இருசக்கர வாகன பேரணிகளுக்கு தடை

தமிழகத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தேர்தல் பரப்புரையில் இருசக்கர வாகனத்தில் பேரணி செல்ல தடை விதித்துள்ளது தமிழக தேர்தல் ஆணையம். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. சில இடங்களில் பைக்கில் பேரணியாக சென்றும், மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தும் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்தல் பரப்புரையில் பைக் பேரணி என்ற பெயரில் மக்களை அச்சுறுத்துவதாக புகார் வந்துள்ளது. அதனால், பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இருசக்கர வாகன பேரணிக்கு…

Read More

கொளத்தூர் மாடல் தொகுதியாக மாற்றப்படும் – மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (மார்ச் 27) கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இந்தத் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றுவேன் என்று கூறியுள்ளார். ஸ்டாலின் பேசுகையில், “சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்தக் கொளத்தூர் தொகுதியில் வழக்கம்போல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். இது கொளத்தூர் தொகுதி என்று சொல்வதைவிட நம்முடைய தொகுதி என்றே சொல்வேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால், கொளத்தூர் தொகுதிக்குக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறேன்.  இருந்தாலும், நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். அதனால்தான் முதலில் சொன்னேன்,  இது நம்முடைய தொகுதி என்று. “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும்” என்று பழமொழி உண்டு. அதேபோல மற்ற தொகுதிகளுக்குச் சென்று வருவதால், இந்தத் தொகுதியில் எனக்கு மேலும் ஆதரவு அதிகமாகத்தான் இருக்கும். ‘நம்முடைய எம்.எல்.ஏ. – நம் வீட்டுப் பிள்ளை –…

Read More

முதியோர் தபால் வாக்குகள் அதிமுக- திமுக யாருக்கு சாதகம்

தபால் வாக்குகளால் வெற்றி எதிர் திசைக்குத் திரும்பிய வரலாறு தமிழகத்தில் நிறைய நடந்திருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை தேசத்தில் நிலை நிறுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பது நமக்குத் தெரிவதை விட, அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். 2006 சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செளந்தரராஜன் வாங்கிய வாக்குகள் ஒரு லட்சத்து 269. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னசாமி வாங்கியது ஒரு லட்சத்து 283 வாக்குகள். அதாவது 14 வாக்குகள்தான் வித்தியாசம். அப்போதிருந்த தேர்தல் அதிகாரி, செளந்தரராஜனுக்கு விழுந்த தபால் வாக்குகளை அதிமுகவுக்கு மாற்றிவிட்டதாக வாக்கு எண்ணும் மையத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடினர். எந்த பயனும் ஏற்படவில்லை. ராதாபுரம் அப்பாவு வழக்கு ஊரறிந்த சேதி. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவுவை…

Read More

மக்களை குழப்பும்- முதல்வர் பழனிச்சாமி-ஸ்டாலின் குற்றசாட்டு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 27) கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். நாகர்கோவில் செட்டிக்குளத்தில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், “நடக்க இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, குளச்சல் குமரி பா.ரமேஷ், கன்னியாகுமரி வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் ஜான் தங்கம், விளவங்கோடு பாஜக வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். பொன்.ராதாகிருஷ்ணன் திறமையானவர். இந்த மாவட்டம் எழுச்சி பெற, ஏற்றம் பெற மத்திய அரசிடம் பேசி பல திட்டங்கள் பெற்றுத் தந்திருக்கிறார். மாவட்டம் வளர்ச்சிபெற அவருக்கு வாக்களியுங்கள். கடந்த தேர்தல்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது. இங்கு நம் கூட்டணி…

Read More

மேற்குவங்கத்தில் ஆடியோ கிளப்பிய பரபரப்பு

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மேற்கு வங்கத்தில் நேற்று (மார்ச் 27) வெளியான இரண்டு ஆடியோ துணுக்குகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன. ஒன்று, மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியை உள்ளடக்கிய கிழக்கு மித்னாபூர் மாவட்ட பாஜக துணைத்தலைவருடன், ஒரு பெண் தொலைபேசியில் பேசுவதாகக் கூறப்படும் ஒலிப்பதிவு. மற்றொன்று, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் தாவிய ஒரு தலைவரும் இந்த மாதம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் ஒலிப்பதிவு. முதல் ஒலிப்பதிவில் பேசும் குரல், மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவினுடையதுதான் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. அந்த பாஜக பிரமுகரின் பெயர், பிரலாய் பால். முன்னர் திரிணமூல் கட்சியில் செயல்பட்ட அவர், பிறகு சுவேந்து அதிகாரியுடன் சேர்ந்து பாஜகவில் சேர்ந்துவிட்டார். அவரிடம், ”மீண்டும் திரிணமூல் கட்சிக்கு வந்துவிடுங்கள்; நந்திகிராம் தொகுதியில்…

Read More

இந்தியில் பேசி வாக்கு சேகரிக்கும் வட மாநில பாஜக தலைவர்கள்

காங்கிரஸ் கட்சியோ, பாஜகவோ, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வேற்று மாநிலங்களைச் சேர்ந்த அகில தலைவர்களைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கமானதுதான்; ஆனால், இந்த முறைதான் அதிக அளவில் வேற்று மாநிலங்களின் மாநிலத் தலைவர்களைச் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைக் கவரக் களம் இறக்கியுள்ளது பாஜக . மேற்குவங்கத்தில் இந்தி பேசும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றுகின்றனர். ஏற்கெனவே அங்கு வங்காள மண்ணைச் சேர்ந்தவர்கள், அந்நிய சக்திகள் என மம்தா பிரச்சாரத்தை ஒரு பக்கம் திருப்பி விட்டுக்கொண்டிருக்கிறார். அதைக் கண்டும் காணாததுமாக தங்கள் பக்கத்தை வலுப்படுத்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், முன்னாள் முதலமைச்சரும் இப்போதைய மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் ஆகியோரை அடிக்கடி மேற்குவங்கத்தில் பெரும் பொதுக்கூட்டங்களில் பேசவைத்தது. அவர்களும் சில நாள்கள் ஒன்று சேர்ந்தாற்போல முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதைப்போலவே, தமிழகத்திலும் பாஜகவின் அகில இந்தியத் தலைவர் நட்டா,…

Read More

கோவையில் நடனமாடி வாக்கு கேட்ட நமீதா

கோவையில் இளைஞர்களுடன் நடனமாடி, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஓட்டுக்கேட்டு நேற்று (மார்ச் 26) நடிகை நமிதா பிரச்சாரம் செய்தார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற புது புது யுத்திகளுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் வானதி சீனிவாசன். நேற்று அவருக்கு ஆதரவாக நடிகை நமிதா தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தாமரைக்கு வாக்கு சேகரித்தார். கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நமிதாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது , “கோவையில் பிறந்து வளர்ந்தவர் வேட்பாளர் வானதி சீனிவாசன். உங்களுக்காக சேவை செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களில் இந்த தொகுதியைச் சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் மோடியின்…

Read More

சிம்மசொப்பனம்செந்தில்பாலாஜி மீது குற்றப்பத்திரிகை

கரூரில் நேற்று (மார்ச் 26) திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்டக் கூட்டத்தின் இடையே பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “செந்தில்பாலாஜி ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்”என்று பேசியிருந்ந்தார். அன்றே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக கரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை நேற்று (மார்ச் 27) பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப் பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகையில் அப்போதைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மத்திய குற்றப் பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2011- 2015 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெற்றுத் தருவதில் அதிகாரிகளுடன் இணைந்து…

Read More

அதிமுக வேட்பாளர் வாக்குறுதி நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதாகக் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் அதிமுக வேட்பாளருக்கு எதிரான புகாரை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜெயராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் என்.பி.நட்ராஜ் போட்டியிடுகிறார். அவர், தனக்கு வாக்கு அளித்தால், தனது உறவினர்களுக்குச் சொந்தமான மூன்று மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சிகிச்சை வழங்குவதாகக் கூறி, வாக்குச் சேகரித்துவருகிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று(மார்ச் 26) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு…

Read More

ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் – எடப்பாடி ஆவேசம்

சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 26) பிரச்சாரம் மேற்கொண்டார். முதல்வர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடத்தில் எல்லாம் பொய்யாகப் பேசி வருகிறார். திமுக ஆட்சியில் எதாவது திட்டங்கள் செய்திருந்தால் தானே, அதைப் பெற்றி பேசுவார். பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். எடப்பாடி பழனிசாமி போலி விவசாயி என்கிறார். நானும் மண்வெட்டி பிடிக்கிறேன், அவரும் மண்வெட்டி பிடிக்கட்டும். களத்தில் தெரியும் யார் விவசாயி என்று. எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும். மக்கள் தான் இறுதித் தீர்ப்பு கொடுக்கப் போகிறார்கள்” என்று பேசினார். தொடர்ந்து அவர், “திமுகவை வீழ்த்த என் தொண்டை போனாலும், உயிரே போனாலும் பரவாயில்லை. உயிரை கொடுத்தாவது…

Read More