கடைசி விவசாயி படத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கும் மாநில திரைப்பட விருதை (சிறந்த துணை நடிகை ) முழுமனதோடும் தாழ்மையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். – டாக்டர் ரேச்சல் ரெபேக்கா

வணக்கம். கடைசி விவசாயி படத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கும் மாநில திரைப்பட விருதை (சிறந்த துணை நடிகை ) முழுமனதோடும் தாழ்மையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய இந்த அங்கீகாரத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும் படக் குழுவினருக்கும் மற்றும் மாநில திரைப்பட குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது தாய் மண்ணில் இந்த அங்கீகாரம் கிடைத்தது என்னால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கும் மிகையானது. கடைசி விவசாயி போன்ற உயிரோட்டமுள்ள எதார்த்த படைப்பின் மீது பெரும் நம்பிக்கையை வைத்து உருவாக்கிய விஜய் சேதுபதி ப்ரோடக்க்ஷன், டிரைபல் ஆர்ட்ஸ் மற்றும் திரு.விஜய் சேதுபதி அவர்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். மேஜிஸ்ட்ரேட் மங்கையர்கரசி என்ற கதாப்பாத்திரத்தை என் மீது நம்பிக்கையை வைத்து கொடுத்த என் ஆசிரியர், இயக்குனர், எழுத்தாளர் எம் மணிகண்டன் அவர்களுக்கு என் சிறம்தாழ்ந்த நன்றிகள். அவருடைய தெளிவான பார்வையும்…

Read More

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை !!

தமிழக அரசு சார்பில் 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகள் வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு, 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தமிழக அரசு மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான பின்னணி இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாம் CS விருது பெற்றிருப்பது, அவரை நேசிக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து தன் தனித்துவமான பின்னணி இசை மூலம் கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ‘ஒரு இரவு’, ‘அம்புலி’ போன்ற படங்களின் மூலம் இசைத்துறையில் அடியெடுத்து…

Read More

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயரோடு டீஸரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் டிரேட்மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான Horror Adventure படமாக “பேங் பேங்” உருவாகி வருகிறது. இப்படத்திற்கு முன்னணி…

Read More

டி ராஜேந்தரின் “உயிருள்ளவரை உஷா” மீண்டும் 4k டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படுகிறது!

இப்படத்தின் ஏழு பாடல்களையும் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. டி.ராஜேந்தர் TR Digi Music என்ற புதிய இசை நிறுவனத்தை தொடங்கி, இப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறார். பிப்ரவரி மூன்றாம் தேதி டி.ஆர்.சிலம்பரசன் பிறந்தநாள். ஆறாம் தேதி சிலம்பரசன் நடித்த சிலம்பாட்டம் படம் வெளிவருகிறது. பொங்கலுக்கு வரவேண்டிய இளைய தளபதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் பிப்ரவரி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பிப்ரவரி மாதம் டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ மீண்டும் மறு வெளியீடு செய்யப்படுகிறது! தமிழகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தில் நளினி, சரிதா, கவுண்டமணி, ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், காந்திமதி, இடிச்சபுளி செல்வராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இது ஒரு வெள்ளி விழா கண்ட காதல் சித்திரம். டி ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா, பிப்ரவரி மாதம் ரீ ரிலீஸ்…

Read More

மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும்  ‘வாரணாசி’ ( VARANASI )திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

இந்திய சினிமாவில் தற்போது மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களில் ஒன்றாக, நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியின் முதல் படமாக “வாரணாசி” உருவாகி வருகிறது. Sri Durga Arts மற்றும் Showing Business நிறுவனங்களின் சார்பில்  K.L. நாராயணா மற்றும் S. S. கார்த்திகேயா இணைந்து  தயாரிக்கின்றனர்.  இந்த மாபெரும் ஆக்ஷன்–த்ரில்லர் திரைப்படத்தில், பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான ஒவ்வொரு தகவலும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பிரம்மாண்டமான க்ளிம்ப்ஸ் நிகழ்வு, ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த இந்த கிளிம்ப்ஸில், காலத்தையும்,  நில பரிமாணங்களையும் கடந்து செல்லும் காட்சித் தொகுப்பாக,  திரேதாயுகம் தொடங்கி, கி.பி. 512-ம் ஆண்டு  வாரணாசி, அதன்பின் கி.பி.…

Read More

அபிஷன் ஜீவந்த் நடிக்கும் ‘வித் லவ் ( With Love)’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ் ( With Love )’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்  தயாரித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வித் லவ் ‘ ( With Love) எனும் திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த்,  அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன்,  சரவணன், தேனி முருகன்,…

Read More

க்ரானி – விமர்சனம்…

கதை… தமிழில் பாட்டி என்ற சொல்.. ஆங்கிலத்தில் கிராண்ட் மதர்.. அது சுருக்கமாக கிரானி.. நாக ஆனந்த் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களின் மாற்று திறனாளி குழந்தைகளுடன் ஒரு பங்களா வீட்டுக்கு குடியேறுகின்றனர்.. ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள் இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை வைத்து அதில் ஆர்வம் வைத்து விவசாயம் செய்து குடும்பத்தை வழி நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அந்த வீட்டில் வடிவுக்கரசி பாட்டி தவறுதலாக வந்து விடுகிறார்.. அவர் வந்த பிறகு தான் அந்த வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.. குழந்தைகளையும் கணவன் மனைவியும் கொல்ல முயல்கிறார்.. அவர்கள் இதயத்தை எடுக்கிறார்.. இவரின் நோக்கம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த்நாக் இந்த வயதிலும் கதையின் நாயகியாக வடிவக்கரசி.. இவரின் பெயர் டைட்டில் கார்டில் வரும்போது…

Read More

கருப்பு பல்சர் – விமர்சனம்…

கதை… மேட்ரிமோனியில் பெண் பார்த்து ரேஷ்மாவை காதலிக்கிறார் தினேஷ்.. ஒரு கட்டத்தில் தன்னிடம் கருப்பு பல்சர் பைக் இருப்பதாக பொய் சொல்லி விடுகிறார். எனவே நான் உன்னிடம் கருப்பு பல்சரில் ஊர் சுற்ற வேண்டும் என காதலி வேண்டுகோள் வைக்கிறாள்.. இதனை எடுத்து உடனடியாக மன்சூரிடம் இருக்கும் கருப்பு பல்சரை செகண்ட் ஹேண்டில் விலைக்கு வாங்குகிறார் தினேஷ்.. ஆனால் அதன் பிறகு ரேஷ்மாவுடன் பைக்கில் சுற்றும்போதெல்லாம் இவருக்கு சில பிரச்சனைகள் வருகிறது.. கண் மங்கலாக தெரிகிறது விபத்து ஏற்படுகிறது.. தனியாக சுற்றினால் பிரச்சனை இல்லை.. ஒரு பெண்ணுடன் சுற்றினால் அந்த கருப்பு பல்சர் பிரச்சனை செய்கிறது.. அப்படி என்றால் என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… இப்படத்தில் தினேஷ் இரு வேடங்களில் நடித்துள்ளார்.. ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.…

Read More

அமேசான் பிரைமில் “படையாண்ட மாவீரா”

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து ஆகப்பெறும் பரபரப்போடும் விவாதங்களோடும் வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய “படையாண்ட மாவீரா” தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது. வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் “படையாண்ட மாவீரா” கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம். படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், “ரெடின்” கிங்ஸ்லி, “நிழல்கள்” ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், மன்சூரலிகான், “ஆடுகளம்” நரேன், “பாகுபலி” பிரபாகர், “வேதாளம்” கபீர், மதுசூதனராவ், தீனா தலைவாசல்” விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடித்திருக்கிறார். மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இசை…

Read More

முதல்வர், துணை முதல்வருக்கு மனம் உருகி நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன்

*பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!* உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்! வேட்டிக் கழண்டாதான் மானம் போகனும்னு அவசியமில்லே…. ஒரு கலைஞனுக்கு அந்த வருஷத்தில படமே வரலேன்னாலும்,வந்த படம் சரியாப் போகலைன்னாலும், உரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னாலும் மானம் மட்டுமில்லே ஒட்டிகிட்டே மரியாதையும் கூடவே போயிடும். 20 மாசமா மனசு கர்ப்பமாவே இருக்கு, என் இயக்கப் படம் வரலைங்கிற பாரத்தோட… இந்த அறிவிப்பு மானம் போகாம இடுக்கண் களைந்த நட்பாய் கண்களில் நீர் கோர்த்த பரவசத்தோட, சுவாசத்தை சுவாரஸ்யமா மாத்தியிருக்கு,நம்பிக்கை தசையை ஏத்தியிருக்கு, தித்திப்பை திசையெங்கும் கூட்டியிருக்கு. நன்றி சொல்ல நா வரண்டுப் போனதால , எழுதி சமாளிக்க ஏதுவான வார்த்தையை வானத்தில கண்கள் தேடிகிட்டிருக்கு. விருது பெற்ற அனைவருக்கும் என் மனமொத்தத்தையும் ஒரு பூப்பந்தாக்கி வாழ்த்துக்கள். முந்தாநாள் பொறந்து வந்த குதிரைகளோடு பந்தயத்தில்…

Read More