வாஸ்கோடகாமா திரை விமர்சனம் – நெகட்டிவ் உலகம்

கதை… நல்லவனுக்கு பெண் கொடுக்க மாட்டோம்.. நல்லவனாக இருந்தால் வாழ விடமாட்டோம் என்ற நோக்கத்தில் ஊரில் எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. பிக் பாக்கெட் அடிப்பவன் கற்பழிப்பவன் கொள்ளை அடிப்பவன் கொலைகாரன் உள்ளிட்டவர்கள் மட்டுமே வாழும் நாட்டில் நல்லவனுக்கு பெண் தர மறுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நகுலுக்கு கல்யாணம் கட்டி வைக்க தீர்மானித்து முனிஷ்காந்த் திட்டம் போடுகிறார். அதன்படி ஆனந்தராஜின் மகள் அர்த்தனா பினுவை பெண்பார்க்க செல்கிறார்.. அங்கு இவன் மோசமானவன் அக்மார்க் அயோக்கியன் என்று கூறி கட்டி வைக்க முயல்கிறார்.. திருமணத்தின்போது நகுல் அயோக்கியன் அல்ல நல்லவன் என்று தெரிந்து விடுகிறது. இதனால் திருமணம் நின்று போகிறது.. அதன் பிறகு அவன் ஜெயிலுக்கு செல்கிறார்.. அங்கு திருடர்கள் எல்லாம் நல்லவர்களாகவும் போலீஸ் எல்லாம் மகா கெட்டவர்களாக இருக்கிறார்கள். வரும் கைதிகளுக்கு கற்பழிப்பது எப்படி? கொள்ளை அடிப்பது கொலை…

Read More

ஜமா விமர்சனம் – தெருக்கூத்து

‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கும் சொல்லாகும்.. நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. கதை… கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன்.. இவரது உறவினர்கள் பலரும் தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் படத்தை எதார்த்தமாக இயக்கி நல்லதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார்.. பாரி இழவழகன் இவரது தந்தை தயா.. தெருக்கூத்து பார்க்க சென்ற தயா ஒரு கட்டத்தில் அதில் ஆர்வமாகி அவரே தெருக்கூத்து கலைஞராகி விடுகிறார்.. ஜமா என்ற பெயரில் நாடகக் கலைக் குழுவை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் தனது நண்பரின் பொறாமையால் இவரது கலைக்குழு கைவிட்டு போகிறது.. ஒரு கட்டத்தில் மரணமும் அடைகிறார்.. தன் தந்தையை கைவிட்ட ஜமா குழுவை மீண்டும் கைப்பற்ற மகன் பாரி இளவழகன் போராடும் போராட்டமே…

Read More

Deadpool & Wolverine – விமர்சனம்

எக்ஸ் மென் பட வரிசையில் இது 11வது படமாகும்.. எக்ஸ்-மென் வரிசையைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் ரசிக்கவே முடியாமல் புரியாமல் கூட போகலாம்.. கதை… எரிபொருள் டேங்கிற்குள் தீ வைத்து வேட் வில்சன் தற்கொலை செய்ய முயல்கிறார்.. அப்போது முதல் படம் தொடங்குகிறது… பொதுவாகவே ஆங்கில படங்களை டப்பிங் செய்யும் போது தமிழில் ஏகப்பட்ட வசனங்கள் தமிழ் ரசிகர்களின் ரசனைக்காக காமெடிக்காக சேர்க்கப்படும்.. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.. காமெடி என்ற பெயரில் அடல்ட் ஒன்லி ஜோக்குகளை வைத்து குழந்தைகளை பார்க்க விடாமல் செய்து விட்டனர்.. அதிலும் ஏகப்பட்ட கேரக்டர்கள் பேசுகிறது பேசுகிறது.. பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.. கேன்சர் நோயாளி வேட் வில்சன் (ரையான் ரெனால்ட்ஸ்), தன் காதலியோடு (மொரேனா பாக்கரின்) குழந்தை பெற திட்டமிடுகிறான். அதற்குள் அவரின் காதலியை எதிரிகள் கொன்றுவிட, தானும் இறக்க…

Read More

ராயன் விமர்சனம் : ரணகளம் செய்யும் தனுஷ்

கதை… தனுஷ் சந்திப் கிஷன் காளிதாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய நால்வரும் அண்ணன் தங்கை.. சிறுவயதிலேயே இவர்கள் பெற்றோரை இழந்து விட்டதால் தன் தம்பிகளையும் தங்கையையும் பாதுகாப்பாக பார்த்து வளர்த்து வருகிறார் தனுஷ்.. இவர்களின் நிலை அறிந்த செல்வராகவன் அவர் குடும்பத்திற்கு உதவுகிறார்.. இதனால் செல்வா மீது தனுஷ் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்.. தந்தை ஸ்தானத்திலிருந்து செய்து வருகிறார்.. இவர்கள் இரவு நேர ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வாழ்ந்து வருகின்றனர் காளிதாஸ் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஆனால் சந்திப் தவறான பழக்க வழக்கங்களால் நிறைய பிரச்சனைகளை வீட்டிற்கு கொண்டு வருகிறார்.. இதனால் அடிக்கடி அண்ணன் தனுஷுக்கும் தம்பி சந்திப்புக்கும் மோதல்கள் வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு பாரில் பிரச்சனை செய்யும் போது தவறுதலாக வில்லன் சரவணன் மகனை கொன்று விடுகிறார் சந்தீப். இதனால் சரவணன்…

Read More

பிதா 23 : 23 – சினிமா விமர்சனம்

காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட ஒரு தொழில் அதிபரையும், தனது அக்காவையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை… ஒரு தொழில் அதிபரை அவரது டிரைவருடன் கடத்தி வைத்து விட்டு அவரது மனைவியிடம் 25 கோடியை கேட்கின்றனர் ஆதேஷ் பாலா சாம்ஸ் & மாரீஸ் ராஜா.. இவர்களை கடத்திக் கொண்டு போகும் வழியில் நாயகி அனு-வையும் கடத்திக்கொண்டு அவரையும் அடக்கி வைத்து இருக்கின்றனர்.. தன் அக்காவை தேடி மாஸ்டர் ஹர்ஷித் அங்கு வருகிறான்.. அவன் என்ன சாகசங்கள் செய்தான்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர்கள் அனைவரும் தங்கள் பணிய சிறப்பாக செய்திருக்கின்றனர்.. ஒரே இரவில் நடக்கும் கதையை…

Read More

தண்டுபாளையம் திரை விமர்சனம்

உண்மை சம்பவத்தை திரையில் பார்த்தாலே மனம் கதையோடு இன்னும் நெருக்கமாகி விடும். இதுவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வீடு புகுந்து நடத்தும் வன்முறைக் கதை. அதை திரைப்படுத்திய விதத்தில் மனதுக்குள் திகில், அதேநேரம் விழிப்புணர்வுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆணியடித்து சொல்லியிருக்கிறார்கள். பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதியில் வீடு புகுந்து கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவத்தை ஈவிரக்கமே இ்ல்லாமல் தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துகிறது. அந்த கூட்டத்தை போலீஸ் அதிகாரி கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருகிறார். மக்களை பயமுறுத்திய கூட்டம் ஒழிந்தது என்று போலீசார் எண்ணும் நிலையில் அதேபோல் இன்னொரு கூட்டம் புறப்பட்டு அட்டூழியம் செய்கிறது. அந்த கூட்டத்தை பிடிக்க புதிய போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார் அவரால் அந்த கூட்டத்தின்ஆணிவேரை அறுக்க முடிந்ததா என்பது ரத்தம் தெறிக்கும் திகுதிகு…

Read More

வெப்பன் விமர்சனம் 3/5..

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம். சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’.. Youtuber வசந்த் ரவி வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவர். எனவே இவர் வீடியோவுக்காக ஒரு முறை சூப்பர் ஹுயூமன் பற்றிய தகவல்களைத் தேட ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கு திடீரென ஒரு வெடி விபத்து நடக்கிறது. அப்போது இவர் அங்கு இருப்பதால் போலீஸ் இவரை அழைத்துக் கொண்டு விசாரிக்கின்றனர். அப்போது இவர் சூப்பர் ஹியூமன் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களால் அழிக்க முடியாது அது ஒரு அபார சக்தி கொண்டது என்கிறார். மேலும் அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய வருகிறது.. அப்படி என்றால் வசந்த ரவி உண்மையில் யார்.? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.…

Read More

ரத்னம் விமர்சனம்

கில்லி, பையா, என பல படங்களில் பார்த்த அதே கதை தான். நாயகியை துரத்தும் ஒரு கும்பல். நாயகியை காப்பாற்றப் போராடும் நாயகன், இந்த இரண்டு செயல்களுக்கும் பின்னால் காரணங்கள் அடங்கிய சில பின்கதைகள். இது தவிர்த்து நாயகன் விஷாலுக்கும் வில்லன் கூட்டத்திற்குமான மற்றொரு பின்கதை அடங்கியது தான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் கதை. இக்கதையில் இறுதியில் நாயகன் நாயகியை காப்பாற்றினானா…? என்று கேட்கவும் வேண்டுமா என்ன…? ஆந்திரா, தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பொழுது சில தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் நிலம் அண்டை மாநிலங்களில் மாட்டிக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளில் துவங்கும் கதை, திருப்பதி மலை மேல் செல்லும் பேருந்தை கவிழ்த்து கொள்ளை கொலை சம்பவங்கள் நிகழ்த்தும் கயவர்களைக் காட்டி, அப்படியே தமிழ்நாட்டிற்கு பயணித்து, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை சிறு வயது விஷால் காப்பாற்றி…

Read More

ஒரு நொடி விமர்சனம்

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல்லாயிரம் நொடிகளால் ஆனது. அதில் ஒரு நொடி நம் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றிப் போடும் ஆற்றல்மிக்கதாக இருக்கிறது என்கின்ற கருத்தை வலியுறுத்தும் திரைப்படமே இந்த “ஒரு நொடி” திரைப்படம். தன் கணவர் சேகரனை (எம்.எஸ்.பாஸ்கர்) காணவில்லை என்று ஒரு இரவு நேரத்தில் வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் சகுந்தலா (ஸ்ரீரஞ்சனி). அதுமட்டுமின்றி தன் கணவருக்கும் கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) –வுக்கும் இடையில் நிலப்பத்திரம் தொடர்பான பிரச்சனை இருப்பதையும் கூறி தனக்கு அவர் மீது சந்தேகம் இருக்கிறது என்று கூறுகிறார். இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன்குமார்) சேகரன் காணாமல் போன வழக்கின், முதல் சந்தேகப் பார்வையை கரிமேடு தியாகுவின் மீது வைத்து அந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். அந்த விசாரணையின் போதே மற்றொரு இளம்பெண் ஒருவரும் மர்மமான முறையில்…

Read More

ஃபைண்டர் புராஜக்ட் 1 விமர்சனம்

எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிரபராதிகளை கண்டறிந்து அவர்கள் வழக்கை மீண்டும் துப்பறிந்து உண்மையை வெளிக் கொண்டு வருவதன் மூலமாக அவர்களுக்கு விடுதலைப் பெற்றுத் தர முதுகலை குற்றவியல் பட்டதாரி மாணவர்களால் ஃபைண்டர் என்கின்ற ஒரு அமைப்பு துவங்கப்படுகிறது. அவர்கள் தங்களது முதல் வழக்காக மீனவக் குப்பத்தை சேர்ந்த பீட்டர் என்பவரின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பீட்டர் யார்..? அவர் என்ன குற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்..? அவர் வழக்கின் பின்னணியில் உள்ள சதி என்ன என்பதை பேசுவதே இந்த “ஃபைண்டர் புராஜக்ட் – 1” திரைப்படத்தின் கதை. மீனவ குப்பத்தில் தன் மகளை வருங்காலத்தில் ஆட்சியராக மாற்றிப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையுடன் வாழும் பீட்டர் என்னும் மீனவ கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருக்கிறார். தான் கடன்பட்டதை எண்ணி மீனவக்…

Read More