் என்பவர் இயக்கும் படம் என அரை டஜன் படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இந்தநிலையில் எதிர்பாராத சர்ப்ரைஸாக நடிகர் தனுஷிடம் இருந்து டிஎஸ்கேவுக்கு அழைப்பு வந்தது. இன்னும் அதுகுறித்த பிரமிப்பு மாறாத நிலையில் இதுபற்றி டி.எஸ்.கே. கூறும்போது, “சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தில் ஜீவாவுடன் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒருநாள் *அண்ணன்* ரோபோ சங்கரிடம் இருந்து போன் வந்தது. அப்போது அருகில் தனுஷ்…

Read More

கோவை தெற்கில் கமல் போடும் கணக்கு – வெற்றி எளிதாகுமா?

பரம்பரை அடையாளம் தந்த பரமக்குடி, ஆளாக்கிய ஆழ்வார்பேட்டை என தமிழகம் முழுவதும் உள்ள 233 தொகுதிகளை விட்டு விட்டு, ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’ என்பதைப் போல கோவை தெற்கிலே தேர்தல் களம் கண்டார் கமல். அவர் கோவையில் போட்டி போடுவதாகக் கூறியதும், அங்கே எதற்குப் போட்டியிடுகிறார் என்று கேள்விகளை அடுக்கினார்கள் பத்திரிக்கையாளர்கள். அவர்களிடம் ‘ஏன் போட்டியிடக் கூடாது’ என்று எதிர்க்கேள்வி கேட்டு வழக்கம்போல குறுக்கு சால் ஓட்டினார் கமல் அப்போது அந்தக் கேள்விக்கு சரியான விடை கிடைக்காவிடினும், அவர் களத்தில் இறங்கி வீதி வீதியாகவும் வலம் வந்தபோதுதான் அதற்கு தானாகவே விடை கிடைத்தது. எங்கே போனாலும் மக்கள் திரள்கிறார்கள்; செல்பி எடுக்கிறார்கள்; அவரிடமே உங்களுக்குத்தான் ஓட்டு என்று உறுதி கொடுத்து விட்டு நகர்கிறார்கள். நீங்க மட்டும் போட்டா போதாது; நீங்க ஒவ்வொருத்தரும் 10 பேர்ட்ட ஓட்டு வாங்கித்தரணும்…

Read More

நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் ஆர்யா

அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகி மனுதாரரிடம் மன்னிப்பு கோரியதால் ‘அவன் இவன்’ பட வழக்கில் அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாகக் காட்சியில் நடித்ததாகக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் தொடர்ந்த வழக்கில் நடிகர் ஆர்யா மனுதாரரிடம் மன்னிப்பு கேட்டார். அந்தக்காட்சியில் நடித்ததற்காக நேரடியாக வருத்தம் தெரிவித்ததையடுத்து ஆர்யா மீதான வழக்கை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முடித்து வைத்து வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார். நடிகர் ஆர்யா 2011ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்தஅவன் இவன் படம் வெளியானது. அந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்திரித்து காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிங்கம்பட்டி…

Read More

சினிமா-அரசியல் என் இரு கண்கள் போன்றது – நடிகர் சுரேஷ்கோபி

அரசியலையும் , சினிமாவையும் கைவிட மாட்டேன் என நடிகரும் திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். கேரளாவில் வருகிற 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மலையாள நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு உள்ளது. அதற்குள் கட்சி மேலிடம் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுமாறு அவரை கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவரும் திருச்சூர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இவர் போட்டியிட்டார். அதில் திருச்சூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை வாங்கி இருந்தார். எனவே இந்த தேர்தலில் அவர் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…

Read More

ஆ.ராஜாவுக்கு கமல்ஹாசன் ஆதரவா?

முதல்வர் குறித்து ஆ.ராசா பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான தகவலுக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் விளக்கமளித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. ‘நான் பேசியது எல்லாம் அரசியலில் இருவருக்கும் இடையே உள்ள உயரம், ஒப்பீடு. ஒரு குழந்தை ஆரோக்கியமான குழந்தை, இன்னொரு குழந்தை ஆரோக்கியமற்ற குழந்தை என்று பேசினேனே தவிர, இரண்டு வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு, முதலமைச்சரின் பிறப்பைக் கொச்சைப்படுத்திப் பேசினேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது’ என்று ஆ.ராசா விளக்கமளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண…

Read More

எடப்பாடி பழனிச்சாமி-பன்னீர்செல்வம் ஒற்றுமையால் உற்சாகமான அதிமுக

அடுத்த மாதம் ஆட்சி கவிழும் என்று சொன்னதைப் போலத்தான், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததும் பழைய பன்னீர்செல்வமாக ஓபிஎஸ் உருவெடுப்பார்; அடுத்த தர்மயுத்தம் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பமாகும் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிறின. எதுவும் நடக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தையும், அதனால் கிடைக்கும் பலனையும் ஒரு நாள்கூட விடாமல் அனுபவிக்க நினைத்துத்தான் ஓபிஎஸ் அமைதியாக இருக்கிறார்; ஆட்சிக்காலம் முடிந்ததும் அவருடைய ஆட்டம் ஆரம்பமாகும் என்றார்கள். அதுவும் ஆகவில்லை. இறுதியாக வேட்பாளர் பட்டியலில் இருவருக்கும் இடையில் பெரிய போர் வெடிக்கும்; பன்னீர் கண்ணீரோடு வெளியே வந்து பேட்டி கொடுப்பார் என்று காத்திருந்தார்கள். கடைசி வரை எதிர்க்கட்சியினரோ, அரசியல் விமர்சகர்களோ கணித்தபடி எதையும் நடக்கவிடவில்லை இரட்டையர். இருப்பினும் இருவரிடையே ஏதோ ஓர் இறுக்கம் இருந்து கொண்டிருந்தது. முதல்வர் வேட்பாளர் என்று பொதுக்குழுவில் அறிவித்ததற்குப்பின், வேறு எங்குமே பன்னீர் செல்வம் அந்த…

Read More

ஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் – திமுக புகார்

தேர்தல் ரத்து என்று செய்தி வெளியான விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்றும் கே.என்.நேருவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும் திமுக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் நேற்று (மார்ச் 29) அளித்த புகாரில், “முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை ஜீரணிக்க முடியாத ஆளும்கட்சியினர் மற்றும் அதிகாரிகள், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பணம் கொடுத்து திமுக மற்றும் கட்சித் தலைவர்கள் மீது கெட்ட பெயர்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கே.என்.நேருவின் பெயரைக் களங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர். கடந்த மார்ச் 27ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் ‘கரூர், திருவண்ணாமலை, திருச்சி…

Read More