பிதா 23 : 23 – சினிமா விமர்சனம்

காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட ஒரு தொழில் அதிபரையும், தனது அக்காவையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை… ஒரு தொழில் அதிபரை அவரது டிரைவருடன் கடத்தி வைத்து விட்டு அவரது மனைவியிடம் 25 கோடியை கேட்கின்றனர் ஆதேஷ் பாலா சாம்ஸ் & மாரீஸ் ராஜா.. இவர்களை கடத்திக் கொண்டு போகும் வழியில் நாயகி அனு-வையும் கடத்திக்கொண்டு அவரையும் அடக்கி வைத்து இருக்கின்றனர்.. தன் அக்காவை தேடி மாஸ்டர் ஹர்ஷித் அங்கு வருகிறான்.. அவன் என்ன சாகசங்கள் செய்தான்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர்கள் அனைவரும் தங்கள் பணிய சிறப்பாக செய்திருக்கின்றனர்.. ஒரே இரவில் நடக்கும் கதையை…

Read More

தண்டுபாளையம் திரை விமர்சனம்

உண்மை சம்பவத்தை திரையில் பார்த்தாலே மனம் கதையோடு இன்னும் நெருக்கமாகி விடும். இதுவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வீடு புகுந்து நடத்தும் வன்முறைக் கதை. அதை திரைப்படுத்திய விதத்தில் மனதுக்குள் திகில், அதேநேரம் விழிப்புணர்வுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆணியடித்து சொல்லியிருக்கிறார்கள். பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதியில் வீடு புகுந்து கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவத்தை ஈவிரக்கமே இ்ல்லாமல் தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துகிறது. அந்த கூட்டத்தை போலீஸ் அதிகாரி கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருகிறார். மக்களை பயமுறுத்திய கூட்டம் ஒழிந்தது என்று போலீசார் எண்ணும் நிலையில் அதேபோல் இன்னொரு கூட்டம் புறப்பட்டு அட்டூழியம் செய்கிறது. அந்த கூட்டத்தை பிடிக்க புதிய போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார் அவரால் அந்த கூட்டத்தின்ஆணிவேரை அறுக்க முடிந்ததா என்பது ரத்தம் தெறிக்கும் திகுதிகு…

Read More

வெப்பன் விமர்சனம் 3/5..

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம். சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’.. Youtuber வசந்த் ரவி வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவர். எனவே இவர் வீடியோவுக்காக ஒரு முறை சூப்பர் ஹுயூமன் பற்றிய தகவல்களைத் தேட ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கு திடீரென ஒரு வெடி விபத்து நடக்கிறது. அப்போது இவர் அங்கு இருப்பதால் போலீஸ் இவரை அழைத்துக் கொண்டு விசாரிக்கின்றனர். அப்போது இவர் சூப்பர் ஹியூமன் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களால் அழிக்க முடியாது அது ஒரு அபார சக்தி கொண்டது என்கிறார். மேலும் அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய வருகிறது.. அப்படி என்றால் வசந்த ரவி உண்மையில் யார்.? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.…

Read More

ரத்னம் விமர்சனம்

கில்லி, பையா, என பல படங்களில் பார்த்த அதே கதை தான். நாயகியை துரத்தும் ஒரு கும்பல். நாயகியை காப்பாற்றப் போராடும் நாயகன், இந்த இரண்டு செயல்களுக்கும் பின்னால் காரணங்கள் அடங்கிய சில பின்கதைகள். இது தவிர்த்து நாயகன் விஷாலுக்கும் வில்லன் கூட்டத்திற்குமான மற்றொரு பின்கதை அடங்கியது தான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் கதை. இக்கதையில் இறுதியில் நாயகன் நாயகியை காப்பாற்றினானா…? என்று கேட்கவும் வேண்டுமா என்ன…? ஆந்திரா, தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பொழுது சில தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் நிலம் அண்டை மாநிலங்களில் மாட்டிக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளில் துவங்கும் கதை, திருப்பதி மலை மேல் செல்லும் பேருந்தை கவிழ்த்து கொள்ளை கொலை சம்பவங்கள் நிகழ்த்தும் கயவர்களைக் காட்டி, அப்படியே தமிழ்நாட்டிற்கு பயணித்து, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை சிறு வயது விஷால் காப்பாற்றி…

Read More

ஒரு நொடி விமர்சனம்

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல்லாயிரம் நொடிகளால் ஆனது. அதில் ஒரு நொடி நம் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றிப் போடும் ஆற்றல்மிக்கதாக இருக்கிறது என்கின்ற கருத்தை வலியுறுத்தும் திரைப்படமே இந்த “ஒரு நொடி” திரைப்படம். தன் கணவர் சேகரனை (எம்.எஸ்.பாஸ்கர்) காணவில்லை என்று ஒரு இரவு நேரத்தில் வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் சகுந்தலா (ஸ்ரீரஞ்சனி). அதுமட்டுமின்றி தன் கணவருக்கும் கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) –வுக்கும் இடையில் நிலப்பத்திரம் தொடர்பான பிரச்சனை இருப்பதையும் கூறி தனக்கு அவர் மீது சந்தேகம் இருக்கிறது என்று கூறுகிறார். இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன்குமார்) சேகரன் காணாமல் போன வழக்கின், முதல் சந்தேகப் பார்வையை கரிமேடு தியாகுவின் மீது வைத்து அந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். அந்த விசாரணையின் போதே மற்றொரு இளம்பெண் ஒருவரும் மர்மமான முறையில்…

Read More

ஃபைண்டர் புராஜக்ட் 1 விமர்சனம்

எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிரபராதிகளை கண்டறிந்து அவர்கள் வழக்கை மீண்டும் துப்பறிந்து உண்மையை வெளிக் கொண்டு வருவதன் மூலமாக அவர்களுக்கு விடுதலைப் பெற்றுத் தர முதுகலை குற்றவியல் பட்டதாரி மாணவர்களால் ஃபைண்டர் என்கின்ற ஒரு அமைப்பு துவங்கப்படுகிறது. அவர்கள் தங்களது முதல் வழக்காக மீனவக் குப்பத்தை சேர்ந்த பீட்டர் என்பவரின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பீட்டர் யார்..? அவர் என்ன குற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்..? அவர் வழக்கின் பின்னணியில் உள்ள சதி என்ன என்பதை பேசுவதே இந்த “ஃபைண்டர் புராஜக்ட் – 1” திரைப்படத்தின் கதை. மீனவ குப்பத்தில் தன் மகளை வருங்காலத்தில் ஆட்சியராக மாற்றிப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையுடன் வாழும் பீட்டர் என்னும் மீனவ கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருக்கிறார். தான் கடன்பட்டதை எண்ணி மீனவக்…

Read More

வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

ஐந்து வேறுவேறுவிதமான கதாபாத்திரங்களைக் கொண்டு ஹைபர் லிங்க் திரைக்கதை யுக்தியின் மூலமாக சொல்லப்பட்டிருக்கும் கதை தான் இந்த வல்லவன் வகுத்ததடா திரைப்படம்.   திருட்டை தொழிலாகக் கொண்ட இரண்டு இளைஞர்கள், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக காதலை பயன்படுத்தி ஏமாற்றும் இளம்பெண், லஞ்சப் பணத்தை கோயிலுக்கான உண்டியலில் செலுத்தச் சொல்லி வசூல் வேட்டை நடத்தும் போலீஸ் அதிகாரி, வட்டிக்கு பணம் கொடுத்து பணத்தை திரும்ப செலுத்தாதவர்களிடம் உடல் உறுப்புகளை உருவிக் கொள்ளும் பைனான்சியர், இவர்களோடு தன் குடும்பத்தையும், மருத்துவமனையில் இருக்கும் அப்பாவின் உயிரையும் காப்பாற்ற போராடும் மற்றொரு இளம்பெண். இந்த ஐவரும் வேறு வேறு சூழ்நிலைகளில் ஒருவரையொருவர் எதிர்கொள்ள அந்த சந்திப்பு அவர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை சிறப்பான திரைக்கதை உத்தியோடு பேசியிருக்கிறது ‘வல்லவன் வகுத்ததடா திரைப்படம். திருடர்களாக நடித்திருக்கும் தேஜ் சரண்ராஜ் மற்றும் ரஜின்…

Read More

ரோமியோ திரை விமர்சனம்

மலேசியாவில் பெரிய தொழிலதிபராக இருக்கும் விஜய் ஆன்டனி தனது சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறார். 35 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். இதற்கிடையே துக்க நிகழ்வு ஒன்றில் உறவுக்கார பெண் மிருணாளினி கண்ணில் பட, அப்போதே காதல் . அதேவேகத்தில் அந்த பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரியாமலலே அவள் பெற்றோரிடம் பேசி திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது. திருமணமான மறுநாளே மிருணாளினி, ‘எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. சினிமாவில் ஹீரோயின் ஆவதுதான் எனது லட்சியம்’ என்று குண்டை தூக்கிப்போட… மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மனைவியை ஹீரோயினாக வைத்து, சொந்தப் படம் தயாரிக்கிறார் விஜய் ஆன்டனி. அதோடு, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்தப் படம் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ். .ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்கும் கதையில் தன்னால் என்ன முடியுமோ…

Read More

DeAr விமர்சனம்

மேலோட்டமாக படத்தின் ட்ரைலரை மட்டும் வைத்துப் பார்த்தால் குறட்டை தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல் தான் இத்திரைப்படம் என்று தோன்றும். ஆனால் திரைப்படம் அதையும் தாண்டி குடும்பம் என்னும் அமைப்புக்குள் இருக்கும் ஆண்களின் பல்வேறுபட்ட குறைபாடுகளையும் ஓரளவிற்குப் பேசி இருக்கிறது. தீபீகாவான ஐஸ்வர்யா ராஜேஸுக்கு சிறுவயதில் இருந்தே குறட்டை விடும் பிரச்சனை இருந்து வருகிறது. இதை வெளிப்படையாக அவர் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் தெரிவிக்க, அவரின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தன் குறையை மறைத்து, பெண் பார்க்க வந்த அர்ஜூனாகிய ஜி.வியை மணமுடிக்கிறார். முதலிரவன்றே ஐஸ்வர்யாவின் குறட்டைப் பிரச்சனை வெளியே தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளுமே DeAr திரைப்படம். படத்திற்கு மிகப்பெரிய பலமே நடிகர் நடிகைகள் தேர்வு…

Read More

ஆலகாலம் – திரை விமர்சனம்

கிராமத்து ஏழைத்தாயின் ஒரே மகனான நாயகன் ஜெயகிருஷ்ணா சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். படிப்பு முடிந்ததும் தங்களது நிலை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயகிருஷ்ணாவின் தாய் ஈஸ்வரி ராவ். இதற்கிடையே ஜெயகிருஷ்ணாவின் நேர்மையான கேரக்டர் பார்த்து சக மாணவி சாந்தினி காதலாகிறார். சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக் கொள்கிறார். தாயிடம் அப்புறம் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் திருமணமும் செய்கிறார். இதன்பிறகு ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. இதனால், ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை நெகிழ்ச்சி பொங்க சொல்வது தான் இந்த ‘ஆலகாலம்’. நாயகனாக ஜெய கிருஷ்ணமூர்த்தி, கதாபாத்திரமாக மாற ஆரம்பத்தில் தடுமாறினாலும், போகப்போக கதையின் நாயகனாக தன்னை நிலைநிறுத்தி விடுகிறார். குடிக்கு அடிமையான பிறகு இவரது நடிப்பு வேறு…

Read More