வருணன் – திரை விமர்சனம்

  சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு முதலாளிகள் ராதாரவி, சரண்ராஜ். இருவருமே தொழிலில் நேர்மையை கடைப்பிடிப்பவர்கள். ஆனால் இவர்களின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தான் இங்கே பிரச்சனை ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். ஒருவர் ரெகுலராக தண்ணீர் கேன் போடும் வீடுகளில் இன்னொருவர் தண்ணீர் கேன் போட்டால் பிரச்சனை வராமல் இருக்குமா? அடி தடியில் ஒருவரை மற்றவர் காலி பண்ணும் அளவுக்கு போகிறார்கள். இதற்கிடையே குழம்பிய குட்டையில் மீன் பிடித்த கதையாக காவல்துறை அதிகாரி ஜீவா ரவி புகுந்து ஒரு தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார். இதுவே இரு தரப்பினருக்குமான பெரும் பகையாக உருவெடுக்கும் நேரத்தில் இன்னொரு நிறுவனத்தின் முதலாளியான ராதாரவி அதை சரி செய்கிறார். இதை ஏற்றுக் கொள்ள முடியாத சரண்ராஜின் ஆட்கள் ராதாரவியின் ஊழியர்களை கொல்ல திட்டமிடுகிறார்கள்.…

Read More

’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார்!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் ’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார். சிலருக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு, பலருக்கு அது ஒரு ஆர்வம். ஆனால், அர்ஜுனுக்கு அது வாழ்க்கை! திறமையான நடிகரான சித்தார்த் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கிரிக்கெட் வீரர் கதாபாத்திரம் லட்சியம், தியாகம் மற்றும் இடைவிடாத முயற்சி ஆகியவற்றைக் கொண்டது. அர்ஜூன் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும்போது கிரிக்கெட் பேட்டை மட்டும் எடுத்து செல்லவில்லை. ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளையும் தனது சொந்த குடும்பத்தின் நம்பிக்கைகளையும் சுமந்து செல்கிறார். சர்வதேச சுழற்பந்து வீச்சாளரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான ஆர். அஸ்வின், அர்ஜுனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார். அர்ஜுனுக்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி அது அவனது…

Read More

ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்!

ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் . இவர் 9 வயது முதலே  கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில்  சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு  வாசித்தார் . 2012 ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார் .இதை தொடர்ந்து இவர் இசையமைத்த  மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும் ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது  .…

Read More

பெருசு – திரை விமர்சனம்

கிராமங்களில் பெரியவர்களை பெருசு என்றும் அழைப்பதுண்டு அப்படி அழைக்கப்படும் ஒரு பெரியவர் ஒருநாள் காலைப் பொழுதில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உயிர் போய்விடுகிறது. அவரது மகன்கள் சுனில், வைபவ். தந்தையின் எதிர்பாராத மரணத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் அடுத்து ஆக வேண்டிய காரியங்களைபார்க்க முடிவு செய்கிறார்கள். அப்போது தான் மரணம் அடைந்த பெரியவரின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அது வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத அதிர்ச்சி. இதனால், அவரது உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் மரண சம்பவம் தெரிந்து பெரியவரின் தம்பி முனீஷ்காந்த் பதறி அடித்து ஓடி வருகிறார். ஒரு சண்டையில் இரண்டு குடும்பத்துக்கும் ஆகாமல் பேச்சுவார்த்தை நின்று போய் வருடக் கணக்கான நிலையில் இப்போது அண்ணன் மரணச் செய்தி கேட்ட மாத்திரத்தில் பகை மறந்து ஓடோடி வந்திருக்கிறார். வந்ததிலிருந்து…

Read More

இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகையும் பாடகியுமான லாவண்யா 32 துறைகளில் தடம் பதிந்து சாதனை திரைப்படம் பேய் கொட்டு!

இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகையும் பாடகியுமான லாவண்யா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘பேய் கொட்டு’ (Pei Kottu). இப்படத்தில் வெளியீட்டு தேதி இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பேரரசு ,ஸ்டண்ட் மாஸ்டர்.ஜாக்குவார் தங்கம், நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ் லாவண்யா இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் கொட்டு எனும் திரைப்படத்தில் எஸ். லாவண்யா, தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் இயக்குநர் எஸ். லாவண்யா சுயமாக கற்றுக்கொண்டு கையாண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த பெண் படைப்பாளி புதிய சாதனையை படைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி…

Read More

ஸ்வீட் ஹார்ட் – திரை விமர்சனம்

சிறு வயதில்தன் தாய் மூலம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் நாயகன் ரியோ ராஜ். குறிப்பாக திருமண வாழ்க்கை மீது அப்படி ஒரு கசப்பு. ஒரு சூழலில் அவருக்கும் காதல் வருகிறது ஆனால், அவரது காதலி கோபிகா ரமேஷுக்கு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை.இதற்கிடையே நெருக்கமான நேசத்தில் காதலி கர்ப்பம் ஆகிறார். காதலனோ கருவை கலைக்க கட்டாயப்படுத்துகிறார். ஆனால் கோபிகாவுக்கோ குழந்தை பெற்றுக் கொண்டு ரியோ ராஜுடன் சேர்ந்து வாழ விருப்பம். இதனால் இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் முட்டிக் கொள்கிறது. இந்த மோதலில் காதலியின் விருப்பம் நிறைவேறியதா? காதலன் பிடிவாதம் வென்றதா? என்பதை சூடு குறையாத சுவை விருந்தாக பரிமாறி இருக்கிறார்கள். நாயகனாக ரியோ ராஜ். தனக்கான வாழ்க்கை காதலுடன் நெருங்கி வரும் போது…

Read More

ராபர் – திரை விமர்சனம்

வழிப்பறி கொள்ளையர்களால் பறி போகும் உயிர்களுக்கு ரத்தமும் சதையுமாய் நீதி சொல்லும் படம். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்தன. இதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அதையே தொழிலாக கொண்டவர்கள் இல்லை என்பதுதான் அப்போது கிடைத்த அதிர்ச்சி செய்தி. வழிப்பறி திருடர்கள் மக்களோடு மக்களாக இருந்ததால் அவர்களை கண்டுபிடிக்க போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இந்தக் கதையிலும் அப்படி ஒரு திருடன் தான் நாயகன். கிராமத்திலிருந்து சென்னை வரும் சத்யா, இங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். மற்றவர்களைப் போல் பெண்களிடம் தாமும் பழக வேண்டுமானால் வேலையில் சம்பாதிக்கிற பணம் மட்டும் போதாது என்ற முடிவுக்கு வரும் அவர், பணிக்கிடையே பார்ட் டைமாக வழிப்பறியையும் தொடர்கிறார். இதே போல் ஐடியில் வேலை செய்து கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் டேனி கூட்டாளியிடம், வழிப்பறி செய்த…

Read More

ZEE5 தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது. SS Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான, அசத்தலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். ரெய்டு அதிகாரிகளுக்கு…

Read More

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகம்: தான் விரும்பும் வாழ்க்கையை அடைய குமுதா சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்!

சில கனவுகள் எளிமையானது. ஆனால், அந்த எளிய கனவுகள் மிகப்பெரும் அர்த்தம் கொண்டது. YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. இதனை அன்பு மற்றும் வலிமை மூலம் குமுதா எதிர்கொள்கிறாள். நம்பிக்கைக்கும் மனவேதனைக்கும் இடையில் சிக்கி தான் விரும்பிய வாழ்க்கைக்காக போராடுகிறாள். கனவு காணத் துணிந்து அதை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கதை ஒரு சான்றாகும். தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா பகிர்ந்து கொண்டதாவது, “குமுதாவின் கனவு ஒரு வீடு, ஒரு குடும்பம் மற்றும் நீடித்த காதல் என்ற எளியதுதான். ஆனால், வாழ்க்கை அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவளை சோதிக்கிறது.…

Read More

“எனை சுடும் பனி” படத்தின் “தீராத ஆசையே…” பாடல் வெளியீடு

21ம் தேதி வெளியாகும் உண்மை சம்பவம்! https://youtube.com/watch?v=WHwD0EUAmCs%3Fsi%3D6SApsSNZNbt1Yy1a “எனை சுடும் பனி” திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் நட்ராஜ் சுந்தர்ராஜ் கதாநாயகனாகவும், உபாசனா ஆர்.சி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம்புலி, கூல் சுரேஷ், தானீஷ், சுந்தர்ராஜ் , பில்லி முரளி, பழனி சிவபெருமாள் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. எஸ்.என்.எஸ். பிக்சர்ஸ் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்துள்ளார். சாண்டி மாஸ்டர் ஒரு பாடலுக்கு நடனமாடியதோடு, நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதி, ராம் சேவா இயக்கியுள்ளார். அருள் தேவ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வெங்கடேஷ், சண்டைப் பயிற்சி டேஞ்சர் மணி, எடிட்டிங் சி.எம்.இளங்கோவன், கலை சோலை அன்பு, நடனம் சாண்டி மாஸ்டர், ராதிகா, பாடல்கள் ராம் சேவா, சரவெடி சரண், வசந்த்.…

Read More