டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று முறை தேதி குறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பிறப்பிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீது பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராண இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. *எனினும் தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கத்தில், குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வந்தனர். இதனால்,…
Read MoreCategory: இந்திய செய்திகள்
காணாமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது!.
விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள், மாயமான 8 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம், ஜோர்கத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக சரக்கு விமானம் கடந்த 3ம் தேதி புறப்பட்டு சென்றது. ரஷ்யா தயாரிப்பு விமானமான இது தற்போது இந்திய விமான படையில் மிக குைறந்த எண்ணிக்கையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி விமான ஊழியர்கள் 8 பேர், ராணுவத்தை சேர்ந்த 5 பேருடன் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது விபத்தில் சிக்கியதாக கருதி, தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த தேடுதல் பணியில் விமானப்படைக்கு சொந்தமான சுகோய் -30 உள்ளிட்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இந்தோ – திபெத் எல்லை படை மற்றும் உள்ளூர் போலீசார்,…
Read Moreஆந்திரா :ஜெகன்மோகன் அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்பு
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் அமைச்சரவையில் இன்று 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஆந்திராவில் நடந்துமுடிந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில் ஆந்திர முதல்வராக கடந்த 30ம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் பதவியேற்றார். இதனை தொடர்ந்து அவரது அமைச்சரவையில் பங்கேற்கும் 25 அமைச்சர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், தர்மன்ன கிருஷ்ணதாஸ் (நரசன்னபேட்டா தொகுதி), மேக்கப்பாட்டி கவுதம் ரெட்டி (ஆத்மக்கூறு) நெல்லூர், அனில் குமார் யாதவ் (நெல்லூர்), பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி (புங்கனூர்-சித்தூர் மாவட்டம்), நாராயணசாமி (கங்காதர நெல்லூர்-சித்தூர் மாவட்டம்), அஞ்சாது பாஷா கடப்பா, சங்கரநாராயண (பெனுகொண்டா) அனந்தபுரம், புக்கண்ண ராஜேந்திரநாத் (டோன்) கர்னூல், கும்மனூரு ஜெயராம் (ஆளூர்) என மொத்தம் 25 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சராக அறிவிக்கப்பட்டவர்கள் இன்று காலை…
Read Moreநீட் தேர்வு முடிவுகள் வெளியானது!
நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதியும் ஃபானி புயல், கர்நாடகாவில் ரயில் தாமதம் ஆகிய காரணங்களால் தேர்வெழுத முடியாதவர்களுக்கு 20-ஆம் தேதியும் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் அதிக மாணவர்கள் தேர்வெழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in-ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதிய மாணவர்களில் கடந்த ஆண்டு 39 புள்ளி 56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 48 புள்ளி 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக நீட் தேர்வு எழுதியவர்களில் 56 புள்ளி 27 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 74 புள்ளி 92 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 701 மதிப்பெண்களுடன்…
Read Moreமே 30ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரியுள்ளார். 17ஆவது மக்களவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வென்றுள்ளது. 16ஆவது மக்களவைக் கலைக்கப்பட்டதாக நேற்று (மே 25) குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனிலிருந்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக…
Read Moreஃபானி புயலை சிறப்பாக இந்தியா எதிர்கொண்டுள்ளது – ஐ.நா. பாராட்டு !
ஃபானி புயலை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. சபை பாராட்டு தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் நேற்று பிற்பகல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 200 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு புவனேஸ்வர் விமான நிலையமும் மூடப்பட்டது. மேலும் இன்று ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு புயல் கரையைக் கடந்த பின்னர் சூறாவளிக் காற்றும் பேய்மழையும் பெய்யத் தொடங்கியது. பஸ்கள் போன்ற கனரக வாகனங்களையே தூக்கி வீசும் வீடியோக் காட்சிகள் வெளியாகின. மேலும் கட்டிடங்கள் பல இடங்களில் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தும் மிகப்பெரிய சேதாரத்தை உருவாக்கியுள்ளன. இந்த புயலுக்கு இதுவரை 8…
Read Moreமோடி எம்.ஏ. படித்துள்ளார்!
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி எம்.ஏ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இளங்கலைப் படிப்பை 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும், முதுகலை படிப்பை 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளவர் தனக்கு 2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புடைசூழ வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 26) தனது வேட்புமனுவை சமர்பித்தார். இந்த நிலையில் மோடி வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் ரூ.2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1.41 கோடியாகவும், அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.1.1 கோடியாகவும் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளைப் பொறுத்தவரை…
Read Moreபாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!
மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 11ஆம் தேதியன்று தொடங்கவுள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 8) பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏழு கட்டமாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் 72,000 ரூபாய் வழங்குவது உட்படப் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 8) டெல்லியில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், நடைமுறையில் சாத்தியமுள்ள தேர்தல் அறிக்கையைத் தாங்கள் தயாரித்திருப்பதாகக் கூறினார். இந்த…
Read Moreகிரிமினல் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
நடக்க இருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 17வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.…
Read Moreராணுவ வீரர் படத்தை அரசியல் கட்சிகள் பயன் படுத்த தடை : தேர்தல் கமிஷன்
விமானி அபிநந்தனின் புகைப்படத்தைப் போட்டு பாஜ ஆதாயம் தேடுவதாக எழுந்த புகாரையடுத்து, அரசியல் கட்சிகள் நடத்தும் பிரசாரத்தில் ராணுவ வீரர்களின் புகைப்படம் பயன்படுத்தத் தடைவிதித்து, தேர்தல் ஆணைய செயலர் பிரமோத் குமார் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாகப் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்திய போது அவர்களை விரட்டிச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார். உலக நாடுகள் அழுத்தம் கொடுத்ததின் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, மக்களவை தேர்தலையொட்டி கட்சிகள் ஆரம்பக்கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ள நிலையில், ராணுவ வீரர்களின் நடவடிக்கையை பாஜ தனது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில், உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்…
Read More