கதை… நாயகன் விஷ்வத் ஒரு ஆட்டோ டிரைவர்.. ஆனாலும் இவர் விஞ்ஞானியாக ஆசைப்பட்டு வறுமையின் காரணமாக அது முடியாமல் போகவே ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். டிராபிக் போலீஸ் நாயகி சுனைனா.. கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக இல்லாமல் கருணை உள்ள கொண்ட நாயகியாக நாயகனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஒருநாள் விஷ்வத் ஆட்டோவில் சவாரி செய்ய இளவயது அப்துல் கலாம் வருகிறார்.. இதனால் அவருக்கு சந்தேகம் வரும் நிலையில் ஒரு கட்டத்தில் அப்துல் கலாம் தான் டைம் ட்ராவல் செய்து தற்போது தன் ஆட்டோவில் சவாரி செய்ய வருகிறார் என்பதை உணர்ந்து கொள்கிறார். ஆனால் அப்துல் கலாம் டைம் ட்ராவல் செய்ய வந்த நோக்கம் என்ன என்பது புரியாமல் குழம்பி நிற்கிறார். தான் டைம் ட்ராவல் செய்து இந்த காலகட்டத்திற்கு வந்த நோக்கம் என்ன?என்பதை அறிய…
Read MoreCategory: விமர்சனம்
சார் – திரைப்பட விமர்சனம் – மதிப்பீடு : 3/5
சிறந்த குணச்சித்திர நடிகராக புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படமான ‘சார்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். மாங்கொல்லை எனும் கிராமப் பகுதியில் 1950- 60 -80 ஆகிய காலகட்டங்களில் அங்குள்ள அரசாங்க பள்ளி ஒன்றின் பின்னணியில் கல்வியின் அவசியம் குறித்து பேசும் படமாக ‘சார்’ உருவாகி இருக்கிறது. கோலோச்சு குடும்பம் எனும் குடும்பம் மாங்கொல்லை பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த குடும்பத்தில் மூத்த உறுப்பினராக எழுத்தாளர் ஜெயபாலன் இருக்கிறார். இவர் சாமியாடி. அங்கு வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவை தருவதற்காக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அண்ணாதுரை என்பவர் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்து பள்ளி கட்டிடத்திற்கான நிலத்தை…
Read Moreஆர்யமாலா – திரைப்பட விமர்சனம்
கூத்துக் கலையை முன்னிலைப்படுத்தி தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான படைப்புகள் வருகை தந்து.. ரசிகர்களை பரவசப்படுத்துகிறது. அந்த வகையில் தெருக்கூத்தினை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த ஆர்யமாலா எனும் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து பார்ப்போம். இந்தக் கதை 1982 ஆம் ஆண்டில் நடு நாடு எனப்படும் கடலூர் சுற்றுப்புற பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. கதைப்படி கிராமத்தில் வாழும் தம்பதியருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவள் மனிஷா ஜித். இவளுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார். மனிஷா பருவ வயதை கடந்த பின்னரும் பூப்படையாமல் இருக்கிறார். இவருடைய தங்கை ஒரு நாள் வயதுக்கு வந்து விடுகிறார். இது மனிஷாவிற்கு சந்தோஷத்தை அளிக்காமல் வருத்தத்தை அளிக்கிறது. ஊர் மக்கள் அனைவரும் மனிஷாவையும், அவரது தாயையும் மறைமுகமாக குறை கூறுகிறார்கள். வயதுக்கு வந்த…
Read Moreவேட்டையன் – திரை விமர்சனம் – 4/5
நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நபர்களின் பேராசையை கிழித்து தொங்க விட்டு இருக்கிற திரைக்கதை படத்தின் முதல் பலம். அடுத்து இந்தக் கதைக்கான நாயகன் ரஜினி . கதையின் நாயகனான அவர் கேரக்டராகவே மாறி முழு படத்தையும் தாங்கியிருப்பது இன்னொரு சிறப்பு. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரவுடிகளை சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா விஜயன்) தனியார் நீட் கோச்சிங் சென்டரின் அப்பட்டமான மோசடியை எதிர்த்து துணிச்சலாக போராடுகிறார். அப்பாவிகளை எமாற்றி கோடிகளில் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் காரர்கள் சும்மா இருப்பார்களா? ஆம், அதே தான் நடக்கிறது. சரண்யா கொலையாகிறார், அதுவும் பாலியல் பலாத்கார அடையாளத்துடன். அந்த வழக்கு விசாரணையில்…
Read Moreஆரகன் விமர்சனம்.. முதுமையிலும் இளமை
கதை… நாயகன் மைக்கேல் தங்கதுரை.. நாயகி கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள்.. கல்யாணத்திற்கு பிறகு ஏதாவது பிசினஸ் செய்யலாம் என்கிறார் நாயகன்.. அதற்காக இருவரும் பணம் சேர்க்க முற்படுகின்றனர். அப்போது ஒரு வீட்டில் நடக்க முடியாமல் அவதிப்படும் ஸ்ரீரஞ்சனியை கவனித்துக் கொள்ள நாயகி கவிப்பிரியாவுக்கு வாய்ப்பு வருகிறது.. இதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.. அப்படி சம்பாதித்தால் பிசினஸ் செய்யலாம் என எண்ணி அந்த வேலைக்கு செல்கிறார் நாயகி. முதலில் மறுக்கும் நாயகன் பிறகு நாயகியை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.. அதன்படி நாயகியும் செல்கிறார்.. அங்கு சென்ற பின்னர் தான் ஸ்ரீரஞ்சனி வீட்டில் ஒரு கண்ணாடி கூட இருக்கக் கூடாது என்கிறார்.. கண்ணாடியில் முகத்தையே கூட பார்க்காமல்.. இப்படியாக சில மாதங்கள் ஆன நிலையில் திடீரென இளமையிலேயே கவிப்பிரியாவுக்கு முதுமை வருகிறது.. தலைமுடி நரைக்கிறது.. வயதான…
Read Moreல்தகா சைஆ (காதல் ஆசை) விமர்சனம்.. கனவு உலகம்
கதை… ஈரோடு கோவையைச் சேர்ந்த நிஜமான காதல் தம்பதியர் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் ல்தகா சைஆ. நாயகன் சதா நாடார் நாயகி மோனிகா இருவரும் புதுமண காதல் தம்பதிகள்.. நாயகன் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார்.. இவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது.. கனவில் இவரே மனைவியை கொல்வது போலவும்.. வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருப்பது போலவும் இப்படியாக பல கனவுகள் வருகிறது.. ஒரு நாள் காணும் கனவு அடுத்த நாள் நிஜத்தில் நடக்கிறது.. தன் மனைவியை தானே கொன்று விடுவோமோ தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விடுமோ என்றெல்லாம் குழம்பித் தவிக்கிறார். இந்த சூழ்நிலையில் கணவர் கனவில் நடப்பதை தடுக்க இவர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… சதா நாடார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.. இவர் தன்…
Read Moreநீல நிறச் சூரியன் விமர்சனம்.. பெண்ணாக மாறிய ஆண்
கதை…. பிறக்கும்போது ஆணாகப் பிறந்தவர் அரவிந்த்.. ஆனால் இவருக்குள் பெண்மை அடிக்கடி எட்டிப் பார்க்க பெண்ணாக மாறி வாழ ஆசைப்படுகிறார்.. ஆனால் இந்த சமூகம் & பெற்றோர்கள் எப்படி சம்மதிப்பார்கள் என்ற மனநிலையிலே 25 வயதை கடந்து விடுகிறார். ஆனாலும் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் விடவில்லை.. ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.. ஒரு கட்டத்தில் பெண்ணாக மாற முடிவெடுத்து வீட்டிலும் பள்ளியிலும் சொல்ல பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது.. ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கும் இவர் பெண்ணாக மாறுகிறார்.. அதன் பிறகு இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. பள்ளியில் ஆசிரியராகப் பார்த்த மாணவர்கள் இவரை ஆசிரியையாக பார்த்தார்களா..? பெற்றோர்கள் உறவினர்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்…. இந்த நீல நிறச் சூரியன் படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி…
Read Moreசெல்ல குட்டி திரைப்பட விமர்சனம் – ரசிக்கும் குட்டி
கதை… நாயகர்கள் டிட்டோ & மகேஷ் மற்றும் நாயகி தீபிக்ஷா ஒரே வகுப்பில் +2 படிக்கிறார்கள்.. மகேஷ் பெற்றோர் இல்லாதவர் என்பதால் அவர் மீது நாயகி தீபிக்ஷா இரக்கம் காட்டுகிறார்.. இது காதல் என நினைக்கும் மகேஷ் அவரிடம் காதலை சொல்ல தீபிக்ஷா மறுக்கிறார். என் படிப்புக்கு தொந்தரவு செய்யாதே என நாயகி சொன்னதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் மகேஷ்.. இதனால் பிளஸ் டூ வில் தோல்வி அடைகிறார். ஆனால் மற்றவர்களை நன்றாக படித்து கல்லூரிக்கு செல்கின்றனர்.. அங்கு டிட்டோவை காதலிக்கிறார் தீபிக்ஷா.. ஆனால் நான் உன்னிடம் அப்படி பழகவில்லை.. என் நண்பனின் காதலி நீ.. எனவே உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுக்கிறார். அதன் பிறகு நாயகி என்ன செய்தார்? யாரின் காதலை ஏற்றுக் கொண்டார் என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை. நடிகர்கள்… நாயகி…
Read Moreதேவரா விமர்சனம்.. கடல் கொள்ளை
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சையப் அலி கான், பிரகாஷ்ராஜ், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்திருக்கும் ’தேவரா’ படம் பான் இந்தியா வெளியீடு.. கதை… நம் நாட்டிற்கு சட்ட விரோதமாக வரும் ஆயுதங்களை தொழில் அதிபர் கட்டளைக்காக செங்கடலுக்கே சென்று கொள்ளையடித்து கொடுப்பது ஜூனியர் என்டிஆர் இன் தொழில்.. இவருக்கு உடந்தையாக சைப் அலிகான் கலையரசன் உள்ளிட்ட நண்பர்கள் உண்டு. ஒரு கட்டத்தில் இவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கடற்படை அதிகாரி நரேன்.. நீங்கள் நாட்டிற்கு துரோகம் செய்கிறீர்கள் என சொல்கிறார். இதனையடுத்து என்டிஆர் திருந்துகிறார்.. ஆனால் இவரது நண்பர்களோ எங்களது தொழில் இதுதான்.. நாங்கள் விட முடியாது என பிரச்சனை செய்யவே மோதல் வெடிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? நாட்டிற்கு துரோகம் செய்த நண்பர்களை இவர் தீர்த்து…
Read MoreHitler ஹிட்லர் விமர்சனம்.. கொள்ளையன்
கதை… தன் நண்பன் ரெட்டின் கிங்சிலியை தேடி சென்னைக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி.. அங்கு ஒரு வேலையாக தங்குகிறார்.. அப்போது நாயகி ரியாவை அடிக்கடி டிரெயினில் சந்திக்க சந்திக்க காதலும் கொள்கிறார். இதனிடையில் தேர்தல் நேரத்தில் ட்ரெயினில் அடிக்கடி அரசியல்வாதியின் கோடிக்கணக்கான கருப்பு பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொள்ளையனை தேடி போலீஸ் விசாரித்து வருகிறது. ஒரு கட்டத்தில் கொள்ளையனை போலீஸ் நெருங்கி துப்பாக்கி சூடு நடத்த முயலும் போது ஒருவன் விஜய் ஆண்டனி சுட்டு விடுகிறான்.. அப்பொழுது அவனை பிடித்து மிரட்டி கௌதம் மேனன் விசாரிக்கும் போது விஜய் ஆண்டனி தான் கொள்ளையன் என அந்த நபர் சொல்கிறார். அப்படி என்றால் விஜய் ஆண்டனி உண்மையில் யார்.? அவருக்கு கொள்ளை அடிப்பது நோக்கம் என்ன?என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை. நடிகர் – நடிகையர் : சமூக…
Read More
