கண்ணகி விமர்சனம்

  தன் கணவனால் பல்வேறு அவலங்களுக்கு ஆனாலும் கூட கணவனுக்காக கடைசி வரை நின்றவள் அந்தக் கால கண்ணகி. இந்த காலத்தில் திருமண உறவுக்கு காத்திருக்கும் பெண்ணோ, திருமண பந்தம் சரியில்லாமல் விவாகரத்து கோரும் பெண்ணோ, திருமணமோ காதலோ தனக்கு செட் ஆகாது என்று லிவிங்-கில் வாழும் பெண்ணோ, அல்லது காதலனோடு லிவிங்-கில் இருக்கும் பெண்ணோ, யாராக இருந்தாலும் இன்னும் ஆண்களை நம்பி வாழ வேண்டிய கலியுக கண்ணகியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதே “கண்ணகி” திரைப்படத்தின் கதை. பெண்களுக்கு திருமணமே பாதுகாப்பைத் தரும் என்று சொல்லி  சொல்லி வளர்க்கப்படும் கலை (அம்மு அபிராமி), திருமணம் தனக்கான பாதுகாப்பை தராமல் விவாகரத்து கொடுத்து தன்னை வெளித்தள்ள முயலும் போது செய்வதறியாது திகைக்கும் நேத்ரா (வித்யா பிரதீப்), காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் லிவிங்-கில் இருப்போம் என்று வாழும்  நதி,…

Read More

ஃபைட் க்ளப் விமர்சனம்

  வடசென்னை களம், கஞ்சா போதைப் பொருள் கடத்தல், வளர்ச்சிக்கு முயலும் இளைஞர், அவருக்கு உதவும் வடசென்னை முக்கியப் புள்ளி, துரோகம், பழிவாங்கல், கேங்க், கேங்க்வார் சண்டை இவைகளின் தொகுப்பே ஃபைட் க்ளப். வட சென்னைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அங்க அடையாளத்தில் இருந்து சற்றும் பிரளாத மற்றுமொரு தமிழ் சினிமா. வடசென்னை என்றாலே போதை கலாச்சாரம், கேங்க் வார், சண்டை, அடிதடி வம்புக்கு பயப்படாத இளைஞர்கள், கால் பந்தாட்டம், கேரம், மேற்கத்திய நடனம், நட்பு, துரோகம், பழி வாங்கல் என்று ஏற்கனவே போட்டு வைக்கப்பட்டிருக்கும் கெட்டியான எந்த மழைக்கும் எந்த நூற்றாண்டுக்கும் பெயர்ந்தே போகாத தார் சாலையில்  ஓடவிடப்பட்டிருக்கும் புதிய பேருந்து தான் “ஃபைட் க்ளப்”. எங்களை குற்றவாளிகளாகவே சித்தரிக்காதீர்கள்; பிற பகுதி மக்கள் எங்களை பார்த்தாலே பழகத் தயங்குகிறார்கள்; ஒதுங்கிப் போகிறார்கள், எங்களிடமும் வாழ்க்கை இருக்கிறது, எந்த…

Read More

ஆத்மீகா பட விமர்சனம்

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தாமோதரன் செல்வகுமார் இயக்கத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ஆத்மிகா”.  மெடிக்கல் மாபியாவின் பின்னணியில் விஞ்ஞான மருத்துவம் எப்படியெல்லாம் தவறான முறையில் கையாளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க இருக்கிறார்ர்கள் என்கின்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கவிடுகிறது “ஆத்மிகா”. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனான ஆனந்த் நாக் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா நாயகியாக நடிக்க, இவர்களுடன் ஜீவா ரவி, பிர்லா போஸ், வினிதா, பேபி அக்‌ஷயா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வெறும் துணைக் கதாபாத்திரமாக மட்டுமில்லாமல், சில சவாலான கதாபாத்திரங்களை ஏற்று துணிச்சலாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் தாமோதரன் செல்வகுமார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இருந்தாலும் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் குறையில்லை. விஞ்ஞான மருத்துவம் தவறானவர்களின் கைகளில்…

Read More

பார்க்கிங் சினிமா விமர்சனம் :

இரு குடித்தனங்கள் வசிக்கும் ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பில் இருக்கும் சிறிய பார்க்கிங் ஏரியாவில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பிரச்சனையால் இரு நல்ல மனிதர்கள் எப்படி மிக மோசமான மிருகங்களைப் போல் மாறுகிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு தவறை உணர்ந்து திருந்தினார்களா..? இல்லை அந்த ஈகோவிற்கு தங்களை பலி கொடுத்தார்களா..? என்பதை விறுவிறுப்புடனும் சுவாரஸ்யத்துடனும் பேசி இருக்கும் திரைப்படம் தான் “பார்க்கிங்”. ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பின் கீழ் தளத்தில் 10 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அரசாங்க ஊழியர் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்). நகராட்சி அலுவலகத்தில் வி.ஏ.ஓ வாக பணிபுரியும் அவர் நேர்மைக்குப் பெயர் போனவர், அதே போல் தனக்கு இருக்கும் ஒற்றை மகளை செல்வ செழிப்புடன் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கின்ற கனவிற்காக சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து, பார்த்துப் பார்த்து செலவழித்து,…

Read More

”குய்கோ” சினிமா விமர்சனம்

தனது 30 வருட பத்திரிக்கைத் துறைப் பணி மற்றும் அனுபவத்தை தொடர்ந்து அருள் செழியன் முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம் “குய்கோ”. அருள் செழியன் 2016ம் ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை” திரைப்படத்தின் கதாசிரியராக பணியாற்றியவர் என்பது நினைவு கூறத்தக்கது.  ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக இருந்ததோ அதே போன்று “குய்கோ” திரைப்படமும் ஒரு வித்தியாசமான காண்பனுவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருந்தது என்பதிலும் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்கான படமாக “குய்கோ” இருக்கின்றது என்பதிலும் படம் பார்த்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இயக்குநருக்கு பழைய தமிழ் படங்கள் என்றால்  மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது. தான் கதை எழுதிய திரைப்படத்திற்கு  ஆண்டவன்  கட்டளை என்ற பெயரை அவர்தான்  சிபாரிசி செய்தாரா..? என்பது தெரியவில்லை. அல்லது அப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன…

Read More

’99 சாங்ஸ்’ சினிமா விமர்சனம்

இந்தியில் ஒரு ஆங்கிலப் படம் என்று சொல்லும்படியான மேக்கிங்கில் ஒரு படம்! முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக வைத்து காதல் உணர்வைக் கலந்துகட்டிய கதை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதாசிரியராக களமிறங்கிய முதல் படைப்பு. இந்தியில் உருவாகி தமிழில் மொழிமாற்றமாகி ரிலிஸாகியிருக்கிறது! கதை… தனது மகன் இசை மீது அதீத ஆர்வமாக இருக்கிறான். அந்த ஆர்வத்திற்கு தந்தை தடைபோடுகிறார். அதற்கு காரணம் இல்லாமலில்லை. தந்தையின் தடையை மீறி இசை கற்றுக் கொள்கிற அந்த மகனுக்கு ஒரு காதலி. காதலியின் தந்தை கோடிகளில் புரள்பவர். அவர் தனது மகளை கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும்படியான பாடலை உருவாக்கு என்கிறார். காதலியின் தந்தை சொன்னதை சவாலாக ஏற்று அந்த பாடலை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான். அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறான். அவற்றையெல்லாம் எப்படி…

Read More

‘கர்ணன்’ சினிமா விமர்சனம்

மேல் சாதிக்காரர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் கீழ் சாதி மக்களைப் பற்றி நிறைய படங்கள் வந்தாயிற்று. கலைப்புலி தாணுவின் மிக பிரமாண்டமான தயாரிப்பில், மண்வாசனையுடன் புதிதாய் இன்னொன்று… பொடியன்குளம் என்ற அந்த கிராமத்தின் வழியாக பேருந்து போக்குவரத்து இருக்கிறது. ஆனால், அந்த கிராமத்தினர் தாழ்ந்த சாதிக்காரர்கள் என்பதால், அந்த கிராமத்தில் பேருந்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை. அதனால் அந்த கிராமத்துப் மக்கள் மற்ற ஊர்களுக்குப் போய் வருவதில் ஏகப்பட்ட சிரமங்களை அனுபவிப்பதோடு, பிள்ளைகளும் மற்ற ஊர்களுக்குப் போய் படிக்க முடியாத சூழ்நிலை. அத்தனைக்கும் காரணம் அடுத்த ஊர் உயர் சாதிக்காரர்களின் செல்வாக்கு. அந்த செல்வாக்கால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வலிகளைச் சுமந்த குடும்பத்திலிருந்து கர்ணன் என்ற பெயர் சுமந்த இளைஞன் கொந்தளித்து எழுகிறான். அவனது கோபத்திலும் கொந்தளிப்பிலும் நியாயம் இருப்பதால் ஊர் மக்கள் அவனுடன் கை கோர்க்கிறார்கள். உயர்…

Read More

இ.பி.கோ. 306. சினிமா விமர்சனம்

‘நீட்’ தேர்வும், அதன் அழுத்தத்தால் அனிதாவில் தொடங்கி அடுத்தடுத்து நேர்கிற மாணவ, மாணவிகளின் தற்கொலைகளும் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் சூழலில், ‘நீட்’ தேர்வு சார்ந்த விழிப்புணர்வை விதைக்கும் விதத்தில் வந்திருக்கிறது இந்த இ.பி.கோ. 306.’ இந்த படத்தை எம்.எக்ஸ். பிளேயர் OTT-யில் இலவசமாகவே பார்க்க முடிகிறது. மருத்துவப் படிப்புக்கான கட்டாய நுழைவுத் தேர்வான ‘நீட்’ குறித்து விரிவாக அலசியிருக்கிற இந்த படத்தை நிஜ டாக்டரான சாய் என்பவர் இயக்கியிருக்கிறார். படத்தை தயாரித்திருக்கிற சாய் பிக்சர்ஸ்’ சிவக்குமார் கல்வியாளராம். திருச்சியில் இருக்கிற ஒரு கிராமத்தில், பின்னாளில் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியக் கனவோடு படித்து, 12-ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுகிறாள் அந்த மாணவி. 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றாலும் அந்த மாணவியால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறாள். வழக்கின்…

Read More

‘பூமி’ சினிமா விமர்சனம்

‘பூமி’ சினிமா விமர்சனம். சமூக அக்கறை சுமந்த படங்களின் வரிசையில் புதுவரவாய் ‘பூமி.’ ஜெயம் ரவியின் 25-வது படம்! ஜெயம் ரவி 16 வயதிலேயே சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் லெப்ட், ரைட் வாங்குகிறார். அதன் காரணமாக நாசாவில் வேலை கிடைக்கிறது. ‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிற விஞ்ஞானிகளில் ஒருவராக செயல்படுகிறார். இடையில் விடுமுறை கிடைத்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். சுயலாபத்துக்காக இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கரங்கள், தன் கிராமத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கொதிக்கிறார். கிராமத்தைக் காப்பாற்ற, கார்ப்பரேட் கம்பெனிக்கெதிராய் களமிறங்குகிறார். விரிகின்றன வழக்கமான ஹீரோயிஸக் காட்சிகள்… இயக்கம்: லெஷ்மணன் ஜெயம் ரவியின் நடிப்பு துடிப்பு. டயலாக் டெலிவரி தீ! ஹீரோயின் நிதி அகர்வால் அழகாக இருக்கிறார். கவர்ச்சியாக வருகிறார், போகிறார். டூயட் பாட்டில் மேடம் செம ஹாட்!…

Read More

‘ பேய் இருக்க பயமேன் ‘ சினிமா விமர்சனம்

‘பேய் இருக்க பயமேன்’ சினிமா விமர்சனம். அந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில் தங்குகிறார்கள். அந்த பங்களாவுக்குள் நுழைந்ததில் இருந்தே பேய்களின் அட்டகாசம்; பயப்படுகிறார்கள். பேய்களால் இவர்களுடைய நிம்மதி பறிபோகிறது. பேய் ஓட்டுகிற சிலரைக் கூட்டிவர, பேய்கள் அவர்களைத் தெறிக்கவிடுகிறது. வெறுத்துப் போன அந்த இளம் ஜோடி, தாங்களே பேய்களை விரட்டும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அந்த முயற்சிகள் கலகலப்புக்கு கேரண்டி தருகின்றன. பேய்ப் படங்களுக்கே உரிய அரதப் பழசான காட்சிகளால் படத்தின் முன்பாதி நிறைந்திருந்தாலும், பின்பாதியில் கதையோட்டத்தை சற்றே வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியிருப்பதற்காக இயக்குநர் கார்த்தீஸ்வரனுக்கு அழுத்தமான கை குலுக்கல்! இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவரது அப்பாவித் தோற்றமும்…

Read More