இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’. ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை-ஆபத்து, தியாகம்-கொடூரம், மாயை-இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசும். திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகளே மொழியின் அடிநாதம். அதுபோல், ’VOWELS’ திரைப்படம் ஐந்து தனித்துவமான கதைகள் மூலம் காதலை வெளிப்படுத்தும். ஒவ்வொரு கதையும் ஒரு உயிரெழுத்தை மையமாகக் கொண்டு…
Read Moreசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ ராவடி ‘ எனும் திரைப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ராவடி’ எனும் திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த…
Read Moreசெழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா
தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ‘ தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்திடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி ஃபிலிம் ஸ்கூல் செழியனுடன் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத்; ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீ ராம், ரவிவர்மன்; வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது; தயாரிப்பாளர்- விமர்சகர்…
Read Moreஆரி அர்ஜுனன் நடிக்கும் “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது !!
MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R சுந்தரபாண்டி. சைக்காலஜிகள் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன்…
Read Moreஇயக்குநர் பா.இரஞ்சித் அறிக்கை!!
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம். – இயக்குநர் பா.இரஞ்சித்
Read Moreரீ ரிலீஸ் படங்களுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்: இயக்குநர் பேரரசு பேச்சு!
சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த ‘ப்ராமிஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்,நடிகர் காதல் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவுக்குப் படக் குழுவினர் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள். அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள தயாரிப்பாளர் N.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது, “இந்த இயக்குநரை 2023இல் வேலூரில் சந்தித்தேன். அவர் ஒரு கதையைச் சொன்னார்.…
Read Moreஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – நகுல் நடிக்கும் ” காதல் கதை சொல்லவா ” பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது.
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ” காதல் கதை சொல்லவா” இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ஆத்மிகா, ரித்திக்கா சென் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளார். வசனம் – கண்மணி ராஜா ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். M. ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இருவரும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். கண்மணி ராஜா, முத்தமிழ், கவிதாரவி, K. பார்த்திபன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். C. பிரசன்னா, சுஜித், பிரவின்.G மூவரும் நடனம் அமைத்துள்ளனர். எடிட்டிங் – ஜீவன் கலை இயக்கம் – சிவா யாதவ்…
Read Moreஅக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா – சேவை பயணத்தின் முக்கிய மைல்கல்
அக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா, சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில், மூத்த நடிகை திருமதி லதா சேதுபதி அவர்கள் தலைமையில், வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக தன்னலமற்ற சேவையை முன்னெடுத்து வரும் அக்ஷயா டிரஸ்ட், சென்னையில் செயல்பட்டு வரும் 6 இலவச முதியோர் இல்லங்கள் மற்றும் காஞ்சிபுரம் – ஆற்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு இலவச முதியோர் இல்லம் மூலம், 400 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அடைக்கலம் மற்றும் அத்தியாவசிய ஆதரவுகளை வழங்கி வருகிறது. மேலும், அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் முற்றிலும் இலவசமான ஆங்கில வழி பள்ளிக்கூடம் மூலம், பொருளாதார வசதியற்ற சுமார் 250 மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய திடக்கழிவு மேலாண்மை அமைப்பை…
Read Moreதிரையுலகம்–சமூக சேவை–அரசியல் பயணத்திற்கு மரியாதை: பி.டி.செல்வகுமாருக்கு சென்னை வடபழனியில் பிரமாண்ட பாராட்டு விழா
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக’வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பதற்காகவும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது. நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு அப்பாவு, திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ், இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் எஸ் வி சேகர், நடிகை தேவயானி, படத் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு…
Read Moreவங்காள விரிகுடா – திரைப்பட விமர்சனம்
கதை… தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய ஆள் அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தியார்.) ஒரு பக்கம் நல்லவர் என்ற போர்வையில் இருந்தாலும் திரை மறைவாக பல கொலை சம்பவங்களை செய்பவர் இவர். இவரின் நண்பரின் மகளே இவரை கட்டிக் கொள்ள ஆசைப்பட கல்யாணம் செய்து கொள்கிறார்.. அதே சமயத்தில் இவரது முன்னாள் காதலியும் இவரை தேடி வருகிறார்.. ஆக இரண்டு மனைவிகளுடன் வாழும் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.. அதாவது முன்னாள் காதலியின் கணவர் பேய் ரூபத்தில் மர்ப நபராக வருகிறார்.. அவர் யார்.? அந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்.? இவர் போட்ட வேஷம் கலைந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள் குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷா படத்தில் ஏகப்பட்ட துணை நட்சத்திரங்கள் இருந்தாலும்…
Read More